Daedalus & Kamalhasan
நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்ற ஆங்கில வார்த்தையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது daedal பொருத்தமானதாகப் பட்டது. வார்த்தையின் மூலத்தைப் பார்த்தபோது eponym என்கிறார்கள்.
அதாகப்பட்டது...
An eponymous adjective is an adjective which has been derived from the name of a person, real or fictional. Persons from whose name the adjectives have been derived are called eponyms.
தொகுப்புகளைத் தவிர வேறெங்கும் சிறுகதைப் படிப்பதை விட்டுவிட்டதால், கமலின் ஆனந்த விகடன் கதையைத் தவறவிட்டிருந்தேன். கடகடவென்று படித்து முடித்தேன்.
ஆரம்ப விமர்சகனாக கடுமையாக வாசக அனுபவத்தை முன்வைக்க மனம் துள்ளியது.
"கமல் என்னும் daedalus எழுதியிருக்காவிட்டால் இந்த மாதிரி பதிவெழுதி வாசகரை வரவழைப்பேனா" என்றார் பதிவை படித்த கமல்.
"ஆம்! இது சக பதிவர் பார்க்கும் பதிவு" என்றேன்.
"சில சமயம் வாசகர்களும் பார்ப்பாரே" என்று சிரித்தார். "பார்ப்பார்கள். உங்க பெயருக்காக படிப்பார்கள். நீங்கதான் ஹீரோ! உங்க கிறுக்கல், உங்க கதை."
"சரி, புராணமெல்லாம் ரொம்ப புரட்டறீங்களா?" என்றேன்.
"ம்...?"
"நாலைந்து கருத்துக்களை வெட்டி ஒட்டி தந்துட்டீங்களே?"
நான் சற்றும் எதிர்பாராத பதில் தந்தார்.
"நான் கற்பிழந்த நாள்."
"ஓ! நவீன இலக்கியவாதி பரிச்சயம் இருந்தாலும் கற்பு எல்லாம் உங்க vocabulary-இல் இருக்கிறதா?"
"என்னை மாதிரி எழுத try பண்றே" என்றார்.
"In what way? Style or stuff?"
"ஸ்டைல்தான் யதார்த்தமாய் இருக்கிறதே?"
"உண்மைதான். ஸ்டஃப்?"
"புதுசா யோசிக்கலை என்கிறாயா?"
"நியாயப்படுத்துகிறாயா, கருப்பொருளை வைத்து நாலு புல்லட் பாயிண்ட் இடுகிறாயா, கவிதையை சிறுகதையாக்கினாயான்னு கேக்கறேன்?"
"Inspiration" என்றார் வீம்புக்காக.
சிரித்துவிட்டு, "முன்பு ஒரு காலத்துல சொக்கன் எழுதிய மாதிரி புத்திசாலித்தனம், புது விஷயம் எதுவும் இல்லியே?"
"Why not?" என்றார் விட்டுக் கொடுப்புடன்.
"உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வரி விமர்சனம்... 'நோட்பேடில் நாலு வரி கிறுக்கல் - எப்படி?"
"Too much!"
"ஏன்?"
"Why not?"
"கதையின் கரு உனக்கு முன்பே தோன்றியிருக்கா?"
"இப்படியெல்லாம் யோசிச்சு time waste செய்யணுமா?" என்றேன்.
"Agreed. நீ என்ன சொல்றே? ஏன் அப்படிச் சொல்றே? அப்படிச் சொன்னதுக்கு என்ன காரணம்?"
"ஓ! விமர்சனத்தின் கூறுகளையும் விமர்சகர்களின் லட்சணங்களும் எப்படின்னு கேக்கறீங்க? சொல்றேன். credentials கேட்டீங்கன்னா, அச்சுப் பத்திரிகையில் வெளியானது ஒண்ணுமில்ல. ஆனா, கருத்துக்கள் பதிவர் சாட்சியா உண்மை."
"அப்பிடின்னா?"
"இது எனக்கு சிற்றிலக்கியவாதிகள் சொன்ன டெக்னிக்."
"ஓ! உன் மனசு சொல்லவில்லையா?" என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.
"இல்ல... என் மனசு எனக்குப் பழக்கமில்லை. ஆனால், பதிவர்கள் வேறு விஷயம்."
"ஓஹோ! பதிவர் உங்க நண்பரா?"
"ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. எப்பவாது நாலு வார்த்தை ஆங்காங்கே படிப்பேன். அந்தரங்க ரகசியங்களை கிசுகிசுக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலை எழுத்தாளர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் உறுப்பினரா இருக்காரு."
"Wow! Cool Confessions?"
"No, a cold truth" என்றேன்.
துவங்கினேன்... "பதிவர் எழுதியபடி அதிக புனைவோடு சொல்றேன்."
"கதையில் ஆங்கிலக் கலப்பு தூக்கல். சினிமா மாதிரி டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்தறீங்க" என்று விமர்சிக்க ஆரம்பித்தான் பதிவன்.
"Attribute எல்லாம் பட்டியலிடுவது போல் அக்னி என்னும் noun-ஐ வைத்துக் கொண்டு முன் பின் சென்று கொஞ்சம் ஸ்பானிஷ் மொழிப் படம் போல் அவார்டு கதை எழுத முயற்சித்து இருக்கீங்க.
ரெண்டு பேர் பேசறது மாதிரி சின்னக்கண்ணன் ரோஸி மாடசாமி என்று நாய்களை வைத்து இதைவிட பெட்டரா எழுதுவார்.
ஆனா, அவர் மருதநாயகம் எடுக்கப்போறேன் என்று அறிவிப்பு விடுவதில்லை.
நண்பர்களுக்கிடையே எதற்கு பிராமணா பாஷை?"
"சரி! கிறுக்கல் என்பதற்கு காரணமென்ன? இது விமர்சனம், ஞாபகமிருக் கட்டும்" என்று ஞாபகப் படுத்தினார்.
பின்னூட்டத்தின் எரிச்சலைக் காட்டாமல் பதிவன் பதில் பதிவு எழுதலானான்...
"செவ்வாய்க்கு விடப்படும் விண்கலம் தன் பாதையில் இருந்து வழுவி திங்கள், புதன், வியாழன், வெள்ளி, என்று கோள்தோறும் வலம் வந்தால் நாஸாவிற்கு லாபம்தான். கதை இலக்கற்று பல தகவல்களை நிரம்பியிருந்தால் வாசகனுக்கு லாபமே. ஆனால், அதற்குப் பெயர் புராண தகவல் கோர்வை. சிறுகதை என்று சொல்லி சிறுமைப்படுத்தினால், ஒருசில இணையக்குப்பைகளே மேல் என்னும் முடிவுக்கு உங்கள் ரசிகர்கள் வந்துவிடக் கூடும். அதன் பின் திருட்டு விசிடியில் கூட வேட்டையாடு விளையாடு பார்க்க மாட்டார்கள்.
கமல் என்னும் நடிகனின் ஆளுமை என்று கட்டுரை ஆரம்பித்து, நான் களத்தூர் கண்ணம்மாவை தூர்தர்ஷனில் மின் தடங்கல் இல்லாமல் விளம்பரம் வாராமல் டிவோ பதிவு செய்யாமல் பார்த்த கதை; விருமாண்டியில் 'உன்னை விட' மாதிரி இரவில் காதலியுடன் பைக் ஓட்டியபோது போலீஸ் எஃப்.ஐ.ஆர். கோப்பாக்கிய தரவு; ஆகவே, வேலை பார்க்காமல் சிறுவனாகவே மனத்தளவில் இருந்திருந்தால் பைக் மேல் காதல் தொடர்ந்திருக்கும் என்று எழுதினால் எப்படியிருக்கும்?"
தன் எழுத்தையே வருகையாளர்களின் தூண்டிலாக ஆக்கினான் பதிவன் என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.
விவாதம் தொடர்ந்தது.
ஆனந்த விகடன் சுட்டி: அணையா நெருப்பு - கமல்ஹாசன்
கமல் குறித்த முந்தைய புனைவு: கமல் கண்ட கனவு
தமிழ்ப்பதிவுகள்
என்ன ஓய், சும்மா பூச்சி காமிக்கிறீர்...கதை எல்லாம் நல்லாத்தான் இருந்தது - ஒரு சற்று புதுமையான மையக் கருத்து, அதைச் சுற்றி சில பின்னல்கள், எல்லாத்தையும் சேர்த்து சொல்ல ஒரு உரையாடல் கலந்த நடை - படிக்க சுவாரசியமா இருந்தது. உம்முடைய இந்தப் பதிவைப் போல இல்லாம, கொஞ்சம் புரியவும் செஞ்சுது... :-)
சொன்னது… 5/23/2006 01:22:00 PM
உங்க சண்டே போஸ்ட் படிச்சேன் :-)
சொன்னது… 5/23/2006 01:51:00 PM
கமல்ஹாசன் எழுதிய கதை வடிவிலேயே ஒரு விமர்சனமா?!
நடத்துங்க.
நல்லாத்தான் இருக்கு.
:)
சொன்னது… 5/23/2006 05:33:00 PM
மிக்க நன்றி பச்சோந்தி!
சொன்னது… 5/24/2006 08:46:00 AM
உங்க "கடுப்ப" இவ்வளவு வெளிப்ப்டையாக் காட்டியிருக்க வேண்டாமோன்னு தோணுதுங்க! ;)
சொன்னது… 5/24/2006 09:36:00 AM
கதை ரொம்பப் பழசு என்று பட்டது. இந்தக் கருத்தை நான் 80களின் ராமகிருஷ்ண விஜயத்திலேயே படித்திருக்கிறேன். கமல் என்ற ப்ராண்ட் எழுதியதால் வெளியாகியுள்ளது. நான் என்னும் ப்ராண்டு கருத்தியதால், உங்களுக்கு 'கடுப்பு' என்று தோன்றுகிறது?
சொன்னது… 5/24/2006 10:16:00 AM
* இந்தக் கருத்தை நான் 80களின் ராமகிருஷ்ண விஜயத்திலேயே படித்திருக்கிறேன். *
உண்மையைச் சொல்லுங்கள் - வெறும் 'கருத்து' என்பதற்காக மட்டும்தான அந்தச் சிறுகதையை வெளியிட்டிருப்பார்கள்?
நானும் ராமகிருஷ்ண விஜயம் படித்து வளர்ந்தவந்தான்! கமல் எழுதியதன் 'உள்ளீடு' ராமகிருஷ்ண விஜயம் மாதிரி இதழில் வெளியிடுவார்கள் என்று நீங்கள் சொல்வது Extremely funny!
* கமல் என்ற ப்ராண்ட் எழுதியதால் வெளியாகியுள்ளது. *
"வெளியாகிற" எல்லாமே - அதாவது வெகுஜன ஊடகங்களில், "விற்கிற" தன்மை உடையதா என்று பார்த்துதான் வெளியிடுகிறார்கள்!
* நான் என்னும் ப்ராண்டு கருத்தியதால், உங்களுக்கு 'கடுப்பு' என்று தோன்றுகிறது?
இல்லை - இப்படிப் புரிந்துகொள்ளலாம் :
"கமல்" என்ற "கருத்தியத்தால்" - உங்கள் படைப்பு "இப்படி" அமைந்துள்ளது! :)
சொன்னது… 5/24/2006 10:40:00 AM
விரிவான மறுமொழிக்கு நன்றி.
---'உள்ளீடு' ---
நீங்க உணர்ந்த உள்ளீட்டை எங்களுக்கும் சொன்னால், பயன்பெறுவோமே (தெரிந்து கொண்டே 'போட்டுப் பார்க்க'வில்லை. கவிதையைப் போன்ற கதையில் இருந்த உங்க takeaway-ஐயும் அறிய எண்ணம் :-)
சொன்னது… 5/24/2006 12:16:00 PM
கருத்துரையிடுக