உச்சநீதிமன்ற நியமன நீதிபதி வாபஸ்
அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு ஹாரியத் மியர்ஸை (Harriet Miers) நியமனம் செய்திருந்தார் ஜார்ஜ் புஷ். எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்களிடமிருந்து வழக்கமான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தன்னுடைய கட்சியான குடியரசு கட்சி செனேட்டர்களிடமிருந்தும், கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.
என்று குழப்பமாக பல பரிமாணங்கள் கொடுத்தார்கள்.
ஸ்ரீகாந்த் மீனாக்ஷி எழுதியது போல் தன்னுடைய வலது கை கார்ல் ரோவுக்கும் இடது கை டிக் சேனிக்கும், இடது கையின் வலது கை லிப்பிக்கும் தொல்லைகள் பெருகும் இந்த வேளையில், நீதிபதி தேர்விலும் தலைவலியை உண்டாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.
ஆலன் க்ரீன்ஸ்பானுக்கு மாற்றாக சமீபத்திய நியமனமான பென் பெர்னான்கேவை (Ben Bernanke) இன்னொரு உதாரணமாக காட்டலாம். குடியரசு கட்சி சார்புடையவர்; ஆனால், புஷ்ஷின் ஆதரவாளர் அல்ல; கென்னடி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டும் திறமைசாலி.
எறும்பு ஊற கல்லும் தேயும்.
அதிகார போதையில் மிதந்தவர்கள் தரையில் இறங்க முயற்சிப்பது மகிழ்ச்சியான விஷயம்!
தமிழ் | Tamil | தமிழ்ப்பதிவுகள்
He probably wanted to leave a "legacy" of replacing a women with a women.
I wouldn't be surprised if he had nominated Laura :)
சொன்னது… 10/27/2005 08:01:00 AM
என் கேள்வி என்னவென்றால், இப்போது புஷ்ஷை flip-flopper என்று சொல்லலாமா என்பது தான்...:-)
இந்த நியமனத் தோல்வியை ஈடுகட்டவும், வரப்போகும் வழக்குப் புயல்களுக்கு எதிராக் ஆதரவு திரட்டவும், ஒரு மகா கன்ஸர்வேட்டிவை புஷ் தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறேன்...
சொன்னது… 10/27/2005 09:16:00 AM
---புஷ்ஷை flip-flopper ---
அவரை எப்படி சொல்ல முடியும் ;-) ஹாரியத்தானே பின்வாங்கியிருக்கிறார் :P
-- wouldn't be surprised if he had nominated Laura ---
ஜென்னா (Jenna) அல்லது பார்பராவை (Barbara) நியமிக்காத வரை சரிதான் :-))
சொன்னது… 10/27/2005 02:12:00 PM
கருத்துரையிடுக