ஆண் பாவம்
ஆண்களைக் குறித்த வரிகளில் பாடாலாசிரியர்கள் மோசமாக சித்தரிப்பதை 'ஆடவர் நலன் பாதுகாப்பு கூட்டமைப்பு' சார்பாக கண்டிக்கிறேன். சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்.
'லன்ச்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
மன்க்கியில இருந்து ஒரு
மனுசப்பயல் வந்தாலும்
இன்னும் போகலியே வாலு'
'நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உனையே நெனச்சு உயிர் வளர்த்தேன்'
'இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை'
'பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது'
'சேலையப் பார்த்தாலே
சொக்கிப் போகிற என் மாமா
வேலையப் பார் மாமா
அந்த வெட்டிப்பேச்சு ஏன் மாமா'
'பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் இராமன் கிடையாது'
'ஃபிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்'
'அம்மியரைப்பது பொம்பளை வேலைதாண்டி
அடீ அதுக்குப் போயி என்னை அழைப்பது ஏனடி'
'இராமன் வேடம் போட்டாலும்
ரெண்டு சீதைக் கேட்பானே
ரெண்டு சீதை வந்தாலும்
சூர்ப்பநகைப் பார்ப்பானே'
'மயிலே உனை நான்
மயக்கவும் இல்லை
மனதால் என்றும்
வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி
இணைந்தது பாவம்
எல்லாம் நீயே
எழுதிய கோலம்
அதே சமயம் பாராட்டுக்களைக் கோரும் சில பாடல்களும் நினைவுக்கு வரும்:
'என் நாயகா
என்னைப் பிரிகையில்
என் ஞாபகம் தலைக்காட்டுமா
உன் ஆண்மையும் தடுமாறுமா
பிற பெண்கள் மேல்
மனம் போகுமா
'கண்களே நீயாய்ப் போனால்
வேறு பார்வை வருமா'
'நேத்து கூட தூக்கத்தில
பார்த்தேன் அந்த பூங்குயில
ஊத்துக்குளி முத்தெடுத்து
கோர்த்து வச்ச மாலை போல
வேர்த்துக் கொட்டி கண் முழிச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலை காற்றா...'
'வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா?'
'கண்ணே நீ கஷ்டப்பட்டா
என் மனசு தாங்காது'
கானங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சித்ராவின் சின்னச் சின்ன கனவுகளே கண்ணா என்னும் துறைமுகம் படப்பாடலில் தடுக்கி விழுந்தேன். பிபி-யிடம் சொல்லி தினம் ஒரு திரைப்பாடலில் இடச் சொல்ல வேண்டும்.
சினிமா | tamil song | தமிழ்ப்பதிவுகள்
BB
Thuraimugam was a flop movie.I saw it in TV.It could have been a better movie.If I remember it right it was directed by Rajeshwar with Arun Pandian and Shobana in the main roles.
சொன்னது… 1/20/2006 06:37:00 PM
துறைமுகம் படத்தில் இப்படியொரு இனிய பாடல் இருப்பதே இன்றுதான் கண்டு கொண்டேன். 'அமரன்' ராஜேஸ்வரா... ரத்த வாடை நிறைய அடித்திருக்கும்?
சொன்னது… 1/20/2006 10:10:00 PM
//. செப்டம்பர் மாதம் - அலைபாயுதே
'பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது'
///
நீங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடத் தவறிய இன்னொரு முக்கிய வரி..
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலின் தேவை இருக்காது. :)
//
ஊத்துக்குளி முத்தெடுத்து
கோர்த்து வச்ச மாலை போல
//
தூத்துக்குடி முத்தெடுத்துக்
கோத்துவெச்ச மாலைபோல
ஊத்துக்குளியில் வெண்ணைதான் விசேஷம்.
பெயரில்லா சொன்னது… 1/20/2006 10:50:00 PM
சின்னச் சின்ன கனவுகளே பாடல் மிகவும் நன்றாக இருக்கும். எந்தப் படம் என்று தெரியாமலேயே கேட்டு ரசித்த பாடல் அது. மிகவும் அருமையான பாடல்.
சொன்னது… 1/21/2006 01:15:00 AM
கோ ராகவன்.. இந்த மாதிரி அரிய தூத்துக்குடி முத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். புகழ் பெறாத படங்களில் இருக்கும் நல்ல பாடல்களை, விவிதபாரதி இருக்கும் வரை நன்றாகவே ஒலிபரப்பி வந்தார்கள்.
சொன்னது… 1/21/2006 08:04:00 AM
//'ஆடவர் நலன் பாதுகாப்பு கூட்டமைப்பு' சார்பாக கண்டிக்கிறேன்//
நானும் சேர்ந்துகொண்டு கண்டிக்கிறேன்.
:))
எனக்கு சில பாடல்கள் கேட்ட மாதிரி இல்லை. தனியான வரிகளின் அர்த்தமும் புரியவில்லை.
'நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உனையே நெனச்சு உயிர் வளர்த்தேன்'
'இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை'
இதுல என்ன மோசம்?
'லன்ச்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
என்ன அர்த்தம்?
சொன்னது… 1/21/2006 10:56:00 AM
---நீங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடத் தவறிய இன்னொரு முக்கிய வரி----
அனானி... இலக்கியமென்றால் சொல்லாத சொல்தான் முக்கியம் என்று சொல்கிறார்களே ;-)
---'இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை'---
தலைப்பில் இடம் பெற்றிருக்கும் படம் என்பதால் கொஞ்சம் பாரபட்சமாய் போட்டிருப்பேன்.
மேலும், ஆணுக்கு மட்டுமே உள்ள பிரிவுத் துயரை, பெண்ணுக்கும் சேர்த்துக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியதுதானே :-P
----'லன்ச்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்----
என்ன சார்... தெரிஞ்சு கேக்கறீரா?! இள ஆண் இனமே ஏதோ அலைஞ்சு கெடப்பது போல் எழுதிப்புட்டாரே :-((
'ஆசை நூறு வகை;
வாழ்வில் நூறு சுவை வா...
தினம் ஆடிப் பாடலாம்
பல ஜோடி சேரலாம்
மனம் போல்... வா
கொண்டாடலாம்!'
சொன்னது… 1/21/2006 12:40:00 PM
கருத்துரையிடுக