ஞாயிறு, ஜனவரி 22, 2006

ஆங்கிலப் புத்தகங்கள்

புத்தகக் கடையில் ஆற அமர அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே படிப்பது எனக்கு ரொம்ப விருப்பமான போக்கு. குடும்பம் இந்தியா சுற்றுலா விட்டதால், சனிக்கிழமை முழுக்க பார்டர்ஸ், பார்ன்ஸ் அண்ட் நோபிள் விஜயங்கள். நண்பர்கள் எல்லாம் குழந்தை குட்டிகளுடன் சன் டிவியும், தொலைபேசுதலும், காய்கறி வாங்குதலுமாக உலா செல்ல இருப்பதால் உடன் வர முடியாததற்கு வருந்தியதால், கடையை மூடும் இரவு வரை புத்தகக் கடையிலேயே சென்றது.

நூலகத்தில் பதிவு செய்து புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்பது புத்தகக்கடைக்கு செல்வதன் முதல் காரணம். புது புத்தகங்கள் என்ன வந்திருக்கிறது என்று மேய முடியும். நூலகத்தில் இருந்து வரும் புத்தகங்களை மேலோட்டமாகப் படித்து, நிஜமாகவே 'நான் படிப்பேனா?' என்பதை அறிந்து வைக்கவும் புரட்டல்கள் உபயோகப்படுகிறது.

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்:

1. நிக் ஃப்ளின் (Nick Flynn) - Another Bullshit Night in Suck City: A Memoir - உள்ளூர் நூலகத்திலோ நண்பரிடமோ கடன் வாங்கிப் படிக்க வேண்டும்

2. மெக்ஸ்வீனி'ஸ் (Dave Eggers): Created in Darkness by Troubled Americans : The Best of McSweeney's Humor Category - அமேஸானில் வாங்க வேண்டும்

3. வில்லியம் ஜே மிட்சல் (William J. Mitchell) - Placing Words : Symbols, Space, and the City - நூலகத்தில் எப்பொழுது கிடைக்கிறதோ, அப்பொழுது அவசியம் படிக்க வேண்டும்.


அனைத்துமே லகுவாக படிக்க முடிகின்றது. இயல்பான நகைச்சுவை, தனித்துவமான பார்வை கொண்டது. கடைசியாக....


4. பெர்னார்ட் லூயிஸ் (Bernard Lewis) - What Went Wrong? : The Clash Between Islam and Modernity in the Middle East

தொலைக்காட்சியில் இவருடைய உரையாடல் சமீபத்தில் பார்த்திருந்ததால், தேடி எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.

  • ஆசிய நாடுகளோ, வளைகுடா நாடுகளோ மேற்கத்திய நாடுகளை வீழ்த்த முடியாது. காட்டாக தளபதி நெப்போலியனின் எகிப்து ஆக்கிரமிப்பை பிரிட்டிஷால்தான் அகற்ற முடிந்தது. உள்ளூர் ராஜாவோ, பக்கத்து ஊர் அரசர்களோ ஃப்ரென்ச்சை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஜெர்மனிக்கும் பிரிட்டிஷுக்கும் சண்டை; அமெரிக்காவுக்கும் ருஷியாவுக்கும் போர் என்றுதான் நடந்து வந்திருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமே பூசல் நிகழலாம்.

  • அமெரிக்கர்களுக்கு சரித்திரத்தின் மீது அக்கறை கிடையாது; தெரியாது. ஏழாம் நூற்றாண்டில் என்ன நடந்தது, இன்று மற்ற பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.

  • இஸ்லாமிய நாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் அரசமைப்பு கொண்டிருக்கிறது. அன்று அரசாங்கத்திடம் பணம் கிடையாது. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரியை நம்பியதால், மக்களை மதித்து பொதுநலனை கடைபிடித்தார்கள். வருவாயை இன்று எண்ணெய் வாரி வழங்குவதால், குடிமக்கள் மேல் உள்ள சார்புநிலை தவிர்க்கப்படுகிறது.

  • வளைகுடா நாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
    1. அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க அதிருப்தி. இதற்கு உதாரணமாக சவூதி அரேபியாவை சொல்கிறார்.

    2. அரசாங்கத்தின் அமெரிக்க எதிர்ப்பு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க ஆதரவு. இதற்கு காட்டாக ஈரானை சொல்கிறார்.

    கடைசியாக அரசும் மக்களும் அமெரிக்க ஆதரவு கொடுக்கும் நாடுகளாக துருக்கி, இஸ்ரேல் இருக்கிறது.

  • அமெரிக்காவின் குறிக்கோள் எல்லாம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் நலன் மட்டும்தான். ஜெருசலத்தையும் பெட்ரோலின் மேல் உள்ள ஊன்றுதலையும் தவிர்க்கும் வரை தீவிரவாதத்தை தொடர்ந்து (அமெரிக்காவே) வளர்த்து வருவார்கள்.



    கொசுறு: அமெரிக்காவின் தேசிய புத்தக வட்டம் இந்த வருடத்திற்கான புத்தகப் பரிந்துரைகளை அறிவித்திருக்கிறார்கள். சுயசரிதைப் பிரிவில் விக்ரம் சேத்தும் (Two Lives) ஆட்டத்தில் இருக்கிறார்.



    |

  • 12 கருத்துகள்:

    NYRB and sunday NYT are good sources.Of course you may have an
    email id for emails from amazon and B&N :).

    நீர் டைம் மேனேஜ்மென்ட் பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா யார் வாங்குவாங்களோ என்னவோ, நான் வாங்குவேன்... நமக்கு ஒரு நாளக்கி நாலு பக்கம் படிக்கிறதுகுள்ள நாக்கு தள்ளுதுப்பா சாமி...

    //நூலகத்தில் இருந்து வரும் புத்தகங்களை மேலோட்டமாகப் படித்து, நிஜமாகவே 'நான் படிப்பேனா?' என்பதை அறிந்து வைக்கவும் புரட்டல்கள் உபயோகப்படுகிறது.//

    உண்மை. நல்ல பதிவு. உங்களிடமிருந்து நிறைய தெரிந்துக்கொள்கிறேன்.

    ரவி... ஞாயிற்றுக்கிழமை NYT-யின் புத்தக விமர்சனங்கள் மின்னஞ்சலாக (The New York Times > Member Center > E-mail Preferences) வரும். எப்பொழுதும் முழுவதுமாக படிப்பதில்லை. (லண்டன்) டைம்ஸ் மின்மடல் மாதத்திற்கு ஒரு முறை: Times Online - E-mail bulletins பாஸ்டன் க்ளோப்பின் பரிந்துரைகளும் எக்கச்சக்கம் இருக்கும்.

    ---டைம் மேனேஜ்மென்ட் பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா---

    வஞ்சப் புகழ்ச்சி செய்யறீரே சார் :-P வூட்டில் யாரும் இல்ல; அதான் கொஞ்சம் ஆட்டம் :-)

    நன்றி தேசிகன்.

    இந்த மேய்ச்சல் வழக்கம் எனக்கும் உண்டு. To brutally paraphrase Atmanam:

    புத்தகக்கடை சென்றேன்.
    ஒன்றுமே வாங்கத்
    தோன்றவில்லை.
    அவர்களும்
    புன்னகைத்து விட்டுப்
    போய் விட்டனர்.
    ஆயினும்
    மனதில் ஒரு நிம்மதி.

    Slap me, just slap me.

    ---டைம் மேனேஜ்மென்ட் பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா---
    Send the family on vacation? How do you manage when they are around?

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    please adjust with my font preoblem.
    Tried twice nothing seems to change.

    ==

    §¿üÚ º¢-ŠÀ¡É¢§Ä, ¦À‹º¡ð ¦ÁìÁ¡ön ±ýÈ ±Øò¾¡Çâý ºó¾¢ôÒ ¿¢Ô §Â¡÷ì
    À¡÷ýŠ «ý §¿¡À¢ûº¢Ä¢ÕóÐ ´Ç¢ôÀÃôÀôÀð¼Ð. §Áü¸¢Â ±ØÐ/Å¢üÌõ ¯ò¾¢¸ÙìÌ
    ¯ðÀð¼Ð ±É¢Ûõ, ¾¡§Á þáý ¦ºýÚ Åó¾ «ÛÀÅò¨¾Ôõ, þíÌ «¦Áâ측ާÄ, ³§Ã¡ôÀ¡Å¢§Ä ¿¢¸Øõ ¸ÕòÐ ÁÂì¸Á¡É ,ÌʦÀÂ÷ó¾ Áì¸Ç¢ý Á£Ð ±ùÅ¡Ú ¦À¡ÕÇ¡¾¡Ã þ¼÷À¡Î¸û ÀƢ¡¸ ²üÈÀθ¢ÈÐ ±ýÚ «¿¡ÂºÁ¡¸ô §Àº¢ì¦¸¡ñÎ §À¡É¡÷. ®Ã¡É¢ý Á£¾¡É ¾ÉРŢÁ÷ºÉí¸¨ÇÔõ , «í§¸ ¿¢Ä×õ ¦¸¡û¨Çì ÌõÀø¸Ç¢ý §À¡ì̸¨ÇÔõ «ÅüÈ¢ý Å¢ÕôÒì¸Ùì¸¡É ºð¼ ŨÃ׸Ùõ ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢ðÊÕó¾¡÷. ¦º¡øĢ Ţ¾¾¢ø À¡÷ò¾¡ø , Á¡üÚô À¡÷¨Å¸Ùõ ¯ñ¨Á¸ÙÁ¼í¸¢Â ¿øĦ¾¡Õ Òò¾¸Á¡¸
    ±õô§Èº¢í ¾ þý·¦À¼ø Àð¼Ð. ÓÊó¾¡ø ÀÊÔí¸§Çý.

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    நேற்று சி-ஸ்பானிலே, பெஹ்சாட் மெக்மாய்n என்ற எழுத்தாளரின் சந்திப்பு நியு யோர்க் பார்ன்ஸ் அன் நோபிள்சிலிருந்து ஒளிப்பரப்பப்பட்டது. மேற்கிய எழுது/விற்கும் உத்திகளுக்கு உட்பட்டது
    எனினும், தாமே இரான் சென்று வந்த அனுபவத்தையும், இங்கு அமெரிக்காவிலே, ஐரோப்பாவிலே
    நிகழும் கருத்து மயக்கமான ,குடிபெயர்ந்த மக்களின் மீது எவ்வாறு பொருளாதார இடர்பாடுகள் பழியாக
    ஏற்றபடுகிறது என்று அநாயசமாகப் பேசிக்கொண்டு போனார். ஈரானின் மீதான தனது
    விமர்சனங்களையும் , அங்கே நிலவும் கொள்ளைக் கும்பல்களின் போக்குகளையும் அவற்றின்
    விருப்புக்களுக்கான சட்ட வரைவுகளும் பற்றி குறிப்பிட்டிருந்தார். சொல்லிய விததில் பார்த்தால் ,
    மாற்றுப் பார்வைகளும் உண்மைகளுமடங்கிய நல்லதொரு புத்தகமாக

    எம்ப்றேசிங் த இன்·பெடல் பட்டது. முடிந்தால் படியுங்களேன்.

    கார்த்திக்... நல்ல நிகழ்ச்சியாகத் தோன்றியதால் இந்த நிகழ்வை (டி.வி.ஆரில்) பதிவு செய்து வைத்திருக்கிறேன்! இனிமேல்தான் கேட்க வேண்டும்.

    ஸ்ரீகாந்த், கவிதைகளைக் கிண்டல் செய்து ஒரு பதிவெழுதும்போது உங்களின் இந்த பதில்... ஹ்ம்ம் :->

    சுந்தரமூர்த்தி...Anyone can do any amount of work, provided it isn't the work he is supposed to be doing at that moment. (நான் சொல்லவில்லை; சொன்னவர்: Robert Benchley)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு