வியாழன், மே 04, 2006

Elections - 2060

தேர்தல் 2060 - சில குறிப்புகள்

தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டியில் என்னுடைய பதிவு:

 1. 2060-இல் ஒரு கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கும்?

  • 1
  • 100
  • 1000
  • தலா ஒரு குடும்பத்துக்கு ஒரு கட்சி என்று பார்த்தால்...


 2. 2060-இல் தேர்தல் எப்படி நடக்கும்?

  • இணையம்/தொலைபேசி/கணினிகள் மூலம்
  • வாக்குசாவடிதான்
  • கருத்துக் கணிப்புகள் மூலம்
  • தேர்தலா???


 3. 2060-இல் வெற்றிவாய்ப்புள்ள பெண் வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடுவார்கள்?

  • தொகுதிக்கு ஒருவராவது
  • மாவட்டத்துக்கு ஒருத்தர்
  • மாநிலத்துக்கு ஒருத்தர்
  • பெண் வேட்பாளர் என்று கணக்குப் பார்ப்பது அருகி விடுமளவு பரவலான பங்களிப்பு


 4. 2060-இல் வேட்பாளர் தேர்வில் எது முக்கியமாகக் கருதப்படும்?

  • ஜாதி
  • பணம்
  • வாரிசு
  • ஒவ்வொரு வேட்பாளரும் கட்சியின் உள்-அமைப்பு (primary) தேர்தலில் வெல்வது


 5. 2060-இல் கருணாநிதியின் எந்த வாரிசின் கையில் திமுக இருக்கும்?

  • திமுக (மாறன்)
  • திமுக (ஸ்டாலின்)
  • வாரிசு அல்லாத - திமுக (வைகோ)
  • ஹூ இஸ் கருணாநிதி?


 6. 2060-இல் ஊடகங்கள் எப்படி தேர்தலை கண்காணிக்கும்?

  • உள்ளூர் வலைப்பதிவுகளுக்கு, வேட்பாளர்களின் தினசரி அரட்டை நேரம்
  • தொலைக்காட்சியில், அரசியல் கட்சித் தலைவர்களின் நேரடி விவாதம்
  • தேர்தலை எல்லாம் ஊடகங்களில் பார்க்க எங்கே நேரம்? வீட்டுக்கு வீடு வருகை
  • அதே தினகரன்; தினமலர்; தி ஹிந்து; வலைப்பதிவு குமுறல்கள்


 7. 2060-இல் திரை நட்சத்திரங்களின் தாக்கம் எப்படி இருக்கும்?

  • ஐஷ்வர்யா ரஜினியும், ஸ்ருதி கமலும், முக்கிய கட்சித் தலைவர்கள்
  • விஜய்க்கு ஆயிரம் பில்லியனா? என்னும் வதந்திகளின் உலாவலோடு
  • சன், ஜெயா டிவிகளில் தேர்தலுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரித்த, முழுநீளப் படங்களோடு
  • விசிடி நட்சத்திரத்தைத்தானே கேக்கறீங்க?


 8. 2060-இல் எது முக்கியமான பிரச்சினை?

  • தற்பால் திருமணம், அரவாணிகளுக்கு சம உரிமை
  • தலித் ஒடுக்குமுறைகள், பிற்படுத்தப்பட்டவருக்கு உரிமை
  • இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு சல்லிசான விலையில் மகிழுந்து
  • சுற்றுச்சூழல் கொள்கை, உடல்நலப் பாதுகாப்பு வரைவு, வரிவிதிப்பு வித்தியாசங்கள், கல்வித் திட்டங்கள்


 9. 2060-இல் வலைப்பதிவுகளின் பங்களிப்பு என்ன?

  • ஒவ்வொரு முக்கிய கட்சிக்கும், நூறாயிரம் வலைப்பதிவுகள் இருக்கும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் சொந்தமாக, தினசரி வலைப்பதிவார்.
  • கட்சிகள், வேட்பாளர்களின் தகிடுதத்தங்கள் உடனடியாக அம்பலமாகி, வாக்காளரை சென்றடையும்.
  • கலவரங்களை ஒருங்கிணைக்கப் பயன்படும்.


 10. 2060-இல் தேர்தல்...

  • வன்முறை + வாக்காளரை மிரட்டல் + கலவரம்
  • நேர்மை + கொள்கை + கண்ணியம்
  • கூட்டணி + இனம் + அதிகார பலம்
  • I have better things to worry about...


| |

4 கருத்துகள்:

Questions are not so interesting :(

2060-ஆம் ஆண்டில் படித்துவிட்டு கருதுகிறீர்களா? அல்லது 2060 குறித்து 2006-இலேயே புலம்பலா என்னும் சலிப்பா :-)

சொல்லுங்க...

மரத்தடியில் நீங்கள் இந்த அறிவிப்பைச் செய்தவுடன் நானும் ஏதாவது எழுதலாமென்று ஒரு வலைப்பூ தொடங்கிவிட்டேன். ஒரு அபுக எழுதி வைத்திருக்கிறேன். பாராட்டுதல் மற்றும் பழித்தல்களின் ஒரு பகுதி உங்களைச் சேரட்டும்.
நடராஜன்.

திண்ணை-மரத்தடி போட்டியிலேயே பிச்சு உதறியவர் ஆச்சே நீங்க! ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு