செவ்வாய், ஏப்ரல் 18, 2006

Top 10 MPs - Tamil Nadu

செய்திகளில் அடிபட்டோ, அல்லது இமேஜை பரிபாலித்தோ, மந்திரியாக செயல்பட்டோ. கருத்து உருவாக்கியோ, என்னைக் கவர்ந்த தலை பத்து எம்பிக்கள்:

  1. என் எஸ் வி சித்தன் - 7000த்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பும் அளவு அசராமல் மக்கள் பிரதிநிதியாக செயல்படுபவர்

  2. ப சிதம்பரம் - ஹார்வர்ட், வர்த்தகம், நிதித்துறை மந்திரி, தமிழ் மாநில காங்கிரஸ், சிந்தனைகளை தமிழில் வடிக்கத் தெரிந்தவர்.

  3. ஏ கே மூர்த்தி - இருவுள் வாயில் அமைச்சராக பரவலாக அறிந்த முகம். தமிழ், சித்த வைத்தியம், விமானப் போக்குவரத்து என்று பன்முகப் பார்வையில் செயல்படுபவர்.

  4. ஏ வி பெல்லார்மின் - முதல் முறை லோக் சபா உறுப்பினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்களுக்கே உரிய அர்ப்பணிப்புடன் நாகர்கோவில்/கன்னியாகுமரியோடு நிற்காமல் சவூதி அரேபியாவில் தமிழர்களின் நிலை குறித்தும் மீனவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புபவர்.

  5. மோகன் பொன்னுசாமி - ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து கவனஈர்ப்புகள் கொண்டு வருபவர்.

  6. டாக்டர் சி கிருஷ்ணன் - பொள்ளாச்சி (தனி) தொகுதிப் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு

  7. ஈ வி கே எஸ் இளங்கோவன் - ஈவேரா, சம்பத் என்று குடும்பப் பாரம்பரியத்தில் காணாமல் போகாமல் தனித்துவமான வெளிப்பாடுகள் மூலம் தமிழக காங்கிரஸுக்குக் கூட எழுச்சி ஊட்டுபவர்.

  8. டி ஆர் பாலு - மிசா கைது, சூழலியல், போக்குவரத்து துறை அமைச்சர்

  9. மணி ஷங்கர் அய்யர் - லாஹூரில் பிறந்து, ஐ.எஃப்.எஸ். சேவை முடித்து, ராஜீவுடன் ஒட்டி உறவாடி, மந்திரியாகவும் மிளிர்பவர்.

  10. தயாநிதி மாறன் - லேட்டாக வந்தாலும்...



| |

4 கருத்துகள்:

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா அன்று பாராளுமன்றத்தில் இட்ட தமிழ் முழக்கம் தங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்!

ப.சி. க்கு முன்னமேயே இந்தியாவைக் கலக்கிய டி.டி.கே, யும் உங்களுக்குத் தெரியாததில் ஆச்சரியம் இல்லை!

மோஹன் குமாரமங்கலம், செங்கல்வராயன் இன்னும் பலர் உண்டு ஐயா!

'சிவா', வா அய்யா!
சிரித்து மகிழ!

நான் குறிப்பிட்டிருப்பது தற்போதைய உறுப்பினர்கள். (அண்ணா, ஜெயலலிதா என்று பட்டியல் போட பத்து போதாதே?)

எஸ்கே மிகக்குறுகிய காலத்தில் மன்றம் (ரசிகர்??) தொடக்க வைத்துவிட்டார் போல!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு