புதன், அக்டோபர் 26, 2005

1105 அஸினின் வளைவுகள்



Asinதசாவதார கமலின் நாயகி அஸினுக்கு பிறந்த நாள். வாழ்த்த எனக்கு வயசு போதாது.

அண்ணன் ரஜினியோடும் மருமகன் தனுஷுடனும் ஜோடி கட்டும் ஷ்ரேயா, மலையாள இறக்குமதிகள் நயன் தாரா, நவ்யா நாயர், கோபிகா, வருங்கால சிம்ரன் நமீதா, அந்தக் கால ஜோதிகா போன்ற எல்லோரையும் முந்த எல்லாம்வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்.



இந்தப் பதிவின் தலைப்பை தேடுவோருக்காக: asin(x) வளைவுகளும் 1105 ADயும்
அஸினூவில் (Asinou) பைசாண்டைன் தேவாலயம் இருக்கிறது. யுனெஸ்கோவின் தொன்மையான உலக கலாசார இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிகிடாரிக்கு (Nikitari) முன்று மைல் தெற்காக, ட்றுடோஸ் (Troodos) மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. அஸினூ என்பது கிரேக்கத்தில் அஸின் (Asine) என்பதின் மரூஉ. கிறித்துவுக்கு முந்தைய பதினொன்றாம் நூற்றாண்டில் அர்கோலிஸ் (Argolis) நகரத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் அஸின் அமைக்கப்பட்டது.

Asin Curvesபனிரெண்டாம் நூற்றாண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. Byzantine mural ஓவியங்களின் காலத்தை 12 முதல் 17ஆம் நூற்றாண்டாக நிர்ணயித்துள்ளார்கள்.

தென்மேற்கு பகுதியில் காணப்பட்ட குறிப்பில் இருந்து:
"the church of the holy mother of God was painted through the donation and great desire of Nicephoros Magistros the Strong, when Alexios Comnenos was Emperor in the year 6614, indiction 14".

இதன் மூலம் தேவாலயம் கட்டப்பட்ட காலத்தை 1099க்கு பிறகு ஆனால் 1105க்க்ள் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.



| |

13 கருத்துகள்:

யோவ்..
. நல்லா திட்டலாம்னா..

ஹி..ஹி
2 போட்டோ போட்டு தப்பிச்சுடீங்க..

Thank you folks... The number of feedbacks she is getting is amazing :-)))

http://www.galatta.com/guestbook/viewgb.asp?site=asinonline.com

அஸின் பிறந்தநாள் தகவலைவிட,
உங்கள் ஆசைக்கு(மன்றாடலுக்கு ?!) அஸின் அதிர்ச்சியான எதிர்வினை காண்பிப்பதுபோல உள்ள படம் அழகு.
:)

இது மட்டும் என்ன தமிழ் நாட்டு சரக்கா? மலையாள இறக்குமதில ஒன்னுதானே

Figure-களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...

---தமிழ் நாட்டு சரக்கா---

அடுத்து கோபிகாவுக்கு பிறந்த நாள் வரும்போது மலையாள் இறக்குமதிகள் நயன் தாரா, நவ்யா நாயர், கோபிகா, 'தவமாய் தவமிருந்து' நாயகி, இன்ன பிறரிடமிருந்து முந்த எல்லாம்வல்ல இறைவனிடம் மன்றாடி இன்னொரு பதிவு இட்டுவிடுகிறேன் ;-))

---Figure-களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு---

குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை
என்பது போல்
அஸினுக்கு மூன்று வருடம்; நயன் தாராவுக்கு தலைவர் படம் :P

Bo.Ba,

Sure.. Asin is the best heroine for Kamal in the current list of heroines.

watch her out in Gajini, Maja, Sivakasi. She sure will cross few crores soon.

---Figure-களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு---

சொன்னது நாந்தே..

Bala,
ஐஸ் கூட தான் இன்னும் தலைவரோட நடிக்கலை..
அதுக்காக பிரசாந்த் தலைவரைவிட பெரிய ஆளா..

ஐயோ.. சரளமா வருதே.. கமல் சொல்ற மாதிரி.. ("பட்டத்துக்கு கூட தான் வால் இருக்கு.. அதுக்காக குரங்கு பறக்குமா..")

---சொன்னது நாந்தே---

வக்கணையா நாந்தான் என்று சொல்றீரு... எவரு என்றுதான் வெலங்க மாட்டேங்குது :-)

---ஐஸ் கூட தான் இன்னும் தலைவரோட நடிக்கலை---

அது ஆப்பிள் ;-)
தலைவர் ஆரஞ்சு அல்ல :P
ஆதவன் :-))

---She sure will cross few crores soon. ----

மார்கெட் இருக்கிறபோதே அள்ள வேண்டியதுதான்

//தசாவதார கமலின் நாயகி அஸினுக்கு பிறந்த நாள். வாழ்த்த எனக்கு வயசு போதாது.//
SRI Devi - காலத்து ஆளுங்களுக்கு வயது போததாது தான்

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா - நடிகைகள் ஏன் திடீரென்று காணாமல் போகிறார்கள் ?

'மார்க்கட்டு' சரிவதால் என்று 'புள்ளி' விபரம் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

இது சுஜாதா சொன்னது அல்ல

கமர்கட்டு சாப்பிடுகிற என்னிடம் சொல்லுறீரே...

---SRI Devi - காலத்து ஆளுங்களுக்கு---

பழச மறக்கறவன் இல்லப்பா நானு ;-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு