antimetabole
விவேக் மொழி என்னும் தலைப்புடன் வந்த மின்மடலில் இருந்து...
(இரண்டனா எல்லாம் என் கருத்துகள்)
1. பேண்ட் போட்டு முட்டி போட முடியும்,
ஆனா முட்டி போட்டு பேண்ட் போட முடியுமா?
இரண்டணா: போடணும்னா 'அபூர்வ சகோதர'ராக இருக்கணும்.
2.ஃபேனுக்கும் றெக்கை இருக்கு; பறவைக்கும் றெக்கை இருக்கு.
ஃபேனால் பறக்க முடியாது; பறவையால் சுத்த முடியாது.
இரண்டணா: சுத்தி சுத்தி அடிக்கறதுக்கு ஊர்க்குருவிகளால் முடியாது.
3. மேட்ச் பாக்ஸில் (கிரிக்கெட்) மேட்சை பார்க்க முடியாது.
இரண்டணா: தீப்பெட்டி சைஸில் ஐ-பாட் வருதே...
4. இருக்கறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விடா குடிச்சாலும், செத்ததுக்கப்புறம் பால்தான்.
இரண்டணா: இருக்கறப்ப கொழுப்பு நீக்கிய அல்லது சோயா பால் குடிங்க.
5. சவுத் இந்தியாவில் நார்த்தங்கா கிடைக்கும்;
ஆனா, நார்த் இந்தியாவில் சவுத்தங்கா கிடைக்குமா?
இரண்டணா: பெருசுங்களை 'டா' போட்டால், POTA-வில் போடாங்கா கிடைக்கும்.
6. பச்சை மிளகா பச்சையா இருக்கும்;
ஆனா, குடை மிளகாயில் குடையா இருக்கும்!
இரண்டணா: சப்டெக்ஸ்ட் - குடை சின்னம் + இரட்டை பச்சை = தலையில் மிளகாய்
7. லன்ச் பேக்கில் லன்ச் கொண்டு போகலாம்;
அதனால், ஸ்கூல் பேக்கில் ஸ்கூலைக் கொண்டு போக நினைக்கக் கூடாது.
இரண்டணா: கற்றது கைச்சோறு அளவு; கல்லாதது ஸ்கூல் அளவு.
8. நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும், உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு, கடையில்தான் வாங்கணும்.
இரண்டணா: சினிமா பருப்பு அரசியலில் உதவாது.
9. மெழுகை வைத்து மெழுகுவர்த்தி செய்யலாம்;
ஆனால், கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.
இரண்டணா: சக்கரத்தை வைத்து சக்கரவர்த்தி செய்ய முடியாது.
10. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்;
ஆனால், கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.
இரண்டணா: கோவிலை இடித்தாலும் ஒரே ரத்தம்தான் வரும்.
Tamil chiasmus | வசனம் | தமிழ்ப்பதிவுகள்
ரசிக்கக்கூடிய தரமான நகைச்சுவைகள்.
பாராட்டுக்கள்.
தனரா
சொன்னது… 1/18/2006 01:01:00 PM
படைப்பாளி பெயர் தெரியாத எழுத்து... ஒரிஜினலா யோசித்த(யோசிக்கிறவர்?)வர், உடனடியா எஸ்.எம்.எஸ்/மின்மடல் அனுப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.
எல்லா நன்றியும் அனானிமஸ் தத்துவவாதிக்கு :-)
சொன்னது… 1/18/2006 01:25:00 PM
லைஃஃப்ல ஒண்ணுமே இல்லேன்னா போர் அடிக்கும்;
தலையில ஒண்ணுமே இல்லேன்னா க்ளேர் அடிக்கும் மாம்ஸ்
பெயரில்லா சொன்னது… 1/22/2006 01:34:00 PM
கருத்துரையிடுக