புதன், டிசம்பர் 07, 2005

ஜூவி

JuniorVikatan.com: வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு.

விருத்தாசலத்தில் உடைந்துபோன ஆற்றுப் பாலத்தை கடந்த 28-ம் தேதி பார்வையிட்டுவிட்டு, அப்படியே உழவர் சந்தை பக்கமாக நல்லகண்ணுவும் தோழர்களும் போயிருக்கிறார்கள். அப்போது, உழவர் சந்தை வாசலில் சில விவசாயிகள் காய்கறி விற்றுக் கொண்டிருக்க, அங்கு வந்த டி.எஸ்.பி-யான பழனி என்பவர் அவற்றை எல்லாம் உதைத்துத் தள்ளி, அங்கிருந்து விவசாயிகளை விரட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துப் பதறிப் போன நல்லகண்ணுவும் தோழர்களும் தட்டிக் கேட்ட போது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசினாராம் டி.எஸ்.பி. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டத்துக்கு டி.எஸ்.பி. அனுமதி மறுக்க, மாவட்ட எஸ்.பி-யான பன்னீர் செல்வம் தலையிட்டு, அனுமதி கொடுத்து இருக்கிறார். அப்படியும் ஆர்ப்பாட்டத்தின் போதும் தோழர்களை சகட்டுமேனிக்குத் திட்டினாராம்டி.எஸ்.பி. இதுசம்பந்தமாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அது பதிவு செய்யப்படாமலே இருக்கிறது.


வலைமொழி: தெரியாத தேவதையைவிட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல்



| | | |

1 கருத்துகள்:

ஒரு தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே இந்த நிலைமையா?
அதுவும் அவர் சுயலாபங்களுக்காக இல்லாமல் ,மக்களின் பிரச்சனைக்காக செயல்படும்போது இப்படியா?

அதிலும் இவர் மிகவும் நல்லவர்.
பயமாக இருக்கிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு