கலைச்சேவை
Quote: "Opera is when a guy gets stabbed in the back and, instead of bleeding, he sings. - Ed Gardner"
முதுகில் கத்திகுத்து விழுந்த பின் ரத்தத்திற்கு பதிலாக பாடல் வந்தால், அதற்கு பெயர்தான் 'ஆபரா' - எட் கார்ட்னர்

அபு சலீமும் நிறைய செய்திகளில் அடிபடுகிறார். அப்பாஸ், குணால், 'ஷாலினி' ரிச்சர்ட் போல் கதாநாயகத் தோற்றம்.
ரீடிஃபில் கதை எழுதிவிட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து மனைவியானவர்களில் மோனிகா பேடி முன்னிலை வகிப்பார்.
'உன் குடுமி என் கையில்' என்று ஹிந்திப் படங்களில் வருவது போல் மோனிகாவின் குடும்பத்தை ஏகே 47 முனையில் இடைவேளை கொடுக்கலாம். கொலை மிரட்டல்கள் இருக்கும். சிறிய வயதில் பாவப்பட்ட கதை இருக்கும். குற்றவாளியாகத் தூண்டிய சமுதாய சித்தரிப்பு கொடுக்கலாம்.
அமெரிக்காவில் சிறைக்கைதிகளின் படைப்புகளை காருண்யத்துடன் நோக்குவதற்கு ஆதரவு ஜாஸ்தி. ஏற்கனவே ராம் கோபால் வர்மா எடுத்த கம்பெனி முன்னுதாரணமாக இருக்கிறது. அதில் நடித்த ஓபராய்தான் தேச சேவை செய்கிறார்.

ஸ்லோபோதன் மிலோசெவிச்சின் கூட்டாளி கவிதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். அதே போல் குண்டுக் காவியங்கள உருவாக்கலாம்.
ஜெயிலில் இருந்து கொண்டு சுயராஜ்ஜிய சேவா, அதர்ம பரிபாலன் செய்வதை விட சினிமாவுக்கு வந்துவிடுவது நல்லது. பன்ச் டயலாக் கூட ரெடி:
தொடர்புள்ள பதிவு: தமிழோவியத்தில் மீனா
Tamilweb | தமிழ்ப்பதிவுகள் | அபுசலீம்
கருத்துரையிடுக