புதன், டிசம்பர் 07, 2005

குமுதம்

லேசான மனது வேண்டுமானால் மிஸ்டர் மியாவ் பக்கம் ஒதுங்குவேன். கொஞ்சம் மாறுதலுக்காக, மனது லேசாக குமுதம் பக்கம் சென்றால் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டார்கள்.

1. வைரமுத்துவுக்கு கமல் போட்டியா?

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தென்றல் இதழின் டிசம்பர் இதழில் கமல் கவிதை:

'என் ஜன்னல்வழிப் பார்வை கலிலியோவின் உலகைச் சதுரமாக்கியது.'

பல தளங்களில் விரிவடையும் கவிதை.

  • கலிலியோவின் உலகு என்பதன் மூலம் கடவுளின் உலகு அல்ல என்னும் அக்நாஸ்டிக் வாதம் முன்னிற்கிறது.

  • கன்ஸாஸ் முதல் பென்சிலிவேனியா வரை அமெரிக்காவில் நிகழ்ந்த இறையியலில் மட்டும் போதித்த 'கடவுளின் குழந்தைகள்' சித்தாந்தத்தை அறிவியலில் போதிக்க வைக்கும் சர்ச்சையை நினைவிலாழ்த்துகிறது.

  • என் பார்வை, உன் பார்வை, நம் பார்வை, அகலப் பார்வை என்று ஜன்னல்களை வெளிச்சமாக்குகிறது.

  • கலிலீயோவை சாளரம் வழியாகத்தான் பார்க்கிறோம் என்றும் பட்டறிவு வேறு, பகுத்தறிவு வேறு என்று உறுமுகிறது.

  • தான் என்னும் கர்வம் 'என் ஜன்னல்' என்னும் பிரயோகத்தில் மிளிர்கிறது.

  • பார்த்திபனின் கிறுக்கல்களுக்கு சரியான போட்டியாக இருப்பதை உணர்த்துகிறது.

  • ஜன்னல் என்னும் வட இந்தியச் சொல் தொடுப்பதன் மூலம் முபை எக்ஸ்பிரஸ் விமர்சகர்களுக்கு ஆஸ்கரடி கொடுக்கிறது.

    குமுதம் :: இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.....



    வடு மாங்கா ஊறுதுங்கோ; தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ

    அன்று அருண் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தார். கமல் மாதிரி அனுபவத்துக்கு ஏற்ற அளவுக்கு இந்த வரிகளும் விரிவடைகிறது என்கிறார்.



    வடிகட்டியவைகளுக்கு வாழ்த்துப்பா முன்னுரையுடன் கருத்து கனிமொழிக்கு போற்றித் துதி இயற்றியிருக்கிறார் வாலி.





    | | | | |

  • 1 கருத்துகள்:

    Nalla kavithai by Kamal.
    Read the Kumudam Arasu badhil..actually, that song has some implicit sexual double meaning I guess. I got two to three comments with exact description which I moderated. I don't want people to search for '------' and end up with my blog :)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு