திங்கள், ஏப்ரல் 03, 2006

வலேரியா

எல்லோரும் புதுசு புதுசாய் வலைச்சொல்லகராதி போட்டுத் தாக்குகிறார்கள். ப்ளாகஸம், ப்லோகாயதம்... மலேரியா போல் வலேரியா பிடித்தவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

1. பிடித்த மேற்கோள்: ராபர்ட் ஃப்ராஸ்ட்

"அட... ஆமா! நீ என்ன சொல்ல வரேன்னு விளங்குதே" என்று மக்களை சொல்லவைப்பது இலக்கியத்தில் நமது தொழிலாகும். அவர்களுக்குத் தெரியாததை சொல்வதோ, அல்லது தெரிந்தும் நினக்க மறுப்பதை கூறுவதோ அல்ல. நாம் சொல்ல வருவதுடன் அவர்கள் அடையாளம் காணவேண்டும். (நன்றி: கவிதை : பகுதி 7 - உணர்வு ஊக்கம் கொடுத்த கருத்து : 'நான் எழுதலாம் என்று..')
(A word about recognition: In literature it is our business to give people the thing that will make them say, "Oh yes I know what you mean." It is never to tell them something they dont know, but something they know and hadnt thought of saying. It must be something they recognize.)


2. சமீபத்தில் கருத்தைக் கவர்ந்த புத்தகங்கள்

 • The Great Transformation : The Beginning of Our Religious Traditions (Armstrong, Karen) - மதங்கள் ஏன் வந்தது, எப்படி உருமாற்றம் ஆனது, கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

 • 50 Facts that Should Change the World : Jessica Williams - அதிரடியான புள்ளிவிவரத்தை உள்ளடக்கமாக வைத்துக் கொண்டு, ஆழமாக உள்ளே அலசுகிறார். (இந்தியாவில் 4.5 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்)

 • Impossibility : The Limits of Science and the Science of Limits : John D. Barrow - பரவலான தலைப்புகள்; அறிவியல், கணிதத்துறைகளில் ரொம்ப நுட்பமாக விளக்காமல் உளவியல் தொட்டு அறிமுகம்.

 • Big Questions in Science : Harriet Swain - யோசிக்க சொல்லும் கேள்விகள்; சுவாரசியமான நடை.

 • Is It Just Me or Is Everything Shit?: The Encyclopedia of Modern Life - 'Lost in Translation' திரைப்படத்திற்காக சோஃபியா கொப்போலாவை கவனிப்பதற்காகவே நூலகத்தில் முன்பதிவு செய்து வைத்திருக்கிறேன் ("a supercilious rich-kid auteur who does pseudo-profound confections that people initially twat themselves over but which, on second viewing, are the cinematic equivalent of unflavoured rice cake")

 • The Know-It-All : One Man's Humble Quest to Become the Smartest Person in the World - A. J. Jacobs - ;-)) மற்ற எதையும் புரட்டாவிட்டாலும், இதை ஒரு முறைப் புரட்ட்வும்

  |

 • 3 கருத்துகள்:

  இவ்வளவு படித்தீர்களே, ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் சாராம்சமாக நாலு பத்தி எழுதினால், எங்களுக்கு நேரம் (மற்றும் செலவு) மிச்சமில்லையா?

  பி.கு: check out the right side of the front page of my blog... :-)

  கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் புத்தகம் நண்பரின் வீட்டில் புரட்டியது. அங்கேயே அறிமுக, முதல் மற்றும் கடைசி இரு அத்தியாயங்களைப் படித்து விட்டு, இந்த மிகச் சிறிய குறிப்பு நினைவூட்டலாகப் போட்டுக் கொண்டேன்.

  மற்ற எல்லா புத்தகங்களுமே விழைப் பட்டியலாக மனைவியிடம் மனு கொடுக்கவும்; நிராகரிக்கப்படும் பட்சத்தில் நூலகத்தில் கிடைக்கும்போது படிக்கவும் வாகாக குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

  கடைசி புத்தகத்துக்கு விமர்சனம் எழுத முடியாது. அவ்வப்போது பாத்ரூமில், அல்லது என்னுடைய வலைப்பதிவு போன்ற மெதுவான பக்கங்கள் லோட் ஆகும் சமயத்தில் படிக்கலாம்; ரசிக்கலாம்.

  John D. Barrow & Harriet Swain-க்கு வெங்கட், ரோஸா போன்றவர்கள்தான் சரியான ஆசாமிகள். எனக்குப் பிடித்திருக்கிறது; நடை & சாதாரணனுக்கு எட்டும் விதமான அறிவியல் நுட்பங்கள். அவர்கள் இந்தத்துறையில் குப்பை கொட்டுவதால் சரியான 'வாசக விமர்சனம்' கொடுப்பார்கள்.

  ---right side of the front page of my blog----

  சொல்ல மறந்துட்டேனே... நன்றிப்பா :-)

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு