வெள்ளி, ஜனவரி 13, 2006

அது ஒரு கனாக் காலம்

சென்னைப் புத்தக கண்காட்சிக்கு ஸ்ரீனிவாசனும் துளசியும் வருகிறார்கள். பாதப்பதிவு, எவெரி தேஸி, திஸ்கி இனி, கிறுக்கு, உப்புமை என்று பல பதிப்பகங்களில் பாலு மகேந்திராவின் கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு 'விஜய்' விக்னேஷ் செல்பேசியில் படம் பிடிக்கிறார். ஒவ்வொரு பதிப்பகத்திலும் என்ன புத்தகங்கள் எழுதப் பணித்தர்கள் என்று அவர்களே சொல்கிறார்கள்:

பாதப்பதிவு


ஸ்ரீனிவாசன்: துருப்பிடிக்கும் கடையாணி

வெறுமனே கவர்ச்சிப் பாடல்களில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதாக இல்லாமல், பெண்களால் சொல்ல முடியாத ஆண்களின் பிரச்சினைகள் உள்ளாகப் ஆண்ணியத்தின் நுட்பமான கூறுகளைப் பதிவு செய்வது ஆண்கவிகள் முன் உள்ள சவாலாகிறது. இதை ஸ்ரீனிவாசன் புரிந்திருக்கிறார். கடக்கும் பெண்ணின் ஆடையை அப்புறப்படுத்தி அதனுடன் உறவு கொள்வது போல, கவனமாகத் தனக்குத்தானே செய்து கொள்ளும் ஓர் ஆணினை இக்கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. பொய்மையோ பாசாங்கோ இல்லாத சொற்களால் நெய்யப்பட்டிருக்கிறது.

துளசி: ஒரு நாணலின் கதை

ஒரு பெரிய வீட்டின் ஒரத்தில் நிற்கிறது நாணல். வீட்டுக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் பார்த்த படங்களில் மனிதர்கள் நடிப்பார்கள் என்பதனால் ஒரு நாணலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த திரைக்கதை மிகவும் வித்தியாசப் படுகின்றது.

நாணலை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதை மனிதனாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் நாணல் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி கதையை நகர்த்தியிருப்பது புதுமை.



எவெரி தேஸி


ஸ்ரீனிவாசன்: ஊட்டிக்கு அப்பால்

சிறை அனுபவம், கைமைதுத்தனம், விவாதம்,ஃபிகரைப் பாருங்கள், சமூகம், ஊட்டி என்று ஆறு பிரிவுகளில் எழுதிய கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகத்துக்கு பலமுறை திரைப்படங்களுக்காக கம்பியெண்ணிய கமல்ஹாஸன் மதிப்புரை எழுதியிருக்கிறார். "எவெரி தேஸி பதிப்பகத்தின் முதல் வெளியீடாக ஸ்ரீனிவாசனின் கட்டுரைத் தொகுப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமே. ஸ்ரீனிவாசன் தமிழ்நாட்டு சிறைகளில் நிகழும் குத்துப் போராட்டங்களில் தம்முடைய கைவரிசையை உறுதியாய் முன்வைக்கத் தயங்காதவர். தேஜஸ்ரீயில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு ப்ரியாமணி மீதான நவீன பார்வைக்கு அடித்தளமாய் இருப்பதால் அவருடைய ரசனை சமநிலை கொண்டு விளங்குகிறது. அவருடைய பார்வைகளும், கோணங்களும் நடிகைகளுக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. ஸ்ரீனிவாசனின் உடலை ஆட்டும் அசைவுகள் நிச்சயம் பார்வையாளர்களையும் ஜொள்ள வைக்கும்."

துளசி: தாவணிகள், தூண்டுதல்கள், தடைக்கற்கள் ஆகிய காதல் கோட்டைகள் - பாகம் 1 ('யாத்ரா'வின் மலையாள மொழிபெயர்ப்பு)


கிறுக்கு


ஸ்ரீனிவாசன்: சிறைக்குப் போகணுமா?

அ அரிவாள், ஆ ஆட்டையப் போடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, சிவில், கிரிமினல் குற்றங்களில் தொடங்கி, நீதிமன்றத்துக்கு செல்வது, வழக்கறிஞர்களை சமாளிப்பது, சிறையில் வார்டனை அட்ஜஸ்ட் செய்வது, சிகரெட் வாங்குவது, ஹவாலா பணம் அனுப்புவது என்று சிறை வாழ்க்கையின் சகல தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

சீர்திருத்தப் பள்ளியில் படிப்பு, சிறைவாசியுடன் திருமணம், கடுங்காவலில் கல்லுடைப்பு... அட்லீஸ்ட் லாக்கப்பிலாவது அடைந்து கிடைக்க வேண்டும். ஒன்றும் இல்லாவிட்டால் சிறைக்கு ஒருமுறை புகாராவது கொடுத்துவிடவேண்டும். ஒருவரை விடாது கேட்டுப்பாருங்கள், இதில் ஒன்றாவது அவர்களது கனவில் வந்திருக்கும்.

சிறைக்குப் போவது எப்படி? யார் வேண்டுமானாலும் போகலாமா? அங்கு உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடன் எப்படிப்ப் பழகுவது? அங்கு என்னென்ன கற்கலாம்? சிறையில் சில வருடங்கள் வசிக்க வேண்டுமானால் என்னென தெரிந்திருக்க வேண்டும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் சுவையான விளக்கங்களைக் கதை சொல்லும் பாணியில் சொல்லித்தருகிறார் ஆசிரியர் சுவடு ஸ்ரீனிவாசன்.


துளசி: மிஸ் துளசி

தமிழர்களுக்கு விரசம் இல்லாமல் காமப்பார்வை கொடுப்பது என்பது ஒரு நுண்கலை. தொப்புள் ஆம்லெட்டுகளையும், வன்புணர்வு காட்சிகளையும், இலக்கியவாதிகளின் வரைவின் மகளிர் லாட்ஜ்களையும், சேலை கட்டிய இடங்களிலும் ம.கோ.ரா. ஸ்டைல் கையாளல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைக் காதலிக்க வைக்க ப்ரியாமணி அரும்பாடு பட்டிருக்கிறார்.


திஸ்கி இனி

ஸ்ரீனிவாசன்: வார்டன் சூழ் ஜெயில்
துளசி: உடன் வரும் லாரியின் குரல்


உப்புமை

ஸ்ரீனிவாசன்: என் கக்கூஸில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
துளசி: காதலுக்காக



| |

7 கருத்துகள்:

:)))

லொள்ளு...? ம்ம்ம்? :-)

தலைல ஹெல்மெட் போட்டுட்டே நடங்க கொஞ்சம் நாளைக்கு...

பொங்கல் வாழ்த்துக்கள்!!நண்ப நன்றி ,நன்றி!!

பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்

---தலைல ஹெல்மெட் போட்டுட்டே ---
பாலு மஹேந்திராவும் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்து விட்டாரா?! ;-)

//சென்னைப் புத்தக கண்காட்சிக்கு ஸ்ரீனிவாசனும் துளசியும் வருகிறார்கள்//

ஸ்ரீனிவாசனுக்குப் பதிலா கோபால்னு போட்டுக்கலாம்.

ஹூம்.... எங்கே வர்றது? ஆடி அசைஞ்சு அங்கெ வர்றதுக்குள்ளே புத்தக்கண்காட்சியே முடிஞ்சிடுமே(-:

துளசி... 'அது ஒரு கனாக் காலம்' படம் பார்த்துட்டீங்களா?

அதெல்லாம் எப்பவோ பார்த்தாச்சு பாலா.

ஆமாம் நீங்க பார்த்தாச்சான்னு கேக்கறது 'பாலு மகேந்திரா'வோட படத்தைத்தானே?:-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு