செவ்வாய், ஏப்ரல் 18, 2006

NRI Perspectives - India Visit

சில என்.ஆர்.ஐத்தனமான படங்கள் எடுக்காமல் இந்தியா பயணம் நிறைவுறாது.


1.

கலைப்பொருள்களால் வீட்டை அலங்கரிக்க நினைத்தாலும், இந்தியாவில் பெரும்பணம் செல்வழிக்க வேண்டாம். எம்.எஃப். ஹூஸேன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்காவிட்டால் புத்தர், விநாயகர், இராஜஸ்தான் காட்சிகள் எல்லாமே சல்லிசு.


2.

வெண்டிங் மெஷின்களில் உணவு வரும்; பபுள் கம் கிடைக்கும். இந்தியாவில் புதுமையாக யோசிப்பவர்கள் நிறைய பேர் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'தி வீக்' மற்றும் 'இந்தியா டுடே' குழுமப் பத்திரிகைகள் கிடைக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் பைசாவை திணித்தால், படிக்க புத்தகம் ரெடி.

('தி வீக்'கில் இந்த வார தலைப்புக் கட்டுரை : Left turns right - A new Left is emerging. One that loves American capital and believes in beating the imperialists at their own game)


3.

டெல்லியில் இருந்து பிலானிக்கு செல்லும் காத்திருப்புகளில், இருவுள் வாயில் (ட்ரெயின்) நிலையங்களில் படுத்தே பழக்கப்பட்டவன். என்றாலும், விமான நிலையங்களில் கட்டையை சாய்த்து சயனிப்பது 'டூ மச்'. ட்ரைடெண்ட் பக்கத்தில்தானே இருக்கிறது... ஒரு எட்டு போய் ரூம் போட்டு தூங்கலாமே!


4.

வளர்ந்த நாடுகளில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வண்டிகளுக்கு பயபக்தியோடு வழிவிட்டு பாதுகாப்பாக செல்லும் வரை ஒதுங்கி நிற்பார்கள். வளர்ந்த நகரங்களில் ஆட்டோ ரிக்சா போன்ற ஊர்திகள் பயன்படும். வாரநாசியில் ஏழைப்பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போகும் மிதிவண்டி.


5.

"பகைவர்களும் வெறுப்பு உமிழ்பவர்களும், தங்கள் எதிரிகளுக்கு எத்தகைய கொடுமை நிகழ்த்தினாலும், தீவழியில் செல்லும் புத்தி தனக்குத் தானே நிகழ்த்தி கொள்ளும் கொடுமை, அதனினும் சாலப் பெரியது." - இலங்கை புத்தராலயத்திற்கு வெளியே கிடைக்கும் புத்திமொழி.


6.

பாசி பிடித்த தீர்த்தம்; பிச்சைக்காரன்; லாங் ஷாட்; இந்தியா ஒளிர்கிறதா என்று எதிர்க்கட்சி அரசியலும் India Charming என்று அயல்நாட்டுக்கார ஒளியோவியன் கண்காட்சி நிகழ்த்தவும் வாய்ப்பளிக்கும் காட்சி.


7.

'கல்யாண மாலை' போன்ற நிகழ்ச்சிக்கு விளம்பரம் போல் பட்டாலும் நிலைமாறும் உலகில் நிலைக்கும் செல்பேசிக்கான 'Lifetime Prepaid' அழைப்பு.


8.

  • காங்கிரஸ் ஆதரவு முலாயம் ஆட்சியில் மிருகவதையை எதிர்த்து மனேகா காந்தி உண்ணாவிரதப் போராட்டம் (அல்லது)
  • குண்டு சட்டியில் குதிரை (அல்லது)
  • மதுரை குதிரை வண்டியும் காசி குதிரைக் கொடுமையும்
    (பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுங்க)




    | |

  • 4 கருத்துகள்:

    வேலை வெட்டி இல்லாமல் போய் முழுத் தொகுப்பையும் ஓட்டிப் பார்த்தேன் - இவற்றைத் தவிரவும் சில படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

    இலங்கை போயிருந்தீர்களா?

    சாரநாத்தில் எல்லா நாட்டு புத்தராலயம் (மொனஸ்டரி) உண்டு. ஜப்பான், சீனா, ஸ்ரீலங்கா, திபேத் இருக்கிறது. தாய்லாந்து 2009/10 வாக்கில் முழுமையடைந்து விடும் என்கிறார்கள். (வாரனாசி டு சாரநாத் ==> 11 மைல் ==> 30 நிமிஷம்தான்.)

    நல்ல படங்கள்.
    நன்றி.


    பி.கு: ஆமாம்,மாடரேஷன் வந்துவிட்டதே, இன்னும் வேர்டு வெரிஃபிகேஷன் தேவையா?

    துளசி __/\__ :-)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு