புதன், செப்டம்பர் 07, 2005

லூஸியானா - 1927

ராண்டி நியுமானின் கவிதை பாஸ்டன் க்ளோபில் படிக்கக் கிடைத்தது. தற்போதைய காத்ரீனா சோகம் போலவே 1927-இல் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களை அலைக்கழித்திருக்கிறது. ஆறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அரசியல் சூறாவளிக்கு வித்திட்ட புயல். அதுவரை குடியரசு கட்சி கோலோச்சிய தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சுதந்திர கட்சிக்கு மாற்றிட வைத்தது.

சரித்திரம் மீண்டும் நிகழுமா?


நன்றி : ராண்டி நியுமான்

இங்கு காற்று
மாறி வீசத் தொடங்கிவிட்டது
வடக்கிலிருந்து கிடுகிடுத்த மேகம்
உத்தரத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது

ஆறடிச்சுவராய் நீரோடும் நகரவீதிகள்
பகல் பொழுதும் பொங்குகிறது
பாதிச்சாமத்திலும் பொங்குகிறது

சிலர் கடற்பெருக்கோடு போயினர்
சிலர் கடைத்தேறினர்

நதியின் துந்துமியாட்டம்
புலத்தை நிர்மூலமாக்கிட
ஆறடிச்சுவராய் நீரோடும் நகரவீதிகள்

லூஸியானா, லூஸியானா
உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்
உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்

சனாதிபதி வந்தார் பொட்டி வண்டியிலே
கையில் நோட்டோடு
பொடுகு இரட்டைநாடி ஆளும் வந்தார்

சனாதிபதி சொல்வார்
'குறுகிய குண்டா
கூச்சமாக இல்லையா
பித்தன் பொறுக்கித்தின்னியின்
நிலத்தை
நதிப் போக்கடித்திருக்கிறதே'

லூஸியானா, லூஸியானா
உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்
உன்னை வெளுத்து ஒதுக்குகிறார்கள்

-பாலாஜி
பாஸ்டன்

5 கருத்துகள்:

அண்ணே,
ராண்டி நியூமனினது 1927 இனைப் பற்றி மிஸிஸிஸிப்பி வெள்ளம் குறித்து 1974 இலே எழுதப்பட்ட பாடல். [இந்தவெள்ளமே ஏற்கனவே அடிமைத்தனத்திலேயிருந்த தென்மாநிலமக்களை வடக்கு நோக்கிப் பெயர முனைப்பினையும் நிர்ப்பந்தித்திருந்தது; கத்ரினா புயல்போல, தெற்கின் சமூகநிலைமையினை மிகவும் வெளிப்படையாகக் காட்டி, மாற்றத்தினையும் கொண்டுவந்த வெள்ளம் அது. Fatal Flood கிடைப்பின் பாருங்கள்]

ஆனால், இந்த வெள்ளம் குறித்த பாதிப்போடான பாடல்கள் 1930 களின் ஆபிரிக்க-அமெரிக்கரின் பாடல்களாக இருக்கின்றன. உதாரணத்துக்கு

mozhi peyarppu nanRaka irukkiRathu. (ungkaLutayathuthaan enRu ninaikkiREn) thanks!
(sorry for the tanglish, not able to type in tamil)

பாலாஜி, நல்ல கவிதை, நல்ல மொழிபெயர்ப்பு நன்றி.

'நதியின் துந்துமியாட்டம்
புலத்தை நிர்மூலமாக்கிட
ஆறடிச்சுவராய் நீரோடும் நகரவீதிகள்' என்பது அருமை.

ஒரு இடத்தில் இடறுகிறது, மூலத்தைப் படித்துப் புரிந்து கொண்டேன்.

மூலத்தில்

"President Coolidge came down in a railroad train

With a little fat man with a note-pad in his hand

The president say, ''Little fat man isn't it a shame

What the river has done to this poor crackers land."

இங்கு 'little fat man' இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி வருகிறது. ஆதலால் பொருள் பொருத்தம் தெளிவாகிறது (யாரிடம் சொல்கிறார் என்று). நீங்களும் 'இரட்டை நாடி', 'குண்டன்' என இரு பதங்களைப் பயன்படுத்தாது ஒரே பதத்தைப் பயன்படுத்தி இருந்தால், சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும், 'isn't it a shame
What the river has done to this poor crackers land' என்பதன் மொழிபெயர்ப்பில் மூலத்தில் உள்ள மெல்லிய பரிகாச தொனி வர வேண்டும். shame என்பது கூச்சம், வெட்கம் என்ற அர்த்தத்தில் வரவில்லை, ஒரு சிறிய தவறு என்ற அர்த்தத்தில் வருகிறது. ஒரு பெரும் துயரத்தைப் பார்த்து, சாதாரணமாக 'it's a shame' என்று சொல்லப்படுவதாக கவிஞர் சொல்கிறார் என்று எனக்குப் படுகிறது.

பார்பரா புஷ் ::
Bush comment raises eyebrows: "Barbara Bush, who accompanied the former presidents on a tour of the Astrodome complex on Monday, said the relocation to Houston was "working very well" for some of the poor people forced out of New Orleans.

She said: "What I'm hearing, which is sort of scary, is they all want to stay in Texas. Everyone is so overwhelmed by the hospitality.

"And so many of the people in the arena here, you know, were underprivileged anyway, so this is working very well for them." "

நன்றி பெயரிலி, ரோசா.

மிஸிஸிஸிப்பி வெள்ளம் என்று கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்தேன் (A song and a tragedy) ஆனால், மற்ற விவரங்கள் தெரியாதது. நன்றி.

ஸ்ரீகாந்த், அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன்; நன்றிகள்!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு