புதன், அக்டோபர் 05, 2005

Hundred best novels of the century

சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையில் Darkness at Noon by Arthur Koestler படிக்க ஆரம்பித்தேன். பின் அட்டையில் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாக கருதப்படுவதாக சொல்லியிருந்தார்கள்.

Dr. Daniel J. Boorstin, A.S. Byatt, Christopher Cerf, Shelby Foote, Vartan Gregorian, Edmund Morris, John Richardson, Arthur Schlessinger, Jr., William Styron, and Gore Vidal. ஆகியோர் கொண்ட குழு தேர்ந்தெடுத்த நூறு நாவல்களின் பட்டியல் இணையத்தில் கிடைத்தது.

சல்மான் ருஷ்டி #90 ஆகவும் , நய்பால் #72 & #83 ஆகவும், இருக்கிறார்கள். எனக்குப் பரிச்சயமான வழக்கமான பெயர்களான 'லோலிதா', டி எச் லாரென்ஸ், ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா வுல்ஃப், 'எ பாஸேஜ் டு இந்தியா', ஈ எம் ஃபாஸ்டர், ஜோஸப் கான்ராட், போன்ற சிலரையாவது பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

வாசகர்களைக் கொண்டு தேர்ந்தெடுப்பதை விட தேர்வுக்குழுவைக் கொண்டு பட்டியலிடுவது படிக்க வேண்டிய இலக்கியங்களை அடையாளங்காட்டும். இட ஒதுக்கீடாக தலித், பெண்ணியம், பின் நவீனத்துவம் என்று அனைத்து சாராருக்கும் இடம் கிடைக்காமல் அபாயங்களைத் தடுக்கலாம்.

ஏற்கனவே ஜெயமோகன், சுயேச்சையாக இந்த மாதிரி தலை பத்து நாவல் பட்டியலை திண்ணையில் வெளியிட்டிருக்கிறார். இரா. முருகன் கொடுத்த பட்டியலில் கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளும் அடக்கம். பா ராகவன், எஸ் இராமகிருஷ்ணன் போன்றவர்களின் தேர்வுகளில் உலக இலக்கியங்களும் இடம்பெற்றிருந்தது. கணையாழியில் க நா சு-வும் இன்னும் சிலரும் பட்டியல்களை ரெகுலராக கொடுத்து வந்திருக்கிறார்கள்.

தமிழ் நாவல்களை மட்டும் விருப்பு வெறுப்பின்றி பட்டியலிட இந்த மாதிரி who is who கொண்ட தேர்வுக்குழு அமைத்தால், இடம்பெறுபவர்கள் யாராக இருப்பார்கள்?

என்னுடைய தேர்வுக்குழு உறுப்பினர்கள்:

1. ஆ.மாதவன்
2. சுந்தர ராமசாமி
3. ஜெயமோகன்
4. அசோகமித்திரன்
5. கி ராஜநாராயணன்
6. சுஜாதா
7. உமா மஹேஸ்வரி
8. ராஜ்கௌதமன்
9. பாவண்ணன்
10. எம் ஏ நுஃமான்

விடுபட்டவர்களையும் பொருத்தமில்லாதவர்களையும் உங்கள் பரிந்துரைகளையும் சொல்லலாம்...

குறிப்பு 1: ஜெயமோகனின் பட்டியல்:

குறிப்பு 2: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு :: ஜெயமோகன்.

8 கருத்துகள்:

ayn rand not in the list?///

One more for the Tamil group:

Indira Parthasarathy

இவர்கள் எல்லாம் சரி.
ஆனால் இவர்களால் இவர்கள் எழுதிய படைப்புகளை ஒதுக்கிவிட்டு ஒரு பட்டியல் தர இயலுமா?

கதைப்பட்டியலுக்கு எழுத்தாளர் தான் சரியா?

கதை எழுதத் தெரிந்தவர் தான் பட்டியலிட முடியுமா?

திரைப்பட இயக்குனர்கள் பலர் நல்ல வாசிப்பு அனுபவம் உடையவர்கள்.

என் பார்வையில் திரைப்பட இயக்குனர்கள் கதைப்பட்டியலும், எழுத்தாளர்கள் ஒரு சினிமாப் பட்டியலும் தயாரித்தால் புறமெய்மை காக்கப்படும்.

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

Hi Chameleon,

To answer your first question, yes, they can and they have done that-except Jeyamohan and it stirred a big controversy, but today, JM may change that list.

I agree cine professionals are very educative, but they are not a full time story writers(well I am talking in the scale of Asokamithiran, JM etc.) who can identify the ones that is important to the literature. Hence, they may not be the right people to identify(I know I am not explaining my view in detail, but due to space constraint, I stop here).

My thoughts...

Raj

Dear Raj,

ya. I agree that they have done that but based on our bala's list if they come closer for such kind of work, jeyamohan may select a work of sujatha and sujatha may select a work of another writer in this list.

:))

I believe a good reader can identify a good writer or a good book. In that line only I recommend cine directors to do the job.

நன்றி Chameleon & ராஜ்.
----கதைப்பட்டியலுக்கு எழுத்தாளர் தான் சரியா----

'பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ' என்று பாடியது போல், கொல்லங்குடியிலேயே ஊசி விற்பவர் நல்ல எழுத்தாளராகத்தானே இருக்க வேண்டும்?

கதைகளை தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், கட்டுரைத் தொகுதிகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குத்தான் அதிக சங்கடம். அறிவியல், விஞ்ஞானம், தத்துவம், மனவியல், பெரியாரிஸம், பெண்ணியம் என்று பல கோட்பாடுகள்; பிரிவுகள். சங்க இலக்கியம், உளவியல் போன்றவற்றில் இருக்கும் புனைவிற்கு இடம் உண்டா? கொள்கைகளுடன் முரண்பட்டவர்கள், சர்ச்சைக்குண்டான பதிவுகள், சகாப்தம் வாரியாக சரித்திரம், கலை விமர்சனம், விளையாட்டு குறித்த உடனடி ரிப்போர்டின் சமகால முக்கியத்துவம் என்று பல விவாதங்கள் இருக்கும்.

கதைகளை தேர்ந்தெடுப்பது எளிதுதான்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு