பரமசிவன் படத்தின் திரை விமர்சனத்தையும் காட்ஃபாதர் படத்தின் திரை முன்னோட்டத்தையும் பார்த்தவுடன் அலைபாய்ந்தவை:



விவேக்கே நாயகன் ஆக முடியாமல் மீண்டும் 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி' என்று திரும்பிய இந்தக் காலத்தில், நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஹீரோ வேஷம் போட்டுக் கொடுத்தது யார்?
திரைப்படத்தில் சட்டையை அவிழ்த்து காட்டுவதற்கு நல்ல கட்டுமஸ்தான் உடம்பு வேண்டும். செந்தில், பிரபுதேவா, அஜீத் போன்றோர் செய்தால் நகைச்சுவை முயற்சியாகக் கருதபடும். (படையப்பா-வின் 'What a man' அப்பாஸ் நிழலாடுகிறதா?)
புகை பிடிப்பவர் தடாலடியாக தம் போடுவதை நிறுத்தினால், உடல் பருமனாவார். பருமனைக் குறைப்பதற்கு நல்ல டயடீஷியனை அணுகுவது சிறப்பானது. இல்லையென்றால், அஜீத் போல் எலும்பும் தோலும் ஆகிப் போவோம்.
Tamil Cinema | Paramasivan | தமிழ்ப்பதிவுகள்
கருத்துரையிடுக