செவ்வாய், செப்டம்பர் 06, 2005

கெட்ட வே(லை)ளை

நகைச்சுவை எழுத்தாளர் தேவன் நாளை வந்திருந்தார். அவருக்கு பிறந்தநாள் செப்டம்பர் எட்டு. (ஜூனூன் வசனங்கள் இப்போது சீரியல் norm).

'ஹேப்பி பர்த்டே' என்று வாழ்த்து எழுதத் துவங்கினேன்.

'ஏண்டா அபிஷ்டு! தனித் தமிழ் தண்ணியாய் ஓடும் வலையில் ஹேப்பியா பர்த்டேயா.... எல்லாருமா சேர்ந்து 'தேவனு'க்கு தார் பூசுவோம் என்று கிளம்ப வைக்கப் போகிறாயா? என்னுடைய பர்த்டேவை சாட் பேர்த்டே ஆக்கப் போகிறாயா?' என்று கடிந்து கொண்டார்.

தமிழ்நாடே பாப்ரி, கச்சோரி, தஹி என்று வித விதமாய் சாட் சாப்பிடுகிறது. இணையமே எம்.எஸ்.என், யாஹு, எயிம், நேற்று பாப்-அப் ஆன ஜி-டாக் என்று சாட்டுகிறது. சாட் பிறந்தநாளாய் ஆனால் என்ன என்று நினைத்தேன்.

அமுதசுரபி போட்டி முடிவுகள் வந்தது. விநாயகர் ஹேப்பி பர்த்டே கொழுக்கட்டைகள் போல் நூற்றியெட்டுக்கு மேல் கருத்துப் பூரணம் நிறைந்த வெள்ளை மாவு நகைச்சுவை மூடிய பதார்த்தங்கள் இருந்திருக்கிறது. ஆனால், தரம், மணம், குணம், குங்குமம், ஹார்லிக்ஸ், டீ ரோஸஸ், த்ரீ ஷாட் லாகிரி சல்பேட்டா எதுவும் நிறைந்திருக்காமல் உதட்டைப் பிதுக்க வைத்திருக்கிறது.

கெட்ட வேளை...

ஒழுங்காக என்னைப் போன்ற புத்திமான்களும் அறிவுஜீவிகளும் நகைச்சுவை தக்காளி ரசம் வழிய வழியப் பொங்கும் சிகாமணிகளும் ஒரிஜினல் எக்ஸ்போர்ட் க்வாலிடி தரத்தில் காமெடி கொடுக்கும் எழுத்தாளப் பெருந்தகைகளும் கலந்து கொண்டிருந்தால் பத்துக்கு மேற்பட்டோர் சிறப்பாக எழுதியிருப்பதால் எல்லாருக்கும் மூன்று லட்சம் காசுகள் கொடுத்திருக்க வேண்டியிருக்கும்.

கெட்ட வேளை... நடக்கவில்லை.

தேவன் இறந்ததே கெட்ட வேளை. இப்போது நானும் போட்டிக்காக சிரிக்கவில்லை.

ஏன் இந்த மாதிரி ஆகிப் போனது என்பதை நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். இப்பொழுதுதான் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக் கூறும் தருணம். இது கெட்ட தருணத்துக்கான தருணம்.

எல்லோருக்கும் இப்போது மேற்கத்திய மூளைச் சலவை நடக்கிறது. 'சந்திரமுகி'யில் கதாகிழவன் பாடுவது போல் 'துணி தோய்க்கும் தோழன்தான் இல்லையேல் வெளுக்குமா அழுக்கு?' என்பது கெட்ட பிரயோகம்.

சஹாராவில் ஒன்றுக்குப் போனால் வாஷிங் மெஷின் கொடுப்பார்கள்.

நான் சஹாரா படத்தை சொல்லவில்லை. பெனலோப் க்ரூய்ஸ் கண்ணாடி கழட்டுவதைப் பார்த்தாலே எவருக்கும் ஒன்றுக்கு உள்ளடங்கி ஜீவசமாதி ஆகி வாயில் ஜொள்ளாக வெளியேறிப் போய்விடுமே...

சஹாரா பாலைவனத்தையும் சொல்லவில்லை. அப்புறம் கூகிள் எர்த்தை முட(டு)க்கி, தேடித் தெளியும் போது நமது கணினி தொங்கி நூடில்ஸாகி இருக்கும்.

சஹாரா ஒன் எனப்படும் தொலைக்காட்சியில் பினாகா (இது முக்கியம்; பழசுகளுக்கு க்ளோஸ்-அப் தெரிய வாய்ப்பில்லை; கோபால் பற்பசை சீரியஸ் கட்டுரைகளுக்கும், பினாகா காமெடி கட்டுரைக்கும் அவசியம்; டெமொக்ரட்டுக்கு புஷ் எவ்வளவு அவசியமோ, புஷ்ஷுக்கு அல்-க்வெய்தா எவ்வளவு அவசியமோ... அம்புட்டு).

எந்த கெட்ட வேளையில் இருந்தேன்?

'பூத்' படத்தின் ஆவியின் பெயரைச் சொன்னால் உங்களுக்கு பினாகா ... சாரி... தூய தமிழ் தாரீயக்காரர்களுக்காக மன்னிக்க... சலவை முடுக்கான் வந்து சேரும்.

நகைச்சுவையில் ஆர்ட் புஷ்வல்ட், பிஜி வோட்ஹவுஸ் (ரெண்டு மூணு மேற்கத்தியப் பெயர்கள் எப்போதுமே சொல்லுவது வெற்றிக்காயை மடிக்கணினியில் மின்னஞ்சலும்) மேற்கத்திய சலவை. சலவைக்கு உள்ளூர் லாண்டிரிக்காரனைப் பயன்படுத்தாமல் அவனுடைய அழியா இன்ஷியல் குறிப்புகளை அங்கலாய்த்து அப்படியே கெல்வினேட்டர் பெங்குயின்கள் (அங்கிலத்தில் தமிழைத் தட்டச்சும் உலகத்தில் கேட்டிருந்தால் பெங்குயினுக்கு தமிழ்ப்பதம் கிடைத்திருக்கும்... டுடூ: பெங்குயினுக்கு தமிழ் என்ன? பென் என்றால் பேனா, அப்படியே தமிழ் வந்தால் நங்கை, மங்கை; குயின் என்றால் ஒருவித மார்பக கச்சை (கச்சை சரித்திர நகைச்சுவை கட்டுரைகளில் க்ளிக் ஆகும்) அல்லது மஹாராணி) வெளியூர்க்காரனுக்கு கை கட்டி சேவகம் செய்கிறதே என்று வருத்தப்பட்டல் கட்டுரை ரெடி....

Develop செய்கிற நேரத்தில் பாரிஸ் டவர் மேல போயிட்டு டெலிவரி பண்ணுகிற நேரத்துக்கு வந்தால், அவுட்சோர்ஸ்தான் செய்ய வேண்டும் என்பது போல், கட்டுரையை எழுதிக் கொடுக்கக் கூட சகாய விலையில் இந்தியர்கள் கிடைப்பார்களா என்று 'சேது' பாலா போல விளம்பரம் செய்யவும் ஆசையாகத்தான் இருக்கிறது.

இன்னொரு போட்டி வராமலா போய்விடப் போகிறது! க்ரெய்க்லிஸ்ட்டா, ஈபே-யா என்பதில்தான் குழப்பம்.

ஆனால், பொலிடிகலி கரெக்ட் ஆக இருக்க நினைத்து அய்யரு கதையில் பட்சி, வேதா என்றோ, அப்துல்லா குடும்பத்தில் பாலாஜி, அண்ணாமலை என்றோ கதாபாத்திரங்கள் உலவ விடாமல் எடிட் செய்ய அமெரிக்க ப்ராஜெக்ட் மேனஜர்கள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

அடுத்த முறையாவது கெட்ட வேளை நீடிக்காமல் தேவனுக்கு ஹேப்பி பர்த்டேயாக அனைத்து பரிசும் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

-பாலாஜி
பாஸ்டன்

2 கருத்துகள்:

ஒரு வேளை அமுதசுரபி, நகைச்சுவைக் கட்டுரைக்குப் பதிலாக, செயமோகன், எஸ்.ரா டைப் கட்டுரை என்று அறிவித்திருந்தால், வலைப்பதிவு உலகத்திலே போட்டி பலமாக இருந்திருக்கும்.

கிடக்கட்டும்...

வலப்பக்கம் இருக்கும் harvard.jpg படத்துக்காக எத்தனை பேரிடம் இருந்து தர்ம அடி வாங்கினீர்?

---படத்துக்காக எத்தனை பேரிடம் இருந்து தர்ம அடி வாங்கினீர்---

படத்தை முதல் வேலையாக மாற்ற வேண்டும் ;-) அடி வாங்கிக் கொடுக்காமல் ஓய மாட்டீர் போலத் தெரியுது :P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு