ஞாயிறு, மே 21, 2006

Da Vinci Code - Movie Experience

நான் இன்னும் 'டா வின்சி கோட்' புத்தகத்தைப் படிக்கவில்லை. மெத்தப் படித்த நண்பர்களின் கருத்துக்குத் தலைவணங்கி, 'என்றாவது ஒரு நாள் வெட்டி வேலாவ இருந்தால்' என்னும் பட்டியலில் சேமித்திருக்கிறேன். படம் பார்ப்பது சௌகரியம் என்பதால், திரைக்கு சென்று பார்த்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.


  1. டிவிடி வரும் வரை காத்திருந்திருக்கலாம். நிறைய 'கூடுதல் தகவல்கள்', 'பின்னணி விவரணப் படங்கள், 'ரான் ஹாவர்டின் கருத்துரை', டாம் ஹான்க்ஸின் விளக்கங்கள்' என்று படம் தெளிவாகப் புரிந்திருக்கும்.

  2. திரையரங்கில் கூட்டமே இல்லை. படம் சூப்பர் ஹிட்டாவது பெரும் சந்தேகமே.

  3. லூவர் அருங்காட்சியகம் அருமையாக இருக்கிறது. பாரிஸுக்குப் போ.

  4. திரைப்படம் ஆரம்பிக்கும் முன் போடும் முன்னோட்டங்களில் [ட்ரெயிலர்] ஜேம்ஸ் பாண்ட் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரப்போவதாக சொல்லியிருந்தார்கள். 'டாவின்சி கோட்' மாதிரி புத்திசாலித்தனமானப் படத்திற்கு முன் குளிர்கால ஆஸ்கார் பரிந்துரைப் படங்களின் முன்னோட்டங்கள்தானே வந்திருக்க வேண்டும் என்று யோசித்தது என்னுடைய தப்புதான்.

  5. கிறித்துவைக் குறித்துதான் லாஜிக் இல்லாமல் கதைக்கிறார்கள் என்று பார்த்தால், ஃப்ரென்ச் காவல்துறை, அறிவுஜீவி வில்லாதி வில்லன், துப்பறியும் சிங்கம் வழியில் குறுக்கிடுபவர்கள் அனைவருமே தமிழ்ப்படம் போல் கோட்டை விடுகிறார்கள்; துப்பாக்கி இருந்தும் வீழ்த்தப் படுகிறார்கள்; முப்படை கொண்டிருந்தாலும் ஹீரோ முன் நொறுங்குகிறார்கள்.

  6. அலகு குத்துவது, அங்கப்பிரதட்சிணம் செய்வது வைத்து, 'அன்னம்மய்யா கோட்' என்று திருப்பதி பாலாஜியைத் துப்பறிவதாக தமிழாக்கம் செய்து, ராஜ்கிரணும் 'சாமுராய்' அனிதாவும் (வீ நீட் எ ஃப்ரெஷ் ஃபேஸ் - உதவி இயக்குநர்), வில்லர்களாக காகா ராதாகிருஷ்ணனும் (Ian McKellen), தமிழில் முதன்முறையாக நானா படேகரும்(Jean Reno), எஸ்ஜே சூர்யாவும் (Paul Bettany) நடித்தால், ஹிந்துத்வாவை மீறி, படம் வெளிவருமா என்று தெரியவில்லை; மீறி வந்தால் ஹிட்டாகும்.

  7. திரைப்படம் பார்த்த பிறகு புத்தகத்தைப் புரட்டும் வாசகர்கள் அதிகரிக்கும்.

  8. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருந்தாலே மில்லியனராகி இருப்பார்கள்.

  9. பிரான்ஸில் உல்லாசப் பறவையாக ஹீரோவும் ஹீரோயினும் திரிந்தாலும், ரதியும் கமலும் செய்த ரொமான்ஸ் கூட செய்யாம,ஃப்ரென்ச் கிஸ் அடிக்காம இருப்பதுதான் படத்தின் best kept suspense (& the spolier).

  10. We are in the middle of a war. One that has been going on forever to protect a secret so powerful that if revealed it would devastate the very foundations of mankind. என்று படத்தில் உதிர்ப்பதை
    'மோசமான படத்தின் நடுவில் நாம் இருக்கிறோம். எப்போது முடியும் என்றே விளங்காத மாதிரி நீட்டி முழக்குபவர்கள், நீளத்தை மட்டும் சொல்லியிருந்தால், அதிர்ந்து எழுந்திருந்து பக்கத்து தியேட்டரில் கலக்கும் 'ஓவர் தி ஹெட்ஜ்' போய்விடுவோம்'
    என்று டயலாகிருக்கலாம்.



| |

13 கருத்துகள்:

I saw it.
Horribly made. Planning to write in detail later.

Balaji

The heroine is the Ellu-Kollu Pethi of Jesus Christ, so no bed room sceneces for the heroine even in the novel. Who said Dan Brown denigrated Christianity, in fact he preserved the chastity of that ellu pethi throughout his novel, what else one could expect from him? Church should be happy about the way he dealt the heroine. In the novel, finally the author magnanimously allows the Professor to kiss the Cryptographer heroine the ellu pethi of Jesus Christ. I am still wondering how a dialogue intensive novel like this could be made into a film that anybody can patiently watch.

Thanks
Rajan

//ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருந்தாலே மில்லியனராகி இருப்பார்கள்.//

இது ரொம்ப ஓவர். டா வின்சி கோட் படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள்.

பரிசுத்த ஆவி உங்களை ரட்சிப்பதாக. :-)


- Suresh kannan

நண்பர் கட்டாயம் போக வேண்டும் என்றார். சரி என்று சொல்லி விட்டு, பின்னர் டொமெட்டோ மீட்டரில் 22% என்று பார்த்து விட்டு ஜகா வாங்கி விட்டேன். நண்பர் தனியாகப் போய்ப் பார்த்து விட்டு வந்து, 'கடி...டாம் ஹாங்க்ஸ் இப்படி சொதப்புவான்னு எதிர்பார்க்க்ல' என்றார்.

புத்தகம் சுவாரசியமாக இருந்தது. நிறைய உப/கிளைக் கதைகளோடு, தெரியாத/புரியாத விஷயங்களை நிதானமாக விளக்கியதால் போரடிக்கவில்லை. படத்தில் அந்த நிதானமே எதிரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//புத்திசாலித்தனமானப் படத்திற்கு முன் குளிர்கால ஆஸ்கார் பரிந்துரைப் படங்களின் முன்னோட்டங்கள்தானே வந்திருக்க வேண்டும்//

you are waaaay overthinking this... :-)

//ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருந்தாலே மில்லியனராகி இருப்பார்கள்.//

உண்மை.

ஸ்ரீராம்... நானும் பார்த்தேன். 'பாஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்' மாதிரி நன்றாகவே ஓடியிருக்கிறது. இன்றைய நியு யார்க் டைம்ஸில் இருந்து:

Cannes Film Festival - New York Times: "So, 'The Da Vinci Code,' Ron Howard's critically skewered and roasted film adaptation of the Dan Brown book earned, according to a news release put out by Sony on Sunday, an estimated '$224 million in worldwide box office receipts during its first three days of theatrical release' and delivered '$77 million in U.S. ticket sales,' thereby giving the company its 'biggest worldwide opening ever.' Does this mean that critics are out of touch with the public? Maybe, but really, who cares? All that box office doesn't make it a good movie."

நந்தன், புத்தகமும் படித்து இருக்கிறீர்களா? அவசியம் எழுதுங்க; ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

சுதர்சன், சுரேஷ் கண்ணன், ஸ்ரீகாந்த்... __/\__

பாலா,
புத்தகம் நன்ராக இருக்கிரது. இதை வைத்து படம் பண்ணுவது கடினமாகத்தான் இருக்கவேண்டும். ரான் ஹாவர்டின் டாக்குமெண்டரி யுக்திகள் கைகூடுமா தெரியவில்லை.

ராஜன் சொன்னது போலா எள்ளு பேத்தி என்பதால் ஹீரோயினை தொடவில்லை என்பதைவிட அடுத்த நாவல்களுக்கு ஹீரோ முக்கியமென்பதால் விட்டுவைத்திருக்கலாம். ராபர்ட் லாங்டன் இவரது ஆஸ்த்தான ஹீரோ. ப்ளேபாயாய் இவரை காண்பிக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
பெண்மையின் புனிதத்தை பெரிதும் பேசும் இவர் பல பெண்களை பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி?
கதை ஓடும் வேகத்தில் இவர்களுக்கு அதற்கு நேரமேஇல்லை. ஜேம்ஸ்பாண் பட முடிவில் வருவது போல ஏதாவது எதிர்பார்த்தீர்கள் போல.

Bala,
I have read the book and also managed to catch the movie over the weekend. I didn't have high expectations...so the movie disappoint me. It is really unjustified to expect a movie to meet the expectations of those who have read the book. Both mediums are different and each one has its own limitations.

ennaku padam pudichuthu...
antha kiss adikra matter ennaku thonave illa...
romba naala nalla tamil cinema pakkatha thoda effect

சிறில்... புத்தகத்தில் இருக்கும் அடர்த்தியான தகவல்களை கொஞ்சம் சாய்ஸில் விட்டிருந்தால், த்ரில்லருக்கே உரிய வேகத்துடன் படம் நகர்ந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், விஷயங்களை சொல்லாவிட்டால், நம்பகத்தன்மை (ஆதாரமின்மை) என்னும் குரல் எழுப்பியிருப்பேன் ;-))

----didn't have high expectations...so the movie disappoint me----

ஆஹா... நெத்தியடி. எதிர்பார்ப்புதான் பிரச்சினையே

வில்லன், உங்களின் பெயருக்கேற்ற புகைப்படம் :-)

நானும் பார்த்தேன் .. எனக்கு பிடித்திருந்தது .. புத்தகத்தின் அளவிற்கு எந்தப்படத்தையுமே எதிர்பார்க்கமுடியாது. நமது கற்பனையை எப்படி இன்னொருவரால் படம்பிடிக்க முடியும் :)
ஆனால் ஏமாற்றம் ஏதுமில்லை...
இங்கே(சான் உசே) படத்துக்கு (இரண்டாம் நாள்) அநியாய கூட்டம் .. வரிசையில் நின்று உள்ளே போகும்படி இருந்தது.

முகமூடி சென்ற திரையரங்கிலும் பெருங்கூட்டம் என்றிருக்கிறார் சுகா.

நம்பி, புத்தகத்தைப் படித்த பெரும்பாலானோருக்கு படம் ஏமாற்றவில்லை போல!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு