புதன், நவம்பர் 16, 2005

இந்து என். ராம்

தனது 22-வது வயதில் அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து பட்டமும் தங்கப்பதக்கமும் பெற்றவர். பத்மபூஷண் விருதும், பி.டி. கோயங்கா விருதும் இதழியல் துறைகளுக்காகப் பெற்றவர். கம்பம் பள்ளத்தாக்கில் ஆய்வு செய்ய வந்த சூசன் என்ற அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு சென்னையில் வாழ்கிறார். இவர்களுக்கு வித்யா என்ற பெண் இருக்கிறார். கீழ்க்காணும் அனைத்து கருத்துக்களும் என்.ராமின் சுபமங்களா நேர்காணலில் பகிர்ந்தவை. அவை என்னுடைய புரிதல் அல்ல. தொடர்புடைய கேள்விகளின் முழு பதிலையும் தேர்ந்தெடுத்து தட்டச்சு(ப்பிழைகளுடன்) இட்டது மட்டும் என்னுடையது.


மக்கள் உணர்வில் ஒரு பாதிப்பு ஏற்படுத்துவது என்பது எளிமையான காரியம் இல்லை. ஒரு பத்திரிகை மக்களிடம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அதீதமாகவோ, குறைவாகவோ மதிப்பிடக் கூடாது. நாம் எழுதுவதை வைத்துக் கொண்டு 'அது மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது' என நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் இந்த பத்திரிகை விஷயங்களிலிருந்து வேறு பல அமைப்புகள் இந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மக்களிடம் செல்கின்றன. அது உடனடியாக இல்லாவிட்டாலும் நாள் சென்று பலனைக் கொடுகும். ஆனால், எழுதும் விஷயத்தில் நம்பகத்தன்மை என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.

தனி ஈழம் கோரிக்கையை நான் முற்றிலுமாக ஆதரிக்கவிலை. தமிழர்களுக்கு சிங்கள் ஆட்சியால் கொடுமைகள் எல்லாம் நடந்தன என்பது உண்மைதான். ஆனால், இவைகளெல்லாம் தனி ஈழம் கோரிக்கையை நியாயப்படுத்தாது. இப்போது நடந்த போராட்டங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்கா அரசும் பல உண்மைகளைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்ரீலங்காவின் ஒரு பகுதியாகத்தான் ஈழத்தமிழர்கள் வாழவேண்டும்.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு வலுக்கட்டாயமாக ஸ்தாபிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்தனர். அவர்கள் சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள். இஸ்ரேல் அவர்கள் பூமியை கவர்ந்து கொண்டதோடு பாலஸ்தீனர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் ஈழம் அப்படியல்ல. இங்கு ஜார்கண்டு, உல்ஃபா போன்றவர்கள் தனிநாடு கேட்பதை ஒத்தது அது. அதோடு மட்டுமல்ல எல்.டி.டி.இ. இயக்கம் ஒரு பயங்கர இயக்கமாக மாறிவிட்டது. அமிர்தலிங்கம், பத்மனாபா, யோகேஸ்வரன், சபாரத்தினம், ராஜீவ்காந்தி போன்றவர்களை கொன்று குவித்தார்கள். கம்போடிய பால்போட் இயக்கம் போலவும் பெருவிலுள்ள ஷைனிங்பாத் போலவும் அவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளுக்கு விரோதமான அரைப்பாசிச அணுகுமுறையைக் கைக்கொள்கிறார்கள்.

ஸ்ரீலங்கா அரசை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர ஒரு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்பைடையில் இவர்களுக்கு பண உதவி செய்வது, ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற தவற்களை நாமும் செய்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இனக்குழு என்று கூறுவது 'ethnic' என்ற வார்த்தையின் தமிழ் வடிவம் என்றே நினைக்கிறேன் இனக்குழு என்பது ஒரு தந்திரமான வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு ஆதிவாசிக் குழுவாக இருக்கலாம் - ஒரே மொழி பேசும் குழுவாக இருக்கலாம். காலிஸ்தான் கோரிக்கையாளர்களைப் போல அடிப்படை மதவாதக் குழுக்களாக இருக்கலாம். இனக்குழுத்தன்மை (ethnicity) என்பது ஒரு குழப்பமான கருத்து. கூர்க்காலாண்ட் ethnic அடிப்படையில் கோரப்படுகிறது. ஆனால் சிக்கிமில் 75 சதம் நேபாளியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த கோரிக்கையை ஆதரிக்கவில்லை. காஷ்மீர் ஒரு இனமா, லடாக் ஒரு இனமா, ஜம்மு ஒரு இனமா - இது ஒரு hold all மாதிரி. இதற்குள் எதையும் அடக்கலாம். ஒன்று மட்டும் உறுதி. நாம் மிகப்பெரிய பாரம்பரியமிக்க மக்கள். ஒரு புதிய தேசியத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி.

நன்றி: சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் சாமிநாதன் & இளையபாரதி; நர்மதா பதிப்பகம்




10 கருத்துகள்:

OOOOHHHHHOOOOOO
RAMmmmmmm
HHHHHHHHHHHHHIIIIIIIIIIIIINNNNNNNNNDDDDDDDDDDDDDDDDDDDDUUUUUUUUUUUUUUUUU!RRRRRRRRRRRRRRAAAAAAAAAAAAAAAMMMMMMMMMMMMMMM
HHHHHHHHHUUUUUUUUUUUUU

ALL I KNOW MR RAMI IS A RAW AGENT
HE IS NOT A JOURNALIST.

THATS WHY ALL THE PARPANS ARE SUPPORT HIM

According to the Los Angeles Times World Report I (29 August 1992), these geographers predict that the maps of the world in the year 2000 and beyond will have a separate Tamil homeland Eelam. Will anyone doubt that this pragmatic prediction is mainly the result of LTTE's ardent campaign for the past 9 years for a separate state for Tamils? And those who have issued this prediction are not partisans or sympathizers of the LTTE. They are,

1. William B. Wood, chief geographer, U.S. State Department
2. Lee Schwartz, geographer, U.S. State Department
3. David B. Knight, chairman of International Geographical Union (IGU) Commission on the World Political Map
4. H. J. de Blij, professor, Foreign Service Institute, Georgetown University
5. George Demko, director of Rockefeller Center, Darthmouth College
6. Stanley D. Brunn, member of IGU Commission on the World Political Map and professor, University of Kentucky.

The case of the editor of a leading Indian newspaper – The Hindu – Ram by name, is even more shameful.

The dictionary defines the word ram, as an "uncastrated male sheep" (The New Penguin English Dictionary). Although it happens to be his name, with a capital R, there is no question that he needs some form of assistance to make him a more professional editor and a better human being. No sooner than the wishful conjecture of Mr. Pirabakaran’s death spread in Sri Lanka and in the West, Ram jumped on the bandwagon. "Where is Prabakaran?" was the title of his editorial on January 11, as if that was a fit subject for an editorial in a reputed Indian newspaper, at a time when both his country and Sri Lanka were reeling under the tsunami tragedy. It was very obvious that the poor man was wishing that Mr. Pirabakaran was dead, from the kind of doubts he raised in that editorial about the Tamil leader being alive. What a disappointment for him to find Mr. Pirapaharan is very much alive.

It must be remembered that this is not the first time The Hindu has "killed" Mr.Pirabakaran in its columns.

Fifteen years ago, in 1989, in its issue of July 24, The Hindu ran the following headline - PRABHAKARAN REPORTED KILLED IN LTTE SHOOTOUT. The paper went on to report that Pirapaharan had been killed by his deputy "Mahattaya." That was after India’s disreputable intelligence agency RAW spread that diabolical lie, taking All India Radio, Doordashan, Lalith Athulathmudali in Colombo and many others for a merry ride.

Another Brahmin-owned Tamil newspaper called the Dinamalar took the cake in its reporting at that time. It ran a screaming 8-column headline on its front page with three double column photos of the "deceased" Pirabakaran, the "assassin" Mahattaya and the other "deceased" Kittu. The paper gave graphic details of how Mr. Pirabakaran was "killed," how his body was being kept at a place called Anandaperiyakulam, 15 miles from Vavuniya, how according to "authoritative sources" the body was being taken to his home town, Valvettiturai, for burial and so on, and so on....So much for Brahmin journalism in Tamil Nadu.

As for that racist Colombo newspaper, The Island, the less said the better. It spread a canard in its Sunday edition of January 9 by headlining –"Prabhakaran’s non-visibility fuels speculation" and on the following Sunday, the 16th, ran the headline "Prabhakaran-Norway meeting to nail canard"!

It is a pity there are Tamils themselves who are gullible enough to fall for such obvious mischief.

//தனி ஈழம் கோரிக்கையை நான் முற்றிலுமாக ஆதரிக்கவிலை. தமிழர்களுக்கு சிங்கள் ஆட்சியால் கொடுமைகள் எல்லாம் நடந்தன என்பது உண்மைதான். ஆனால், இவைகளெல்லாம் தனி ஈழம் கோரிக்கையை நியாயப்படுத்தாது. இப்போது நடந்த போராட்டங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்கா அரசும் பல உண்மைகளைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்ரீலங்காவின் ஒரு பகுதியாகத்தான் ஈழத்தமிழர்கள் வாழவேண்டும்.//

இவர் யார் ஆதரிக்க? இவரது விருப்பம் தனி ஈழம் அமையக்கூடதெனின் எதற்காக புலிகளை ஆரம்பகாலத்தில் ஆதரித்தார், அல்லதிஉ இந்திய ஆதரவை ஆதரித்தார்? அப்போதும் அது தனி ஈழப்போராட்டம் தானே?
என்ன நியாயங்கள் வேண்டும் தனி ஈழத்தை நியாயப்படுத்த?
சிங்களம் எந்தவித கொடுமைகளையும் செய்யாமல் இருந்தாலும், தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியரசை பெறுவதற்கான உரிமையை இயபாகப் பெற்றிருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் அரசை பெறுவதும், அமைப்பதும் மக்களின் அடிப்படை உரிமை. இதை ஐநா அங்கீகரித்துள்ள 29 அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஐநாவின் இந்த ஷரத்தை மறுக்கிறாரா ராம்?

ஐநா தேசிய இனங்களை நிர்ணயிப்பதிலும் (நாட்டை நிர்ணயிப்பதிலும்) மொழியை முதலிடத்தில் வைக்கிறது. அதை அவர் கணக்கில் கொள்ளமுடியாதா? மார்க்ஸ் தேசிய இனங்களைப் பற்றி பேசுகையில் மொழிவழி தேசிய இனங்களையே பெரிதும் குறிப்பிடுகிறார். ஒரு மார்க்சிஸ்ட் அறியாததா இது?

இன்று இந்தியாவில் இந்து மதமே அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் விரும்புவதை அவை சாதியமைப்பை, வைணாசிரமத்தை மீண்டும் நிலைநிறுத்தவேண்டும், பெண்களை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை விரும்புகிறன. அதற்காக ஒற்றை பார்வை கொண்ட இந்துமதம் என்ற கருத்தாடலை வலுப்படுத்தி, அதன் மூலம் இந்தியா என்ற அமைப்பை தாங்கள் விரும்பும் வகையில் காப்பாற்றவும், கட்டுப்படுத்தவும் விரும்புகின்றன என்று புரிந்துகொள்வேன். சிங்கள்-பெளத்தர் இலங்கை பிரியக்கூடாது, அது பெளத்த நாடாக இருக்கவேண்டும் என்று விரும்புவதை அவர் தமிழர்கள் ஒரு பெளத்தராக, சிங்களவர்களுக்கு கீழே வாழ விரும்புகிறார் என்று புரிந்துகொள்வேன்.

ஆனால் ராம் இப்படி உறுதியாக, ஐநாவின் அங்கீகரித்துள்ள உரிமைகளையும் ஒதுக்கிவிட்டு தனி ஈழம் அமையக்கூடதென இருப்பதற்குபின் உள்ள அரசியல், சமூக விருப்பம் என்ன?

ஆனால் இந்தப்பதிவுக்கு நான் பாலாவுக்கு நன்றி சொல்கிறேன். இது இரண்டு விசயங்களை வெளிப்படுத்துகிறது.
1. ராம் புலிகளை மட்டும் எதிர்த்துவந்தார், ஈழமக்களை அல்ல என்று சிலர் கதைத்து வந்தனர். உண்மையில் ராம் தனி ஈழம் விழைவோர் அனைவரையும் எதிர்க்கிறார் என்பதை இது உறுதி செய்கிறது.

2. ஐநாவின் ஷரத்துக்களோ, மார்ச்சிய அறிவோ அல்லது சாதரண பாமர பொது நியாயமோ எதையும் விட தனது விருப்பமே மேலானது. அது எப்படியும் அங்கீகரிக்கப்பட்டே, ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆகவேண்டிய ஒன்று என்ற சாணக்கிய விருப்பதையே அவர் கொண்டிருப்பதாகக் காட்டுகிறது.

he looks like white guy.Is he from India????????.

a quick response
ram and susan have separated.i think ram has married another woman.

//ஐநா தேசிய இனங்களை நிர்ணயிப்பதிலும் (நாட்டை நிர்ணயிப்பதிலும்) மொழியை முதலிடத்தில் வைக்கிறது. அதை அவர் கணக்கில் கொள்ளமுடியாதா? மார்க்ஸ் தேசிய இனங்களைப் பற்றி பேசுகையில் மொழிவழி தேசிய இனங்களையே பெரிதும் குறிப்பிடுகிறார்.// ஒரு மார்க்சிஸ்ட் அறியாததா இது?தங்கமணி சாரு இதென்னங்க?அவங்வங்க தங்களுக்கு வேண்டுமெண்டால் மாhக்ஸை உதாரணமாக்கொள்கிறார்கள்,பின்னாடி மார்க்சியம் ஏற்கமுடியாதென்கிறர்hகள்!அது யாரு சாமி'ஒரு மார்க்சியர்'? அப்படிச் சொல்றீர்கள்?ராம் சாரு மார்க்சியரெண்டு?:-(
:-|

:-)))))))).

தங்கமணி, ரவி, ஜனநாயகம்... (முறையே) பார்வையை அகலப்படுத்துவதற்கும், பிழை திருத்தத்துக்கும், பதிலுக்கும் நன்றி.

இந்திய ஜனநாயகத்தின் முக்கியத்தூண்களில் ஒன்றான ஊடகத் துறை மக்கள் விரோதமானது என்பது வெளிப்படையாத் தெரிந்த செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் கடைசிப்புகலிடமான நீதித்துறையும் நியாயமற்ற கூறுகளைத் தன்னிடத்தே கணிசமான அளவில் கொண்டிருக்கிறது என்பதும் அவ்வப்போது வெளிப்படுவதுண்டு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு ‘தடா’ போன்ற அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதில் உள்ள ர்வம், வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டதும் குஷ்புவை நீதிமன்றத்துக்கு வருமாறு ஒரு நீதிபதி ணையிட ஏதுவாக அமைந்ததுமான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்ததில்லை.

நீதிமன்றத்துக்குச் சென்று விளக்கம் தரவேண்டிய அளவுக்குக் குஷ்பு செய்த குற்றம்தான் என்ன?

நீதி நிலைக்கவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அண்டை மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது, குஜராத் கலவர வழக்கு வேறு இடத்துக்குச் சென்றுள்ளது, சங்கராச்சாரியார்களின் வழக்குகளையும் அண்டை மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எனக்கென்னவோ இந்தியாவில் உள்ள எல்லா வழக்குகளையும் வேறு நாட்டுக்கே மாற்றிவிட்டால் நல்லது போலத் தோன்றுகிறது. அப்போதாவது ஒருவேளை சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கலாம்.

குஷ்பு எதிர்ப்பாளர்களைவிடச் சீர்திருத்தப்படாத சட்ட அமைப்பு ஜனநாயகத்துக்கு அதிக பத்தானது.

****
மக்கள் உரிமையின் ஒட்டுமொத்த குத்தகையாளராகத் தன்னைக் கருதிக்கொண்டு நிருபமா ‘இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்தால் அவரையும் அவரைப்போன்றவர்களையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

மனித உரிமைகள் அவர் வகுக்கும் எல்லைக்குள் அடங்கிவிடுவதில்லை. ஒரு நாடு என்னும் அமைப்பிலிருந்து விலகித் தனியாகப் பிரிய விரும்புவதும் அவர் கூறும் அதே மனித உரிமையைச் சேர்ந்ததுதான் என்பதை அவரும் அவர் சார்ந்த ‘இந்து’ இதழும் ஏன் உணர்வதில்லை? தனிநாடும் கோரும் ஈழத்தமிழர்களை ஏன் இவர்கள் மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார்கள்?

சிலருக்குக் ‘கற்பு’ சுதந்திரத்தின் எல்லையா இருந்தால் வேறு சிலருக்கு ‘மொழி’ எல்லையாக இருக்கிறது. இந்த எல்லைகளை உரசிப்பார்க்கும் உரிமைகள் மற்றவர்களுக்கு இல்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கும் நிருபமா போன்ற பலரோ ‘நாடு’ என்பதைத் தங்கள் எல்லையாக வைத்துக்கொண்டிருப்பதை உணவர்வதில்லை.

‘மொழி என்பது வெறும் தகவல் தொடர்புச் சாதனம்தான் அதற்குமேல் அதில் என்ன இருக்கிறது?’ என்று பரந்த மனதுடையவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் ‘நாடு என்பது மக்கள் வாழ்வதற்குரிய இடம் மட்டும்தான் இதில் யார் எங்கிருந்தால் என்ன? விருப்பமில்லாதவர்கள் பிரிந்து செல்லட்டுமே’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் அப்போது தெரியும் அவரது மனதின் பரப்பு எவ்வளவு சுருங்கியதென்று.

கற்பைக் காக்ககாகவும் மொழியைக் காக்ககவும் கொலைகள் நடப்பதில்லை. னால் நாட்டைக்காப்பதற்காக அரசின் முழு தரவோடு நடக்கும் கொலைகள் அளவற்றவை. எனவே மக்கள் உரிமையின் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் எதிர்க்க வேண்டியது கற்பின் காவலர்களையோ மொழியின் காவலர்களையோ அல்ல. தேசக்காவலர்களை!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு