வெள்ளி, நவம்பர் 04, 2005

மலரும் ஆலோசனைகள்

:: நினைவலை, நனவோடை, மலரும் நினைவுகள், 'அந்த நாள் ஞாபகம்' என்று பல பெயரில் அழைத்தாலும், வாழ்ந்த காலத்தை அசை போடுதல் மிகவும் விருப்பமான விஷயம். நிகழ்காலத்தை விட்டுவிட்டு, இனிமையான பழங்காலத்திற்கு ஓடிப் போக முடியும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கதையை பகிர முடியும். தனக்கு மட்டும் உரியதான அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்ல முடிகிறது. எல்லாவற்றையும் விட நீங்கள் வாழ்ந்த கணங்களில் தவறவிட்டதை கண்டெடுக்க 'டயரி' உதவுகிறது.

எல்லோரும் அலையடித்தாலும், போரடிக்காமல் விரும்பிப் படிக்க வைக்க தலை பத்து ஆலோசனைகள்:

1. எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை குறித்து பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பதை முழுமையாக அசை போடாதீர்கள். ரத்து செய்யப்பட்ட விமானப் பயணியை போல எழுத்தை அமைத்துக் கொள்ளலாம். செல்ல வேண்டிய இடம் தெரியும். ஆனால், எப்படி போகப் போகிறோம், எங்கே விமான கனெக்ஷன் கிடைக்கும் என்ற துல்லிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்.

2. காலவரிசைப்படி எழுத வேண்டாம். முதலில் இது நடந்தது, அதன் பின் இவ்வாறு என்று தொடங்குவதற்கு பதிலாக, மிகவும் முக்கியமாக கருதும் நிகழ்வில் ஆரம்பிக்கலாம். ரசமான சம்பவத்தில் தொடங்கி, அதை விவரித்துத் தொடர்ந்தால், வாசகருடன் தொடர்பை ஏற்படுத்துவது எளிமையாகும்.

3. கணினியில் எழுதுவதில் எண்ணவோட்டங்கள் தடைப்படலாம். நாம் நினைப்பதை அப்படியே, நாம் சொல்வதை அவ்வாறே, நாம் கண்டதை கண்டபடியே கொண்டு வர முடியாமல் போகும். டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வெள்ளைத்தாளில் நமக்குப் பிடித்த பிள்ளையார் சுழி, 786 எல்லாம் போட்டு துவங்கி, பேனா கொண்டு எழுதலாம். கணினி எழுத்தில் தோன்றும் அயர்வை, ஒரே விதமான உணர்ச்சியற்ற நடையைக் கொண்டு உணர்ச்சிபூர்வமான சம்பவங்களை விவரிப்பதை, தவிர்க்க வேண்டும்.

4. சந்தி மிகும், மிகா இடங்கள், அ·றிணை, பன்மை ஒற்றுமைகள், தூய தமிழ் சொல் என்றெல்லாம் யோசனையை அலைபாய விட வேண்டாம். முழுவதுமாக எழுத வேண்டியதை கொட்டிய பின், இரண்டு நாள் கழித்து, பிழை திருத்தம், பொருத்தமான தமிழ் பதங்கள், இலக்கண திருத்தங்கள் போன்றவற்றை செய்யத் தொடங்கலாம்.

5. #2-வில் சொன்னபடி சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்த பின், அவற்றை முறையாகத் தொகுக்கவும். கோர்வையில்லாத கூட்ஸ் ட்ரெயினின் பெட்டிகளைப் போல் நிகழ்வுகள் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருந்து 'சிக்கு புக்கு' சத்தம் தாளம் பிசகாமல் எழுந்து, தண்டவாளமாக வாசகனை கூட்டிச் செல்ல வேண்டும்.

6. முதல் முறை எழுதிய நினைவலையை அலசி திருத்தும்போது, மீண்டும் படித்து பார்க்கும்போது, அனுபவத்தின் பல பரிமாணங்களை உணர முடியலாம். வெறுமனே கதையை சொல்லாமல், தவறவிட்ட ஆழ்நிலை தரிசனங்களை வாசகருக்கு கொடுக்க வேண்டும்.

7. உண்மையை எழுத வேண்டும். எழுதும்போது நம்மை எதிர்பாராததை கண்டுகொள்ள நேரிடலாம். அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்த புதையல்களை சொல்லுங்கள்.

8. கட்டுரைகளில், கதைகளில் வினையுரிச்சொல், இடைச்சொல், பெயருரிச்சொல், பண்புகொள்பெயர் என்று போட்டு நிரப்புவது சுவாரசியமாக்கலாம். ஆனால், நினைவலைகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் அடைமொழி கொடுப்பது வீரியத்தைக் குறைத்துவிடும்.

9. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மட்டுமே போதுமானது. வாசகர் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும், எவ்வாறு உணர வேண்டும், என்ன யோசிக்க வேண்டும் என்று உபதேசிக்க வேண்டாம். அனுபூதியைக் கொடுத்தவுடன் நம்முடைய கடமை முடிந்து போனது.

10. எழுதிய முடித்தவுடன், எவருடனும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு முறை சரி பார்த்து, இரு முறை திருத்தி முடிக்கும் வரை பொறுமை காக்கவும். அதன் பின் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் அனுப்பவும்.

இவ்வளவும் யோசித்து, அனுபவங்களையும் சுவாரசியமாக மீண்டும் அனுபவிக்க வேண்டும்.| |

4 கருத்துகள்:

be careful, someone can apply the same to test your writings based on
your experiences or incidents :-).

இந்த அட்வைஸ்கள் எனக்காக எழுதிக் கொண்டவைதான் ;-))

EASY ....... DIFFICULT

Easy is to get a place is someone's address book.
Difficult is to get a place in someone's heart.

Easy is to judge the mistakes of others
Difficult is to recognize our own mistakes

Easy is to talk without thinking
Difficult is to refrain the tongue

Easy is to hurt someone who loves us.
Difficult is to heal the wound...

Easy is to forgive others
Difficult is to ask for forgiveness

Easy is to set rules.
Difficult is to follow them...

Easy is to dream every night.
Difficult is to fight for a dream...

Easy is to show victory.
Difficult is to assume defeat with dignity...

Easy is to admire a full moon.
Difficult to see the other side...

Easy is to stumble with a stone.
Difficult is to get up...

Easy is to enjoy life every day.
Difficult to give its real value...

Easy is to promise something to someone.
Difficult is to fulfill that promise...

Easy is to say we love.
Difficult is to show it every day...

Easy is to criticize others.
Difficult is to improve oneself...

Easy is to make mistakes.
Difficult is to learn from them...

Easy is to weep for a lost love.
Difficult is to take care of it so not to lose it.

Easy is to think about improving.
Difficult is to stop thinking it and put it into action...

Easy is to think bad of others
Difficult is to give them the benefit of the doubt...

Easy is to receive
Difficult is to give

Easy to read this
Difficult to follow

Easy is keep the friendship with words
Difficult is to keep it with meanings.

À¡Ä¡ƒ¢

¬§Ä¡º¨É¸ÙìÌ ¿ýÈ¢. ´Õ 2 Á¡ºòÐìÌ ÓýÉ¡§Ä ¦º¡øĢ¢ÕììÄ¡õ. ÀÚ¢ø¨Ä ÀÂýÀÎò¾ ÓÊÔÁ¡ýÛ À¡÷츢§Èý.

STR

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு