TN Media Watch - Dinakaran & Dinamalar
தினகரனும் தினமலரும் முதல் பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இரண்டிலுமே வலப்பக்கத்தில் தினசரியின் கடைசிப்பகுதியில் சம அளவில் வெளிவந்துள்ளது. தினகரனில் இந்த விளம்பரத்தைப் பெரிதுசெய்து பார்க்க இயலாது. தினமலரில் மட்டுமே முடியும்.
தினமலரில் இந்த பக்கத்தைப் பெரிதாக்க, பயனர் பெயரை பதிவு செய்தல் அவசியம். தினமணி தங்களின் நாளிதழ் விளம்பரங்களை இணையத்தில் வெளியிடுவதில்லை. தினத்தந்தியும் வெளியிடப் பெறவில்லை. இதில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.
எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான அட்சய திரிதியை குறித்த விளம்பரத்தில் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், பாம்பு பஞ்சாங்கத்தில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம்.
ஆனால், ஆற்காடு பஞ்சாங்கத்தில் காலை 6:03 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றும் பாம்பு பஞ்சாங்கத்தில் இரவு 10:58க்கு திருதியை முடிந்து விடுகிறது என்பதையும் எங்கள் ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்.
இரு தினசரிகளிலும் ஸ்னேஹாவே மாடல் புரிந்திருந்தார். தலையில் மல்லிகையும் இடுப்பில் ஒட்டியாணமும் நெற்றிச்சுட்டியும் வளையல்களும் சங்கிலிகளும் காணப்பட்டது.
ஒரு தரப்பு விளம்பரத்தை பெரிதாக்குவது, அல்லது சில போஸ்டர்கள் மட்டும் சுட்டி 70 எம்எம் ஆக்க வாய்ப்பளித்து நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே விளம்பரத்தை எப்படி கொடுப்பது என்று தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கலாம்.
ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்
பாஸ்டன் பாலாஜி
நோ அஃபென்ஸ் டு http://tnmediawatch.blogspot.com/ :-)
தினகரனில் வெளியான மினி சரவணா:
தினமலரின் மெகா சரவணா
தேர்தல் 2006 | TN Elections | தமிழ்ப்பதிவுகள்
//இரு தினசரிகளிலும் ஸ்னேஹாவே மாடல் புரிந்திருந்தார். தலையில் மல்லிகையும் இடுப்பில் ஒட்டியாணமும் நெற்றிச்சுட்டியும் வளையல்களும் சங்கிலிகளும் காணப்பட்டது
ஒரே சரவணா ஸ்டோர்ஸ் தானே. அப்போ ஒரே மாதிரி இருந்தாதானே மனசுல டக்குன்னு பதியும்.
//ஒரு தரப்பு விளம்பரத்தை பெரிதாக்குவது, அல்லது சில போஸ்டர்கள் மட்டும் சுட்டி 70 எம்எம் ஆக்க வாய்ப்பளித்து நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே விளம்பரத்தை எப்படி கொடுப்பது என்று தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தடுமாற்றம் என்று சொல்ல முடியாது.
Dinamalar displays the pages and does image slicing realtime. (uses asp.net)
Dinakaran works the old way of publishing. It uses the image maps and displays on new window when you click it. (output is simple .html)
This could be a reason for inconsistency.
Again if you notice dinakaran / tamil murasu pages are faster than dinamalar pages.
When you look dinakaran / tamil murasu image slicing wont be as perfect as dinamalar.
பெயரில்லா சொன்னது… 4/18/2006 05:36:00 PM
நுட்பமாக பதிலளித்த முகமிலிக்கு நன்றி.
சொன்னது… 4/18/2006 07:06:00 PM
பார்ப்பனர்கள் எப்போதுமே தினமலத்தைத்தான் ஆதரிப்பார்கள்!
பெயரில்லா சொன்னது… 4/18/2006 07:10:00 PM
Initially Dinakaran and Tamilmurasu provided bigger images for all the content in their website. But later they discontinued bigger images for ads. May be done to reduce the bandwidth.
Whenever you click a image in the Dinakaran and Tamilmurasu websites, it opens up a dynamic asp page containing a link to bigger version of the selected image. I have a greasemonkey script( http://saravanannkl.googlepages.com/TamilMurasuNewTab.user.js ) which changes links from dynamic asp page to the actual image. This reduces the server load and makes the page to load faster.
சொன்னது… 4/18/2006 08:36:00 PM
Dinakaran epaper is much better than dinamalar epaper bcoz of
1. No irritating login (even if u r logged in dinamalar takes u the login page and logs in again)
2. Pages dont go crazy if you click multiple times.
3. No sudden blank outs as in dinamalar
4. Pages load fast
5. Actuall frames work nicer here rather than non-frame version.
6. No annoying popups, video advts (which plays its audio if your speaker is turned on), no eye soring scroll news.
Dinamalar epaper is better than dinakaran bcoz of
1. you can view only the images published in given issue
2. you can also view the advts separately
-Nuke Nutpan
பெயரில்லா சொன்னது… 4/19/2006 06:16:00 AM
இத்தனை டெக்னாலஜி இருக்கிறதா!
வாசகனாக, தமிழ்முரசு/தினகரன் பக்கந்தோறும் படங்களுடன், வண்ணமயமாக, மிக விரைவில் கணித்திரையில் வந்து விழுகிறது.
தினமலர் மணல் கடிகாரத்தை காண்பித்து நிரம்ப விளம்பரங்களுடன், விஷய கனத்துடன் இருக்கிறது.
சொன்னது… 4/19/2006 09:47:00 AM
நல்ல அலசல்.
பெயரில்லா சொன்னது… 4/24/2006 05:02:00 AM
கருத்துரையிடுக