Maaya Valai - Kumudam Reporter
பா ராகவன் அடுத்த தொடர் ஆரம்பித்து விட்டார். மாய வலை. முதல் வாரத்திலேயே 'ஓம்' போன்ற வித்தியாசமானவர்களை சொல்லி கட்டிப் போடுகிறார். நூறு வாரங்களுக்குக் குறையாமல் ஜபடிஸ்டாவில் ஆரம்பித்து அபு சாயஃபுக்குத் தொடர்பைக் காட்டி பாஸ்க், கஹானே சாய், டெவ் சோல் என்று ரவுண்ட் கட்டி ஆடுவார் என்று ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.
இரண்டாவது பகுதியில் இருந்து....
எதேச்சாதிகாரத்துக்கு எதிரான போர். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம். அடக்குமுறைக்கு எதிரான துவந்த யுத்தம். ஆனால் இவர்கள் யோசிக்கத் தவறும் விஷயம், பிரெஞ்சுப் புரட்சியின்போதோ, ரஷ்யப் புரட்சியின்போதோ, புரட்சியின் நோக்கம் மக்களாட்சி என்பதாக மட்டுமே இருந்தது என்பதுதான்! தவிரவும், இந்தப் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு எதிராக, அமைதியான வழியில் மட்டுமே போராட்டத்தைத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். போராட்டத்தின் உச்சகட்டக் காட்சிகள் மட்டுமே நேரடி யுத்தமாக இருந்தன. போராட்டத்தில் எந்தப் பொதுச்சொத்தும் சேதமானதில்லை என்பதும், அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்பட்டதில்லை என்பதும், கொடூரமான கொலைவெறிக் காட்சிகள் தினத்துக்கு ஒன்றாக அரங்கேறியதில்லை என்பதும் இதன் பின்னிணைப்புகள்.
புரட்சி என்ற சொல்லின் அர்த்தமே மாறிவிட்ட காலகட்டத்தில், தீவிரவாதத்தின் பாடு குறித்துச் சொல்லவேண்டாம். அந்தக் காலத்தில் புரட்சியாளர்கள், மக்களின் ஆசியுடன், மக்கள் மத்தியிலிருந்தே தோன்றினார்கள். இன்றைய தீவிரவாதிகள் உருவாகக் காரணமாக, சமூக விஞ்ஞானிகள் முன்வைக்கும் காரணங்களைப் பார்த்தால் மூச்சு முட்டும்.
ஏழைமை. கல்வியின்மை. பசி. இவற்றின் மீது ரகசியமாக ஏற்றப்படும் மதவெறி என்கிற விஷ ஊசி. இதன் விளைவாகப் பீறிடும் கோபத்தை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். இந்தக் கோபம், எங்கெங்கோ மூலைகளில் எத்தனையோ பல தனிமனிதர்களுக்கு உருவாவதாகவே இருந்தாலும், இதனை ஒன்று சேர்ப்பது பெரிய விஷயமல்ல என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.
Kumudham | Terrorism | தமிழ்ப்பதிவுகள்
கருத்துரையிடுக