செவ்வாய், ஜனவரி 31, 2006

தலைவர் கைது இல்லை

Stalin, hundreds of DMK men removed :: Chennai Online News Service

'சார். நாளைக்கு எனக்கு லீவு கிடைக்குமா?'

'ஏன் திடீர் என்று விடுமுறை கேட்கறீங்க?'

'நாளைக்கு க்ளிண்டனை impeach செய்யப் போறாங்களாமே! ஆபீஸ் வருவதற்கு பயமா இருக்கிறது. ட்ரெயின் எல்லாம் ஓடுமா என்று தெரியலை. நான் இப்பத்தான் புது கார் வாங்கியிருக்கேன். சாலை மறியல் எல்லாம் நடக்குமே. காரை கிழிச்சுடுவாங்க சார். இன்ஷூரன்ஸ் ஜாஸ்தி செஞ்சிடுவாங்க.'

'நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை பாலாஜி!'

'எங்க ஊரில் க்ளிண்டன் மாதிரி கட்சித் தலைவருக்கு எதிராக இந்த மாதிரி மசோதா கொண்டு வந்தால், ஊரே ரணகளமாயிடும். பந்த் என்பார்கள். ஜாலியாக வீட்டில் உட்கார்ந்துண்டு கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம். சன் டீவியில் 'ஸ்பெஷல் ப்ரொகிராம்' என்று புத்தம்புதிய இளைய தளபதி திரைப்படம் கூட காட்டுவாங்க சார். ஆனால், ஹோட்டல் எல்லாம் திறந்து இருக்காது. ஷாப்பிங் போக முடியாது'

'அப்படியா? நீங்க 'நியூட் கிங்ரிச்' பதவி விலக்கப்பட்டப்பக் கூட இங்கதானே இருந்தீங்க... ரிபப்ளிகன் கட்சித் தொண்டர்களே பேசாமத்தானே இருந்தாங்க. அப்பவே ஒண்ணும் நடக்கலியே! இப்பொழுதும் அந்த மாதிரி எதுவும் இருக்காதுங்க. நாளை மற்றொரு நாளே.'

'சரிங்க'

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கல் எறிதல்களும், சாலைத் தடுப்புகளும், பந்த்களும் இல்லாத ஊரில், வேலைக்கு இருப்பதை நினைத்து, மனம் நொந்தபடியே இருக்கைக்குத் திரும்புகிறான்.

இணையத்தில் தமிழ்நாட்டு செய்திகள் வழக்கம் போல் மிளிர்ந்தது:

Activists, thinking that their leader has been arrested, tried to block roads in various parts of the state. A metro report said 70 party volunteers, including MLA and functionaries of the local transport Corporation, were removed for blocking road traffic. In another regional hub, about 250 party workers were removed by the police when they blocked road traffic. Similar demonstrations were reported from City A, City B, City C, City D and other parts of the state.| |

9 கருத்துகள்:

If you want a day's off just yourself arrested :)

oops...
If you want a day's off just get yourself arrested :)

நான் என்ன அரசியல்வாதியா! குளிரூட்டப்பட்ட சிறையில் பழரசம் பருகி, நவரசமும் அனுபவிப்பதற்கு ;-)

அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் என்று பல்லவனில் நகர்வலம் வருவதையும், 'நிறைய பயம்; கொஞ்சம் ஆர்வம்' கலந்து வேலை முடிந்து அறைக்குத் திரும்புவதையும் இந்தியாவில் மட்டுமே நரகலாம்.

---If you want a day's off just get yourself arrested ---

If you put a anony's feed you can't even get attested :P

Paathu ezhuthunga. Tamil Ina Unarvaalargal vandhu ungalai arai gurai enru solli vidap pogiraargal.

Matter is good but the incidents are bit old, quote some latest examples.

Anbudan
Rajan

À¡Ä¡

¿ýÈ¡¸ ¯ûÇÐ

---quote some latest examples.---

ஹ்ம்ம்... ஆதி முதல் பரமசிவன் வரை சவுண்டு எவ்வளவு அதிகம் விடுகிறார்களோ, கூட்டம் எவ்வளவு பெருசாக இருக்கிறதோ, அன்றாட வாழ்க்கையும் பொதுஜனமும் எவ்வளவு பாதிக்கப்படுகிறதோ, அவ்வளவு தூரம் வெற்றியடைந்ததாக நினைக்கிறார்கள்... (இணையத்திலும் அதுதானே நடை?)

ம்ம்ம்

இந்தப் பக்கம் வருவீங்க தானே.

எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு. இதப் போயி பெரிசு பண்ணிகிட்டு.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பாலா.

பட்டா தான் தெரியும்'னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே? நிறைய பட்டு இருக்கீங்களோ?

ஷங்கர்.

---நிறைய பட்டு இருக்கீங்களோ---

அனுபவித்து இருக்கிறேன் ;-) பட்டு இருக்கேன் என்றால் ஆரெம்கேவி, போத்திஸ் என்று திசை மாறிய இழையாயிடும் :P

---இந்தப் பக்கம் வருவீங்க தானே---

எனக்கெல்லாம் வேறெங்கப்பா போக்கிடம் :-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு