வியாழன், மார்ச் 16, 2006

புவியிலோரிடம்

வாசக அனுபவம்

கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்ப்பது போல் இருக்கிறது. பெரிய குடும்பம். நிறைய கதாபாத்திரங்கள். பா. ராகவன் அநாயசமாக அனைவரையும் மனதில் நிலைநிறுத்துகிறார்.

நாம் நாமாகவே இருப்பதில்லை. இன்னொருவராகவே இருக்கிறோம் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லும் கதை.

பல வருடம் முன்பு படித்தாலும் அதன் தாக்கங்களை இன்றளவிலும் தக்க வைத்திருக்கிறது. நாவல் படித்து முடித்தபின்பு உடனடியாக instant gratification-ஆக 'புத்தக விமர்சனம்' எழுதும் எனக்கு இது ஒரு புது அனுபவம். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து என்றோ படித்த நாவலைப் புரட்டுவ்து, அந்தக் குடும்பத்துடன் சில நிமிடங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்வது போல் இருக்கிறது. என்றோ வாழ்ந்த வீட்டுக்கு மறுவிஜயம் செய்வது; எப்பொழுதோ கூடப் படித்த பள்ளித் தோழனை அங்காடியில் சந்திப்பது; தொலைந்து போன கணினி கோப்பை வேறெதோ தேடும்போது வந்து விழுவது போன்ற உணர்வுகளை மீட்டும் நாவல். உடனடியாக 'வாசக அனுபவம்' எழுதாமால் விட்டுப் போனதால் கதையின் கோர்வை கிட்டாமல் போகலாம்.

வாசுதேவன் ஹீரோ. வாசுவின் அப்பா சௌரிராஜன். அம்மா செண்பகா. ஒன்பது பிள்ளைகள். கல்வியார்வம் அற்றவர்கள்; ஆனால் தறுதலைகள் அல்ல; பொறுப்புமிக்கவர்கள். ஏழு வருமானம். பன்னிரெண்டு பேர் சாப்பாட்டுக்கு பின் மீதம் எதுவும் வைக்காத பட்ஜெட். கல்யாண வேலைகளுக்கு செல்லும் பெரியண்ணா. அவன் வழியில் தொடரப்போகும் சுந்தரா.

எதிர்மறை சிந்தனைகளில் லயிக்கும் மத்தியவர்க்கப் பிரதிநிதியாக வாசு. தப்பித் தவறி கூடத் தவறான நம்பிக்கைகளைத் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். +2வைத் தேறிவிட்டாலும் 'ஜஸ்ட் பாஸ்' என்று இந்தப் பக்கம் விழுந்தவன். அந்த மோசமான மதிப்பெண்களை வைத்துக் கொண்டு ·பார்வார்ட் கேஸ்ட்டுக்கு எந்தக் கல்லூரியும் இடம் ஒதுக்காது.

நான் +2 முடித்தவுடன் கல்லூரிகளைப் படையெடுத்தது கழிவிறக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தாலும் காலை எட்டு மணி முதல் காத்திருக்க வேண்டும். சந்திக்கும் சில விநாடிகளில் மார்க் அதிகம் எடுக்காத கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே கேள்விகளாக 'ஏன்? எப்படி? எதற்கு?' என்று வினாவாகும். 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று திருப்பியனுப்பப்படுவேன். வாசுவிற்கோ எல்லா சப்ஜெக்டுமே கால் வாறியிருக்கிறது. பச்சையப்பன் கல்லூரி அனுபவங்கள் என்னுடைய லயோலா, விவேகானந்தா காத்திருப்புகளை மருக வைக்கிறது. கரெஸ்பாண்டன்ஸ் படிக்குமாறு ஆலோசனையுடன் சிபாரிசுகள் எல்லாம் பயனற்று செல்லாக்காசாகின்றன.

மைதிலி அண்ணி பொறுமைசாலி. சடகோபன் அண்ணனின் மனைவி. இளமைக் காதலுக்காக, கல்யாணம் செய்த பிறகும் கிராமத்துக் காதலியை கண்டினியூ செய்பவன்.

சின்ன அண்ணி வத்ஸலா. இன்னொரு அண்ணன் வரதனுக்குத் 'நாடார் கல்லூரி'யில் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாடாராக சான்றிதழ் பெற்றால் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்.

வரதன் பெண் பார்க்க செல்லும் படலம். தாசில்தார் ஆபீஸ் படலம். ரங்கன் ஷேத்ராடனம் சுற்ற அழைத்துப் போகும் படலம். தவறாமல் கிராமத்திற்கு செல்லும் சடகோபனை மைதிலி புரிந்துகொள்ளும் படலம். சமாஸ்ரயணப் படலம். என்று ஆங்காங்கே தேவையான உபகிளைகள் உண்டு.

குற்றவுணர்ச்சியில் தள்ளாடுகிறான் வாசு. போலியாக சர்டி·பிகேட் வாங்கி பி.காம். சேர்ந்தாகி விட்டது. வெளியாளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் சிக்கன் உண்டு பார்க்கிறான். கல்லூரி அரசியலில் பூந்து விளையாடுகிறான். சுடுசொற்களை வீசுகிறான். புகை, மது சகலமும் பயிலுகிறான். அவனைக் கண்டு கல்லூரி மாணவர்களே அஞ்சும்படி நடந்து கொள்கிறான்.

நாளை நடக்கப் போவது தெரிந்தால் நல்லதை விட நடக்காதவற்றையே எண்ணிப் புலம்புகிறோம். என்றாவது 'அய்யங்கார் ஆத்துப் பையன்' குட்டு வெளிப்படுமோ என்னும் அச்சம். சுய அடையாளங்களை மூடி மறைத்து பொய் வேஷம் கட்டுகிறோமே என்னும் கோபம். வெறுப்பும் படபடப்பும் இனப்பற்றா அல்லது அல்லாத வார்த்தைகளைக் கேட்டு உண்டாகும் அருவருப்பு மட்டுமா என்னும் உணர்ச்சிக்குழப்பம்.

அளவற்ற ஹாஸ்டல் சுதந்திரம். தன்னிலை மறந்த தேடல். விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு டெல்லிக்கு இரயிலேறுகிறான். சுதந்திரமாக உணர்கிறான். இப்படித்தான் உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இதை சொன்னால்தான் உன்னால் 'அவர்களுள்' ஒருவராக ஆக்க முடியும்; இப்படி நடந்து கொண்டால்தான் நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய் என்னும் கட்டுப்பாடுகள், அதிகாரபூர்வமற்ற விதிமுறைகள் இல்லை. முன்முடிவுகள் கிடையாத உலகத்தில் பரிகசிக்க ஆரம்பிக்கிறான்.

'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; சுதந்திரத்தை எத்தனிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.

"மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்."




முன்னுரையில் இருந்து:
சாதிபேதமற்ற சமூகம் என்னும் பொய்க்கனவை சலியாமல் விதைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள். பொய்யை உண்டு வாழ்வதைக் காட்டிலும் பட்டினியில் இறந்துவிடுதல் உன்னதமானதென்று நினைக்கிறேன். தன்னளவில் இது முழுநாவலேயானாலும் என்னளவில் முதல் அத்தியாயமே ஆகும். முன் மதிப்பீடுகளற்று இதனை அணுகும் ஒவ்வொரு வாசகருமே இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை நிர்ணயிப்பவர்களாவார்கள்.
-பா. ராகவன்
ஜூலை 13, 2000

1. நாவலில் இருந்து சில பகுதிகள்

2. ச.திருமலை - RKK




| |

5 கருத்துகள்:

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

வெங்காயம் said...
பாஸ்டன் அவர்களே,

புவியிலோரிடம் நானும் படித்து இருக்கிறேன். நல்ல மொழிவளம். நடை அருமை. மறுப்பதற்கில்லை. நல்ல வாசக அனுபவத்தை வழன்ங்கி இருக்கிறீர்கள். மீண்டும் படிக்கத் தூண்டுகிறது உங்கள் அலசல்.

எனக்கு பாராமேல் சற்று கோபம் வந்தது இணைய படங்களைத் திருடி தனது கிழக்கு புத்தகங்களுக்கு பயன்படுத்திக் கொண்டபோதுதான், இப்போது அப்படி இல்லை என நினைக்கிறேன்.

மற்றபடி திருமலையைப்பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. ஏற்கெனவே போலியார் தனது பதிவில் அக்குவேறு ஆணிவேராக புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். உங்களின் உற்ற நண்பரின் முகத்திரை கிழிசலை சென்று படித்துப் பார்க்கவும். வீட்டு முகவரி, படம், வேலையிடம் என எல்லாமும் இட்டு கிழித்து இருக்கிறார் போலியார். பிகேசிவக்குமாரையும் விட்டு வைக்கவில்லை.

முகமூடி என்ற பதிவரின் விசயத்தில் உங்களுக்குத் தெரியாமல் ஏதும் நடந்திருக்க சத்தியமாக வாய்ப்பே இல்லை. பிராமன சார்பாக பேசாமல் நடுநிலையாக பதில் கூறவும். உங்களைப்பற்றி நல்லமாதிரியாக என் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

இந்த மறுமொழியினை ஆபாசம் என தாங்கள் கருதினால் தாராளமாக அழித்துக் கொள்ளலாம்.

The Link has been removed

\"பிராமணன் எச்சி இலை பொறுக்கித்தான் சாப்பிடணும்னு வேணா இப்போதைக்குச் சொல்லாமல் இருக்கலாம், ஜனநாயகத்திலே அவாளுக்குப் பிராமின்ஸ் ஓட்டும் வேண்டியிருக்கே\"


\"தன் குடும்பத்தில் யாருக்குமே ஏன் கல்வியில் நாட்டமற்றுப் போய் விட்டது என்று யோசிக்க ஆரம்பித்தான். பேய் மாதிரி துரத்தும் வறுமை தவிர வேறு காரணம் இருக்க முடியாது\"


\"வாழ்க்கைக்கு உதவாத எந்தவொரு அடையாளமும் இப்படி ஒரு அங்கீகார மறுப்பைப் பெற்றே தீரவேண்டும்\"


\"பின்னால் திமிர் பிடிச்சு அலைஞ்சான், அடுத்த ஜாதிக்காரனை மதிக்காமல் நடந்தான், இப்ப படறான் அவஸ்தை\"


\"தி.க காரா பூணூலை அறுத்தக் கையோடு, அத்தனைப் பிராmணனும் இனிமேல் பேக்வர்ட் காஸ்ட்டுன்னு சொல்லி சட்ட பூர்வமா அங்கிகாரம் வாங்கித் தந்துட்டான்னா, நான் கூட ஜீயரை விட்டுட்டு பெரியாருக்குக் கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவேன்.\"


\"பின் தங்கிய பிராமணனை எல்லாம் பேக்வேர்ட் கேஸ்ட்லே சேர்க்கட்டுமே சார், காசு பணத்திலே, படிப்பிலே, சமூக அந்தஸ்த்திலே பின் தங்கியிருக்கிற வர்கள் எஃப்·சி கம்யூனிட்டியிலும் உண்டே\"


\"எந்தக் கம்ய்ய்னிட்டியா இருந்தாலும் ஸ்கூல் ·பைனல் வரைக்கும் ·ப்ரீ எஜுகேஷன், அதன் பின் ஓப்பன் காம்படிஷன்\"


\"ஏழைகளில் ஜாதி கிடையாது, எல்லோரும் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள், பழக்க தோஷத்தில் நாங்கள் தோளில் மாட்டியிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.\"


\"உயர்ஜாதி மனோபாவம் என்பதை அவரவர் பணமும், விளை நிலங்களும்தான் தீர்மானிக்கின்றன, சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் எந்தப் பிராமணனும், பிச்சைக் காரனுக்குத் தண்ணீர் குடுத்த குவளையைத் தூக்கிப் போடுவதில்லை\"

\"என் ஆர் ஐயாக வந்து வியாபாரம் செய்தால் எ·ப்சி என்று பார்க்க மாட்டார்கள் அல்லவா\"


நெஞ்சத்தில் இருந்த பெரியார் வன்மம் மற்றும் பார்ப்பனீய ஆதரவு ஆகியவை கதையாக உருவெடுத்து இருக்கிறது பா.ராகவன் என்ற கிழக்குப் பதிப்பக பார்ப்பனருக்கு. கதை நன்றாக இல்லை. பார்ப்பனர்களுக்கு மட்டும் வேண்டுமானால் பிடித்து இருக்கலாம். சர்ச்சைக்குரிய கதை.

>>>>போலியார் தனது பதிவில்

bb which blog is referred to here?


.:dYNo:.

டைனோ... உங்களுக்குத் தெரியாதா :P மெய்யாலுமே அறியாதென்றால், தனி மடல் அனுப்புங்க.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு