புதன், ஏப்ரல் 26, 2006

How Balaji Wrote Blog, Translate Stuff and Made up Gilli

காவ்யா என்ன செய்து விட்டார்(ள்)
எழுதியவர்: பாஸ்டன் பாலாஜி

(கா) இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முழு உரிமை, ஆசிரியரை (அதாவது என்னைச்) சாரும். இக்குறிப்பிட்ட கட்டுரையில் இருந்து பகுதிகளை எடுத்தாள்வதோ, சில பகுதிகளை மட்டும் பயன்படுத்துவதோ, வேறு வகைகளில் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின் ஊடகங்களில் மறு பதிப்பிடுவதோ, கப்புரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும். மதிப்புரைகள், விமர்சனங்களின் தேவைக்கேற்ப இந்நூலின் சில பகுதிகளை மேற்கோளாக எடுத்துக்காட்டுவது இவ்வகையில் சேராது.

காவ்யா விஸ்வநாதன் என்று ஓர் இளம் படைப்பாளி. அவரின் நாவலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு படைப்பாளியின் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் எழுந்துள்ளதையொட்டி சர்ச்சை எழுந்துள்ளது. அந்த படைப்பாளியின் எழுத்தைப் படித்திருப்பதாகவும், அவரது கதை தான் மிகவும் ரசித்தவை என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் உணராமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் சொன்னாலும் பிரச்சினை சால்வ் ஆகப் போவதில்லை. ஏனெனில் காவ்யா செய்தது முறையான பயன்பாடு (fair use) என்பதன் அடியில் வராது. அவர் எழுதியது அந்த கதையைக் கிண்டல் செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய படைப்புக்கும், அந்த படைப்புகளுக்கும் கதையின் மையக்கரு, கதாபாத்திரங்கள், கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே மாதிரியான கதைக்கருவினை பல கர்த்தாக்கள் எழுதலாம். ஒருவருக்கொருவர் அறியாமல் இது வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நாவல் வெளிவருவத்ற்கு முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, காவ்யாவும் அவற்றைப் படித்துள்ளார். பின் இது எப்படி நடந்திருக்கும்.

ஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் சில பக்கங்களும், நாவலின் சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம் கையொப்பான பின்னர்தான் முழு கதையும் விட்டார். அதை செப்பனிட ஒரு நிறுவனம் உதவியிருக்கிறது. படைப்பாளியின் எழுத்தை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லது கதையை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும் நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.

அவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் சிந்திக்காமல் சேர்த்திருக்கலாம்.

இது போன்ற சர்ச்சைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் ஆதாரங்களைக் குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமா என்ற அய்யம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். கதை எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்ற துப்புகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் விஷயம் எழுந்திராது.

சட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது எண்ணங்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. விளக்கமாக சொல்லும் சொற்றொடரின் வடிவின் (expression) மீது தான் பந்தம் கொண்டாட முடியும். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது எண்ணமென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் கதை எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது. அதை வைத்து நான் ஒரு கதை எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.

இதில் காவ்யாவின் பங்கைவிட கதையை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டாலும் காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் கதாசிரியர் என்று கூறிக்கொண்டவர், அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான் இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற வழக்குகள் போடப்பட்டால் அவற்றிற்கு கதாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை, நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை போட்டிருப்பார்கள்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வாக சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

இப்போது தேடியுள்ள சுட்டிகளை வைத்து இவ்வளவே எழுத முடியும்.


பாலாஜி என்ன செய்து விட்டார்(ன்)

வலைப்பதிவில் புகழ்பெற்ற பாலாஜி ரவி ஸ்ரீனிவாசின் குறிப்புகளில் இருந்து அப்படியே திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு காவ்யா விஸ்வநாதனின் புத்தகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து ரவி எழுதினார். இன்று அதைக் குறித்து எழுதிய பாலாஜி, ரவியின் கட்டுரைய அடியொற்றி அப்படியே பிரதியெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இணைய நண்பர்கள் பாலாஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் 'இந்த செய்கை தன்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று' என்றார். "என்னுடைய வலைப்பதிவுக்கு ரவியின் கண்ணோட்டங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவரின் கருத்தோடு பல சமயம் ஒத்துப் போயும் இருக்கிறேன். என் எண்ணங்களை அவர் மொழியிலேயே எழுதுவது ஆச்சரியமும் வருத்தமும் அளிக்கிறது" என்று தொடர்ந்தார்.

குறிப்பிட்ட ரவி ஸ்ரீனிவாசின் பதிவை பாலாஜி படித்தும் இருக்கிறார்.

கில்லியில் பாலாஜியின் பதிவை எடுத்துப் போட்டிருந்த பிரகாஷ் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்போது, "ரவியின் பதிவோடு ஒப்புநோக்காமல் பரிந்துரைத்தது என்னுடைய தவறுதான். கில்லியின் அடுத்த பரிந்துரைகளில் கவனமாக இருக்கப் போகிறோம். இருவர் எழுதும் ஒத்த பத்திகளில் இருந்து மேற்காள் காண்பிக்க மாட்டேன்" என்று முடித்துக் கொண்டார்.



|

5 கருத்துகள்:

என்ன கண்றாவி இது ஒன்னும் புரியலை.

வழக்கம் போல சிநேகா, த்ரிஷா / இல்லே ரெண்டு லிங்கு போடாம என்ன தப்பு பழக்கம் இது.

:-))

யாரோ இதை இப்படிப் பகடி செய்யப் போகிறார் என்று ஊகித்திருந்தேன்...அதை நீர் தான் செய்யப் போகிறீர் என்பதையும் ஊகித்திருக்க வேண்டும்...

:-)

:) What is 'கப்'புரிமை?


.:dYNo:.

---என்ன கண்றாவி இது ஒன்னும் புரியலை.----

சில தகவல்கள்:
கில்லி - Gilli » Kaavya Viswanathan Acknowledges Using Portions of Another Author’s Book - Sujatha

வேலு, ஸ்ரீகாந்த், டைனோ __/\__

கப் - டைப் பிரச்சினைதான்!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு