செவ்வாய், நவம்பர் 22, 2005

இதுதான் ஐயா நுட்பம்

என்ன ஒரு வித்தியாசம் - சின்னத்தம்பி

DatabaseXML & Data Base இரண்டும் எப்படி வேறுபடுகிறது என்று அலுவலக நண்பனை கேட்டேன் அவன் சொன்ன பதில்..

DB : உருவாக்குவது, கையாளுவது சற்று கடினம். அதிக பொறுமை/திறனும் தேவைப்படும்.
XML : உருவாக்குவது / கையாளுவது எளிது.


DB : தவறு நேர்ந்தால் வெளிப்படியாக தெரியாது. அதே நேரம் வேலையும் சரியாக செய்யாது. ஒவ்வொரு காரணமாய் ஆராய்ந்து கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.

XML : உபயோகிக்கும் போது தவறு செய்தால், உடனடியாக எந்த இடத்தில் தவறு என்று சுட்டி காட்டி, திருத்திக்கொள்ள எளிதாக இருக்கும்.


DB : அதன் போக்கில் போனால்தான் வேலை நடக்கும். இல்லை அதனோடு ஒத்துபோக கூடிய மென்பொறுளை வாங்கி சரி செய்ய வேண்டும்.
XML : நாம் இழுத்த இழுப்பிற்கு வரும். Notepad போது, சொன்னதை செய்யும்.


XMLDB : 'admin' ஆக இருந்தால் மட்டுமே முழுமையாக கையாள முடியும். இல்லையென்றால் உடனே எல்லை மீறிவிட்டாய் என்று எரிந்து விழும்.
XML : 'admin' அக இருந்தல் அவசியம் இல்லை.


DB : இது கண்டிப்பாய் வேண்டும், இது இல்லாமல் வேலைக்கு ஆவாது என்பது பழைய சித்தாந்தம்.
XML : புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் XML மட்டும் வைத்துக்கொண்டு சில இணையதளங்கள் முழுமையாக செயல்படுகின்றன. இவைகளுக்கு DB தேவையில்லை.


சுருக்கமாக DB என்பது மனைவி போல,
XML என்பது காதலி போல.

சரி மறுபடியும் படியுங்கள்..
வித்தியாசம் புரியும்.


தலைப்புக்காக: Simple Sharing Extensions for RSS and OPML | வ.கே.கே.




| | |

7 கருத்துகள்:

என்னடா பாலாஜி பதிவு ரொம்ப டெக்னிக்கலா இருக்கேன்னு பார்த்தேன்.

விஷமம்..

உங்க "அலுவலக" நண்பரை கேட்டதா சொல்லுங்க. ;)

தங்களின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.பல பயனுள்ள பதிவுகளாய் உள்ளன. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

சமமந்தம் இல்லாமல் பெண்கள் படத்தைபொட்டு பெண்களை இளிவு படுத்தினதால் நாம் வண்மையாக கண்டிக்கிறேம்!

---"அலுவலக" நண்பரை ---
சின்னத்தம்பியிடம் சொல்லிவிடுகிறேன் ;-)

நன்றி தர்ஷன்.

போட்ட படத்தில எதை DBங்கிறீங்க,எதை XMLங்கிறீங்க?

மேலே உள்ள படம் DB கீழே உள்ள படம் XML

சரிதானே பாலா ?

"பொடி வைத்து எழுதுவது எப்படி ? " என்பதையும் உங்கள் வ.கே.கே யில் சேர்த்துக்கொள்ளவும்...

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு