புதன், மே 17, 2006

News & Web Log



சிதறலாய் என் சிந்தையைக் கவர்ந்த சில செய்திகள்/வலையகங்கள்:


  1. பிரேசிலின் சிறைகளை தாதா ஆதரவாளர்கள் கைப்பற்றி காவலாளர்களைப் பிணைக்கைதியாக்கினார்கள்: கூட்டுக் குடும்பமாக இருந்த எட்டு பெரிய தாதாக்களை பிரித்து விட்டார்களாம்; அதனால் ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவினால் கொந்தளிப்பு. சிடி ஆஃப் காட் நிஜத்தில் அரங்கேறுகிறது.

  2. விடாக்கண்டன் அமெரிக்காவிற்கும் கொடாக்கண்டன் க்யூபாவிற்கும் மீண்டும் சதாய்ப்பு: அமெரிக்க கட்டிடத்தில் விடுதலையைக் கவர்ச்சியாக விற்கிறார்கள்; பயந்து போன ஃபிடல் காஸ்ட்ரோ கொடித் தோரணம் கட்டி மறைக்கிறார். (க்யூபா குறித்த முந்தை பதிவு.)

  3. 'Incendiary Circumstances - Amitav Ghosh: புத்தக விமர்சனம் - 1

  4. 'Seeing' By José Saramago: நோபல் பரிசு வென்றவரின் சமீபத்திய புத்தகத்தைக் குறித்த விமர்சனம் (பு.வி. 2)

  5. Chantix™ (Varenicline): நீங்க புகை ஊதுபவரா? பழக்கத்தை விட்டுவிட நினைப்பவரா? இன்னொரு மார்க்கம் சந்தைக்கு வரப்போகிறது.

  6. இஸ்ரேலில் திருமணமானவர்கள் பிரிந்திருக்க வேண்டும்: பாலஸ்தீனியர்களை மணமுடித்தவர்களைப் பிரித்து வசிக்க வைக்கிறது இஸ்ரேலிய நீதிமன்றம் & சட்டம்.

  7. ஜெர்மனியின் ராபின் - ஹூட்: அமெரிக்க டாலர் 150-க்கு சாண்ட்விச்; கூச்சி கைப்பைக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று சம்பாதிப்பவர்களிடம் இருந்து திருடினால் தப்பா?

  8. மோச்சே பழங்குடியினருக்குத் தலைவராக இருந்தவர் பெண்: 1600 வருடங்களுக்கு முந்தைய பெரு நாட்டின் பூர்வகுடியினர் சம்பந்தமான ஆராய்ச்சி.

  9. The Revolution Will Not Be Televised: வெனிசுவேலா நாட்டு அதிபர் ஹூகோ சாவெஸ் குறித்த திரைப்படம். உங்கள் ஊரில் திரையிடுகிறார்களா என்றும் அறியலாம்.

  10. PIRELLI FILM - The Call: பிரேல்லி டயர்கள் தயாரிப்பது தவிர, (Rated Adults Only) நாள்காட்டிதான் இதுவரை கொடுத்து வந்தார்கள். இப்பொழுது நவோமி காம்பெல், ஜான் மால்கோவிச்சுடன் திரைப்படம். இணையத்திலேயேப் பார்க்கலாம் (திரைப்படம் சைவ விளம்பரம்தான்; தைரியமாகக் குடும்பத்தோடு பார்க்கலாம்)

  11. FREE Gas Help.com: அமெரிக்காவில் இலவசமாய் பெட்ரோல் பெறுவது எப்படி?






| |

2 கருத்துகள்:

//The US messages are diverse. There is cheeky commentary: zany musician Frank Zappa opining that ''communism doesn't work because people like to own stuff." There are biting observations, such as George Orwell's satirical take on communism from ''Animal Farm": ''All animals are equal, but some animals are more equal than others." And there are lengthy document dumps, such as the UN United Nations' Universal Declaration of Human Rights, with lines such as ''Everyone has the right to leave any country, including his own, and to return to his country."//

Nice!! :-)

The irony, of course, is that you can have billboards along similar lines and messages with equal bite about the US of A.

ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பார்களே :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு