செவ்வாய், ஜனவரி 17, 2006

An Experiment in Criticism

பா ராகவன் புத்தகப்புழு ஆரம்பித்த புதிதில் ஏதோவொரு மின்மடலில் அச்சிட்டிருந்தார்:

'தினசரியை மட்டும் படித்து வரக்கூடாது. தொடர்ச்சியாக புத்தகங்களைப் படிப்பது உனக்கு நல்லது. முழுமையான பார்வையை உனக்கு நாளிதழ்கள் வழங்காது'
என்னும் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

"The most unliterary reader of all sticks to "the news". He reads daily, with unwearied relish, how, in some place he has never seen, under circumstances which never become quite clear, someone he doesn't know has married, rescued, robbed, raped, or murdered someone else he doesn't know." - CS Lewis


இலக்கிய திறனாய்வு புத்தகங்கள் என்று தனிப்ப்பிரிவே இருக்கிறது என்று தெரிவதற்கு முன் 'An Experiment in Criticism' என்னும் புத்தகம் கையில் கிடைத்தது. படிப்பதற்கு சுவாரசியமாக, ஆங்காங்கே 'அட...' போட வைத்த புத்தகம்.

 • 'இலக்கியம்' என்று வல்லுநர்களால் சொல்லப்படுவதை ஏன் படிக்க வேண்டும்?
 • ஜெயமோகன் போன்ற திறனாய்வாளர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?
 • கதை சுருக்கம் மட்டும் சொன்னாலே, இலக்கியம் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாமா?
 • மீண்டும் மீண்டும் படித்ததையே புரட்டுவது எதற்காக?
 • இடதுசாரியாக இருந்தால், வலதுசாரி எழுத்தை ஏன் புறக்கணிக்க கூடாது?
 • பிரச்சார தொனியுள்ள புத்தகங்களைப் படித்தால், உங்களின் கருத்துக்கள் மாறிவிடுமா? என்று பல கேள்விகள் முதல் வாசிப்பில் எழும்பாவிட்டாலும், அவ்வப்போது, வேறெதையோ படிக்கும்போது உணர்த்தியிருக்கும் புத்தகம்.

  முன்முடிவுகளுடன் புத்தகத்தை அணுகாமல், 'ஏதாவது பயனுள்ளது நிச்சயம் அடைவேன்' என்னும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் அணுக சொல்கிறார் சி.எஸ். லூயிஸ்.
  ("We can never know that a piece of writing is bad unless we have begun by trying to read it as if it was very good and ended by discovering that we were paying that author an undeserved compliment.")  புத்தகத்தில் இருந்து...

  An Experiment in Criticism-இல் சி.எஸ். லூயிஸ்:


 • இலக்கிய விமர்சகர்களின் திறனாய்வுகளிடம் இருந்து பத்து அல்லது இருபது வருடங்கள் ஒதுங்கி இருப்பது நமக்கு நன்மை பயக்கும்.
  ("I suggest that a ten or twenty years - abstinence both from the reading and from the writing of evaluative [literary] criticism might do us all a great deal of good.")


 • ரசனையை மேம்படுத்த, சிறப்பானதை எவ்வாறு சுவைப்பது என்று கற்றுக்கொடுக்கவேண்டும். ஒருவருடைய விருப்பங்களை மட்டம் தட்டுவது மேம்படுத்துவதல்ல.
  ("The real way of mending a man's taste is not to denigrate his present favourites but to teach him how to enjoy something better.")


 • கவிதையின் பரப்பளவு கவிதையாகவே விரிவது பலருக்கும் புரியாத செயல். நவீன கவிதைகள் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. வெறுமனேப் படித்து செல்ல முடியாததால் விசனமுறத்தான் வேண்டும். அதற்காக, கவிஞர்களும் தங்கள் கவிதை பரவலாக வாசிக்கப்படாவிட்டால் குற்றஞ்சொல்லக் கூடாது. கவிதைகளை உணர்வதற்கு கடுமையான திறன் தேவையாயிருக்கும்போது, கவிஞர்களின் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகத்தான் இருக்க முடியும்.
  ("Poetry confines itself more and more to what only poetry can do; but this turns out to be something which not many people want done. Nor, of course, could they receive it if they did. Modern poetry is too difficult for them. It is idle to complain; poetry so pure as this must be difficult. But neither must the poets complain if they are unread. When the art of reading poetry requires talents hardly less exalted than the art of writing it, readers cannot be much more numerous than poets.")


 • ஒவ்வொரு புத்தகமும் சுவாரசியமானதாக இருக்கவேண்டும். சிறப்பான படைப்பு மேலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். குறைந்தபட்சமாக விரும்பக்கூடிய புத்தகமாக இல்லாததன் மேற்சென்று அலசுவது தேவையற்ற ஒன்றாகும்.
  ("Every book should be entertaining. A good book will be more; it must not be less. Entertainment, in this sense, is like a qualifying examination. If a fiction can’t provide even that, we may be excused from inquiry into its higher qualities.")


 • படித்த, ஒளிவட்டம் போட்டுக் கொண்ட திறனாய்வாளர்களின் இலக்கிய விமர்சனங்களில் இலக்கிய ஆர்வமே கிடையாது. புத்தகங்களைப் பற்றி அளக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டவர்களிடமிருந்து என்ன கிடைத்துவிடும்? கலாரசனையாக இருக்கவேண்டிய இலக்கியம், அவர்களின் கையில் பிரச்சார மதமாகவும், நல்லொழுக்கப் பள்ளியாகவும், தத்துவவியலாகவும், உளவியல் சிகிச்சையாகவும், சமூகக்கூடமாகவும் ஆகிப்போகிறது.
  ("[The academic discipline of] ‘English Literature’ directs to the study of literature a great many talented, ingenious, and diligent people whose real interests are not specifically literary at all. Forced to talk incessantly about books, what can they do but try to make books into the sort of things they can talk about? Hence literature becomes for them a religion, a philosophy, a school of ethics, a psychotherapy, a sociology - anything rather than a collection of works of art.")


 • புதுப்பாடலின் மெட்டை மட்டும் ரசித்துவிட்டு போய்விடுபவனைப் போல், சில வாசகர்களுக்கு கதையில் நிகழ்வும், முடிவும் மட்டுமே போதுமானது.
  ("As the unmusical listener wants only the Tune, so the unliterary reader wants only the Event. The one ignores nearly all the sounds the orchestra is actually making; he wants to hum the tune. The other ignores nearly all that the words before him are doing; he wants to know what happened next.")

  | |

 • 5 கருத்துகள்:

  முழுமையான பார்வையை உனக்கு நாளிதழ்கள் வழங்காது'

  வார இதழ்களும்தானுங்களே? ராரா சொல்லல்லீங்களா?
  ;-)

  So many quotes from CS Lewis, but none related to GOD? Must be the work of Satan :)

  பரி படம் பார் பாடம் படி

  //முன்முடிவுகளுடன் புத்தகத்தை அணுகாமல், 'ஏதாவது பயனுள்ளது நிச்சயம் அடைவேன்' என்னும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் அணுக சொல்கிறார் சி.எஸ். லூயிஸ். //

  இது முற்றிலும் உண்மை. இந்த மனோபாவம் இல்லாதது தவறான புரிதல்களுக்கு இட்டுச் சென்றுவிடும்.

  எது இலக்கியம் என வரையறை செய்வது உட்பட.

  ---Must be the work of Satan ---

  நார்னியா நாராயண...

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு