வியாழன், நவம்பர் 03, 2005

பதித்தல்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - III

அண்ணாமலை: கலைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டுல our public posture is different from our private choice. (சு.ரா. சிரிக்கிறார்.) இப்போ private choice-னு வரும்போது கல்யாணமோ, ஜாதியோ எதுனாலும், public-ல ஜாதி வேணாம்னு எல்லாரும் பேசுவாங்க. ஆனா, private life-க்கு வரும்போது வேற மாதிரி. அதே மாதிரி நாங்க சர்வே எத்தனையோ பண்ணியிருக்கோம். அந்த சர்வேல தமிழ் மீடியம் வேணும்னுதான் மெஜாரிட்டி சொல்வாங்க. ஆனால், குறிப்பா உங்க பிள்ளையை எங்கே அனுப்புவீங்கன்னா, வேற மாதிரி பதில் வரும். பொதுவா - தமிழ் மீடியம் வேணுமான்னா, வேணும், வேணும், வேணும். Symbolic-ஆ சொல்லும்போது எல்லாம் ஒத்துக்குவாங்க. ஆனால், private action-னு வரும்போது we behave differently.

சு.ரா.: கருணாநிதியின் நெகட்டிவ் சைட்ஸ் ஒண்ணுமே நான் மறுக்கலை. ஆனா - அவருக்குப் பாசிட்டிவ் சைட்ஸ் நிறைய உண்டு. இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

அண்ணாமலை: DMK has become a party of upper-caste non-brahmins. So for the lower caste they were looking for a political platform and MGR provided it.IV

சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய - இந்த டாய்லெட்டைவிட - ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது - நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

சாமிநாதன்: ஜெமினி ஸ்டுடியோவைப் பத்தி எழுதியதால்தான் அசோகமித்ரனுக்கு வந்து ஆனந்தவிகடன்லே சான்ஸே கிடைக்காது.

சாமிநாதன்: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது - நிறைய பேரு தீக்குளிச்சாங்க இல்லையா? தீக்குளிச்ச ஒரு family மட்டும் trace பண்றோம்னு வச்சிக்குங்க. இந்த மாதிரி bread winner செத்ததால, அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க - இன்னைக்கு என்ன நிலையிலே இருக்காங்க என்பதை trace பண்ணி, அவர்கள் நன்றாக இல்லையென்றால் - அதைக் கதையாகவோ படமாகவோ எடுக்கிறோம் என்றால் - அதை திராவிட இயக்கம் விடுவாங்களா?

சு.ரா.: ரொம்ப opinionated அவர் (ஜெயகாந்தன்). அவருக்கு வந்து - ஒரு சுதந்தரமான சஞ்சாரமே கிடையாது. கிரியேட்டிங் என்கிற ப்ராஸஸை வந்து - நீங்க ஒரு சுதந்தரமான சஞ்சாரத்துக்காக - அதுக்காக நீங்க எல்லாமே சுதந்தரமா போய்விடலாம் என்ற அர்த்தம் இல்லே - but நீங்க உங்களை டிஸ்கவர் பண்றீங்க. உங்களோட உண்மையான அபிப்ராயம் என்ன என்று நீங்க டிஸ்கவர் பண்றீங்க. அதற்கான ஒரு ப்ராஸஸை மேற்கொள்றீங்க. இந்த விஷயமே அவர்கிட்டே கிடையாது. அவர் வந்து - ஏற்கனவே society-ல இருக்கக் கூடிய பலவகையான அபிப்ராயங்களை - பல முக்கியமான ஆட்களோட அபிப்ராயங்களைக் கதையா - ஐடியாஸை கதையா transform பண்ணறது என்கிறது எனக்கு ஒத்துக்கறது இல்லே. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ், இமேஜினேஷன் எல்லாம் எனக்கு முக்கியமான விஷயம். அதன்மூலம் அவன் அடையக்கூடிய - அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய - அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய விஷயங்கள் இருக்கே - அதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டருடைய முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இல்லை. social-ஆ அவர் ரொம்ப நல்லா function பண்றார். அதைப் பத்தி நான் question பண்ணல. அவருடைய ஐடியாஸ் எல்லாம் question பண்ண முடியாது.
| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு