ஞாயிறு, டிசம்பர் 04, 2005

ஸான் எல்லே

கலிஃபோர்னியாவில் எல்லா ஊர்களும் சாண்டாவின் சொந்தக்காரர் பெயர்களை கொண்டிருக்கிறது. சண்டாளா என்று திட்டுவது போல் சாண்டா அனா, ஒரு கை ஒசை போல் சான் ஓஸே, சாண்டா க்ளாஸை ஒத்த சாண்டா க்ளாரா என்று 'ஸான்' மயம்.

ஸான் நிறைந்த விரிகுடாப் பகுதியில் இருந்து எல்லே செல்லும் வழியெல்லாம் வயற்காடுகள். போகிற வழியெல்லாம் 'சான்' என்று துவங்கிய ஊர் பெயர்களை மேய்ந்ததில் சில நாள்களாக கனவெல்லாம் sans serif எழுத்துருவில் வந்து போகிறது.

எதைப் பார்த்தால் நல்லா இருக்கும், என்ன விருப்பம் என்பதை அறிந்திருந்த திருமலை ராஜன் என்னிடம் மாட்டிக் கொண்டார். ரதசாரதியாக மாறினார். ஆலோசகனாக 'ஆல்கட்ராஸ்'ஐயும் பனி பாஸ்டனில் வந்திருந்ததால் டாஹூ ஏரியையும் நிராகரித்தார். நளபாகத்தைப் Group Photo in Grape Farms of Napaபரிமாறினார். திருவாசகம் முதல் பழைய 'தங்கங்களே' இருந்து புதிய கஸ்தூரி மான் வரை போட்டுத் தாலாட்டினார். கோல்டன் கேட் பின்னணியில் தெரியுமாறு தோளில் கைபோட்டு எடுத்த நிழற்படங்களின் போது 'யோ மான்' என்ற பார்வையாளர்களின் விளிப்பில் காதலராகவும் மாறியிருப்பார். திருமலை ராசா புண்ணியத்தில் மூன்று நாளில் பே ஏரியா சிற்றுலா கிடைத்தது.

நாபா என்றால் திராட்சை ரசம்தானே என்றிருந்தவனுக்கு நா பார்த்தசாரதியை சில காலம் முன் இணையம் அறிமுகம் செய்தது. நாபா பள்ளத்தாக்கெங்கும் திராட்சைத் தோட்டங்கள். பெருமாள் கோவிலில் சன்னிதி தோறும் தீர்த்தம் கொடுப்பார்கள். அதுபோல் நாலைந்து விதமான வைன்-க(ள்)ளைப் சுவை பார்க்க கொடுக்கிறார்கள். துவாதசி பாரணை முடிக்க கையில் லோட்டாவுடன் சந்நிதிதோறும் செல்வது போல் ரோபார்ட் மொண்டாவி, ஸ்டெர்லிங் என்று திக் விஜயம்.

நிஜமான தீர்த்தம் லிவர்மூர் கோவிலில் கிடைக்கிறது. சில காலம் முன்பு அருணுக்குக் கிடைத்தது போல் எனக்கு ஆஸ்திக பெண் நண்பிகள் அறிமுகம் எதுவும் கிடைக்காததால் Glendale Farms Mausolem & Mortuariesஆண்டவனின் பூரண கடாட்சமும் எனக்குக் கிடைத்ததாகவே எண்ணிக் கொண்டேன்.

காரும் கார் சார்ந்த பகுதிகளையும் எல்லே என்று அழைக்கலாம். தனித்தனியாக ஆறு வழிப்பாதைகளை இருபுறமும் கொண்டிருந்தாலும், வரைபடம் கொள்ளாத அளவு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கும் பிரெட்டுக்கு ஜாம் தடவிக் கொள்வது போல் போக்குவரத்து நெரிசல். எல்லோரையும் மாட்டு வண்டிக்கு மாறச் சொல்லி விடலாம். மூன்று டாலர் கேட்கும் எரிவாயு விலையும் இறங்கும். மக்களும் வேகமாக வேலைக்கு செல்லலாம்.

ஒரு பரதேசியின் பயணக் குறிப்புகள் போல் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது மீதி குறிப்புகளை தொடர்கிறேன்.



4 கருத்துகள்:

Just came back from India thanksgiving weekend, and was hosting a dinner on Saturday when strajan called up. Will meet next time.

- bb.

yeah.. will coordinate better next time around :-)

ஸ்பானிஷில் 'சான்' prefix, ஆண் புனிதர்களின் பெயரால் அமைக்கப்பட்ட நகரங்களுக்கும் 'சான்ட்டா', பெண் புனிதர்களின் பெயரால் அமைக்கப்பட்ட நகரங்களுக்கும் வருமென்று நினைக்கிறேன். Santa Maria, San Jose, San Juan போன்று.... Santa Claus பற்றி எனக்குத் தெரியாது ;-)

ஸ்பானிஷ் மொழிப் படங்கள் ஆகட்டும்... பிரேசிலில் கண்ணைக் கவரும் யேசுவின் மலையுச்சி சிலை ஆகட்டும்... நிரம்ப பயபக்தியோடு வாழ்க்கையை நடத்துகிறார்கள். (பத்து பதினைந்து மெக்ஸிகோ/பிரேசில் படங்களை பார்த்ததை வைத்து சொல்கிறேன். நேரில் சென்றால் வேறு மாதிரி இருக்கலாம்.)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு