சனி, டிசம்பர் 17, 2005

அசோகமித்திரன்


டிசம்பர் 14, இந்தியா டுடே இதழில் 'அசோகமித்திரன் கட்டுரைகள்' குறித்து பிஏ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதில் இருந்து:


விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றி அசோகமித்திரன் குறிப்பிடும்போது அவரது எழுத்து, வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்கிறார். அ.மி.யின் எழுத்துக்கும் இந்தக் கூற்று நிச்சயம் பொருந்தும்.

தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அ.மி. சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

கலைஞரின் பராசக்தி குறித்து அ.மி.: புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு, முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல பராசக்தி, சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிரும் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

என்னுடைய கொசுறு: (இ.பா.வின் குருதிப்புனல் குறித்த கட்டுரையில் - பக்கம் 457) பொதுவாகவே இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஓர் எழுத்தாளர் இரண்டாவது படைப்பை வெளிக்கொண்டு வரும்போதே அந்த எழுத்தாளர் மீது அசிரத்தை வந்துவிடுகிறது.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு