பார்
கூகிள் கொடுக்கும் எடுபிடிக்கருவியைப் போலவே தமிழோவியமும் Toolbar கொடுக்கிறது. அன்றாடம் வருகை தரும் தமிழ் வலையகங்கள், இசையருவி, உலாவியை பெருக்கித் துடைத்தல் என்று பல கருவிகள் கொண்டிருக்கிறது. எளிமையாக உபயோகிக்க முடிகிறது.
அடுத்த வெளியீட்டில் மேலும் பல தமிழ் பக்கங்களின் சுட்டிகள், அகரமுதலிகள், நிரலிகள், உதவி சுட்டிகள், தகவல் திரட்டிகள் என்று கொண்டிருக்கவும், பயனருக்கு ஏற்றவாறு விருப்பங்களை தெரிவு செய்யவும் ஏதுவாக்கினால் மேலும் பயனுள்ளதாகவும், தவிர்க்க முடியாததாகவும் கருவிப்பட்டி அமையும்.
'ப்ரிண்ட் மேகஸின்' என்பதற்கு பதிலாக, அனைத்து பெயர்களும் தமிழிலேயே அமைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்!
தமிழோவியத்தின் எடுபிடிக்கருவி: Tamiloviam TOOLBAR / Free Software for Readers
கொசுறு: ப்ளாக் உலாவி பயன்படுத்தி பார்த்தீர்களா? (Flock)
நுட்பம் | Tamilblogs | தமிழ்ப்பதிவுகள்
Puliya parthu poonai soodu pottukicham.
Links onnukaga why should i use this ?
பெயரில்லா சொன்னது… 11/09/2005 10:17:00 AM
தமிழ் தெரியாது என்ற அனுமானத்தில் டெல்லி பேருந்துகளில் தமிழில் அளவளாவுவோம். அந்த மாதிரி மாற்று கருத்து இருந்தால் அனானிமாஸா ;;-))
---Puliya parthu poonai soodu ---
புலி கூட பூனை வர்க்கம்தானே!?
---Links onnukaga why should i use this ---
சுட்டிகள் மட்டும் இல்லாமல், யாஹூ, கூகிள் இன்ன பிறர் தரும் தேடல், குதித்து வரும் குட்டி உலாவிகளை அமுக்குதல் போன்றவையும் இருக்கிறது.
வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று என்னைப் போல் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்குமே :-)
சொன்னது… 11/09/2005 10:25:00 AM
பாருக்கு வாழ்த்துக்கள்..
blogbot போல ஏதேனும் வித்தியாசமாக செய்யலாமே
சொன்னது… 11/09/2005 12:34:00 PM
கருத்துரையிடுக