செவ்வாய், அக்டோபர் 25, 2005

நுட்பச்சிதறல்

நுட்பமான பதிவு எழுதுவது எப்படி என்று முகமூடியும் என்னைப் போன்றோரும் கோனார் உரைத்திருந்தோம். இந்தப் பதிவு தொழில் நுட்பங்கள் குறித்த சில பகிர்தல்கள் கொண்டது.

1. செய்தியோடை உகப்பம்

உங்கள் செய்தியோடையை (RSS) ஒரு சொடுக்கில் 'என்னுடைய யாஹூ', 'ரோஜோ', 'ப்ளாக்லைன்ஸ்' போன்ற பல இடங்களில் சேர்த்து விடும் உகப்பைக் கொடுக்கலாம். வழிமுறைகள் க்ரிஸ் செர்ரியின் வலையகத்தில் கிடைக்கிறது.

2. தமிழ்ப்பதிவுகளைத் தேடுவதற்கு technorati மற்றும் கூகிள் என்று இரண்டு வழிகள் சொல்கிறார்கள். பலரும் பயன்படுத்துவதற்கு kinjaவும் நேர்த்தியாக இருக்கிறது.

3. ஆங்கிலப் பதிவுகளை அலசி ஆராய்வதற்கு குறியீடு தவிர ஏற்கனவே எழுதியது போல் பல நுட்பங்கள் புகழ் பெற்றிருக்கிறது.

எனக்குப் பிடித்த ஒரு சில...


  • டெக்னாலஜி சம்பந்தமான அனைத்து ஓடைகளையும் அலசி ஆராய்ந்து எளிதாக வழங்கும் Memeorandum

  • கிஞ்சாவைப் போலவே சில காலமாக மிகவும் பயன்படும் del.icio.us

  • புத்தகக்குறிகள், வலைப்பதிவுகள், செய்தியோடைகள், வாசகரின் விருப்பங்கள் என்று தொகுத்துப் பார்க்க உதவும் digg

  • வலைப்பயனர்களிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்து ஜனநாயக முறையை முன்னிறுத்தும் reddit

  • பங்குச்சந்தையோடு உறவாடுபவர்களுக்கு சி.என்.பி.சி தொலைக்காட்சியின் வண்ணமயமான ஜிகினா பின்னணி செய்திகள் பரிச்சயமாக இருக்கும். அதே போன்று வலைப்பதிவில் அடிபடும் செய்திகளை newsmap காட்டுகிறது.

  • ARS என்று நடிகர் அப்பா வேடங்களிலும், வர்த்தக மனிதராகவும், பணக்காரராகவும் திரைப்படங்களில் நடிப்பார். Article Ranking System என்னும் தரப்படுத்தலைக் கொண்டு Blogniscient செயல்படுகிறது. புதிய, படிக்க வேண்டிய பதிவுகளைத் தெரிந்து கொள்ள உதவும்.

4. வலை நுட்பங்களைக் கண்டு போரடித்தவர்களுக்காக: தேஸி வீடியோ

5. வலை நுட்பங்களைக் கண்டு போரடிக்காதவர்களுக்காக: இந்த வார பிசி சஞ்சிகை Clipmarks மற்றும் Jeteye போன்ற இணையக்குறி சேமிப்பு நிரலிகளை அலசுகிறது.


| |

3 கருத்துகள்:

இவை எல்லாவற்றையும் செய்து கெட்டபேர் எடுப்பதைவிட எழுதாமல் கிடப்பதே இலக்கியவாதி என்ற பெயர் எடுக்க சிறந்த வழி! ஹிஹிஹி

உங்கள் முத்தமிழ் மன்றம் (யாஹூ குழுமம்) என்ன ஆச்சு!? ரொம்ப நாளாக புத்தகங்கள் எதுவுமே வருவதில்லையே... மீண்டும் துவங்கும் எண்ணம் இருக்கிறதா?

Oru nutpa kELvi:
How to you manage to get listed in Technorati without manually pinging? :) I've been trying all possibilities (notifying weblogs.com, activating FeedBurner's Pingshot, etc etc.) without success. Many taggers are forgetting / unaware of pinging and as a result, dont get listed. Wish there could be an 'auto-ping' solution.

Your Kinja digest is impressive, except that it is again a 'managed' solution with control points.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு