வெள்ளி, செப்டம்பர் 09, 2005

1000 தாமரை மொத்துகளே



வதந்திகள் உடலுக்கு நல்லது என சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். தீநடத்தையை மூட்டை கட்டவும், நட்பை வளர்க்கவும், செய்திகளை சுற்றறிக்கை அனுப்பவும் கிசுகிசுக்கள் பயன்படுகிறது என்கிறார்கள்.

ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பித்து இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆயிரம் பதிவுகளை எட்டிப் பிடித்தாச்சு. கிட்டத்தட்ட நூறாயிரம் தடவை பதிவுகள் பார்க்கப்பட்டிருக்கிறது. நானாக எழுதியது நூறாவது தேறும் (தேறுகிறதோ இல்லையோ... நிச்சயம் 'இருக்கும்' :-)

ஒரு வாரம் விடுமுறை விட்டு எழுதியதில் எவ்வளவு fallacy, sophism, ஜல்லி, ஜட்கா, கிசுகிசு என்று எண்ணிப் பார்த்தேன். நேரம் போதவில்லை. இது சரிப்படாது என்று 'பழைய குருடி; சுவற்றுக் கீரையை வழிச்சுப் போடு' என்னும் கதையாய் திரும்பி வந்துவிட்டேன்.

எழுதுவது, படிப்பது, பகிர்ந்து கொள்வது, ஒப்பேற்றுவது எல்லாமே மஜாவாகத்தான் இருக்கிறது. 'அரிப்பெடுத்தவன் கை' என்று பாரா சொல்வதை 'வலைப்பதிந்தவன் கீபோர்ட் போல' என்று மாற்றிக் கொள்ளலாம்.

103 போட உதவியவர்கள் கிட்டத்தட்ட 102வது இருப்பார்கள்.

  • சுரதா பொங்குதமிழ் உருமாற்றி, ஈ-கலப்பை என்று கணினியில் தமிழை முன்னெடுத்து செல்பவர்கள்.
  • இணையத்து இணக்கங்களை வளர்த்த தினம் ஒரு கவிதை
  • தட்டி கொட்டி ஊக்கப்படுத்திய ராயர் காபி கிளப்
  • தோளில் கைபோட்டு எழுதும் ஆசையைத் தூண்டிய புத்தகப்புழு
  • கல்லூரி நட்பையொத்த மரத்தடி
  • ஆட்டோகிராப் அனுப்பினாலும் அன்புடன் வெளியிடும் திண்ணை
  • வாரயிறுதியானால் ஏதாவது எழுதவேண்டுமே என்று எண்ண வைக்கும் தமிழோவியம்
  • பல முயற்சிகளிலும் உறுதுணையாக திசைகள்
  • தினகரன், தினமலர், தினமணி என்று இலவசமாக தமிழகத்தை உலகெங்கும் தினமும் தரும் நாளேடுகள்
  • வெப் உலகம், தட்ஸ்தமிழ், உலகத்தமிழ், அம்பலம், ஆறாம்திணை, சிஃபி, பதிவுகள், தமிழ்.நெட் போன்ற அள்ள அள்ள சங்கதிகள் கொட்டி கிடக்கும் தளங்கள்
  • அலம்பல், அலட்டல் என்று பாகுபடுத்தாமல் 'என் கடன் சேவையே' என்று இடம் கொடுத்த ப்ளாகர்
  • எனக்கு சுட்டி கொடுத்து அகங்காரைத்தை வளர்த்த சக வலைப்பதிவர்கள்
  • வெங்கட், நா கண்ணன், சந்திரவதனா, நவன், காசி, மதி, பத்ரி என நீளும் தமிழ் வலைப்பதிவு முன்னோடிகள்
  • மன்ற மையத் தலைப்புகள்
  • நியு யார்க் டைம்ஸ், கார்டியன், ஹிந்து, ப்ராவ்தா போன்ற கருத்தேடுகள்
  • கல்யாணசுந்தரம், மதுரை திட்டம், அகத்தியம், தமிழ் உலகம் போன்ற கிடங்குகள்
  • தமிழ்சினிமா.காம், ரஜினி ஃபேன்ஸ், போன்ற பொழுதுபோக்கு தலங்கள்
  • லேஸிகீக், டீகட, மைக்ரோபெர்சுவேஷன், சிவக்ரசி, டேவ் பேரி, போயிங் போயிங், அமர்தீப் சிங் போன்ற வலைப்பதிவர்கள்
  • ஸ்லேட், தி வீக், இந்தியா டுடே, அவுட்லுக் போன்றவர்களின் இணையப் பதிப்புகள்
  • என்னை வாழவைக்கும் விகடன், குமுதம், கல்கி, நக்கீரன்
  • மூளை இருப்பதாக நினைக்க வைக்க கூகிள், யாஹூ கோர்வைகள்
  • அவ்வப்போது படித்து, கருத்து சொல்லாமல், சிரித்துவிட்டுப் போகும் மனைவி
  • 'நீ கம்ப்யூட்டரில் என்ன பண்ணுறே' என்று சீரியஸாக வினவும் மகள்

    லிஸ்ட் போட்டாலே மறப்பது சகஜம். (தமிழ்மணம், வலைப்பூ போல) குறிப்பிடாமல் விட்டவர்கள் மேல் உரிமை அதிகம்.

    அனைவருக்கும் நன்றி!!!

    விடாது .... :-))





    தொட்டுக்க ஒரு நியுஸ் :: பெண்களை கேலி - கிண்டல் செய்து பாடல், வாலி - பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு!

  • 14 கருத்துகள்:

    பாராட்டுக்கள்பாலா

    Vaasagarkalai marunthuteeyeale kanna! ;)

    .:dYNo:.

    ஆயிரமா?
    வாழ்த்துக்கள் பாபா.பல்லாயிரம் பதிவு போட்டு பல்லாண்டு வாழ்க

    போச்சு. நீங்களுமா, ஆயிரம் பதிவானதென்று ஆயிரத்தோராவது பதிவுபோட்டுக்கொண்டு...?

    ;-)

    உங்களுக்குப் போட்ட பாட்டு வரவில்லையே :-(

    http://www.musicindiaonline.com/p/x/cqOgNG4ar9NvwrOupt7D/

    ஆயிரம் பதிவுகளா??????????????

    வாழ்த்துக்கள் பாலா!!!!!!!!!

    // ஆயிரம் பதிவுகளை எட்டிப் பிடித்தாச்சு. கிட்டத்தட்ட நூறாயிரம் தடவை பதிவுகள் பார்க்கப்பட்டிருக்கிறது.
    //
    அடேங்கப்பா! வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்..

    பத்மா, ஈழநாதன், சுரேஷ், குழலி, டிடி... நன்றி.

    டைனோ, மறந்ததற்கு பிராயசித்தமாக நேற்று 'மெம்ண்டோ'வை (கஜினிக்காக?) மீண்டும் பார்த்துவிட்டேன் ;-)

    பெயரீல் :-) 'ஆயிரம் நிலவே வா', 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 'சுகமோ ஆயிரம் உறவோ காவியம்' என்று சினிமாவாக யோசித்ததில் சிக்கியது.

    //'ஆயிரம் நிலவே வா', 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 'சுகமோ ஆயிரம் உறவோ காவியம்' என்று சினிமாவாக யோசித்ததில் சிக்கியது//

    ஆயிரம் ரூபாய்.

    காதல் கடுதாசிக்கி, harvard.jpg ஏ தேவலை :-)

    அடுத்து ஏதாவது உருப்படியா மடல் வரட்டும்... மாத்திடலாம் :->

    ஆயிரம் பதிவுகள். என்னால் இதை யோசிக்கக்கூட முடியாது. வாழ்த்துக்கள்.

    சரி இந்தாங என்னோட மொத்து ..சீ.. வாழ்த்து

    வாழ்த்துக்கள்.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு