செவ்வாய், மே 02, 2006

Product Positioning

(c) Purina Dog Food

சன் டிவியில் திமுகவும் உதயசூரியனும்

1. 'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சிக்கு பதிலாக திமுக தலைவர்களுடன் பேட்டி ஒளிபரப்பபாகிறது. முக ஸ்டாலின் பேட்டியில் சொன்ன குட்டிக் கதை:

'வீட்டைத் திருட வந்தவன் காவல் நாய்க்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் போடுகிறான். நாய் யோசிக்க ஆரம்பித்தது. நாலரை வருஷமா இந்த வழியாகத்தான் தினசரி போய் வருகிறான். என்றுமில்லாமல், திடீரென்று ஏன் இந்த பாசம்? எதற்கு பிஸ்கெட் போடுகிறான்? பொதுமக்கள் யோசிப்பாங்க... கடந்த நாலரை வருஷம் இல்லாமல் எப்படி இன்று மட்டும் இலவசத் தீனி கொடுக்கிறான்? என்று சிந்திக்கணும்'

குயுக்தி: நாலரை வருஷம் முன்னாடி இருந்தவன் திடீரென்று இந்த வழியா வந்திருக்கான்... தடாலடியா இலவச ஃப்யூரினாவை எதற்காக ஆசை காட்டுகிறான்?


2. தேர்தல் கூட்ட சன் செய்தி ஒளிபரப்பில் கருணாநிதியின் உரை:
'நான் என்பது திமுக ஆட்சியில் இருக்காது. நாம் என்பது மட்டுமே ஒலிக்கும்! நமக்கு எது நன்மை தரும், நாம் எப்படி உயர்வோம் என்று பொதுநலனை முன்வைப்பது திமுக கூட்டணியின் கொள்கை'

குயுக்தி: நாம் என்றால் தயாநிதியும் ஸ்டாலினும்தானே?


3. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை மட்டுமே டாஸ்மாக் (Tamil Nadu State Marketing Corporation) விற்பதன் மூலம் தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கான நஷ்டம்.

குயுக்தி: மிடாஸ் போன்ற புதிய நிறுவனங்களை அதிமுக அரசு கை கொடுத்து வளர்த்து விடுவதை திமுக வெறுக்கிறது.


4. கே டியில் ஒளிபரப்பான 'மௌனம் சம்மதம்' படத்தில் ஓரளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாரின் காட்சிகள் முழுவதுமாக வெட்டப்பட்டது.

குயுக்தி: நல்லவேளை! 'நட்புக்காக' திரையிடவில்லை. விஜயகுமார், சரத்குமார், சிம்ரன் எல்லோர் நடித்த காட்சிகளும் நீக்கியிருப்பார்களே...


5. முன்பெல்லாம் கால் கடுக்க நின்று கொண்டோ, தரையில் அமர்ந்தோ தேர்தல் பேச்சுக்களை கேட்க வேண்டும். மக்களை மதித்து இருக்கைகள் போட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

குயுக்தி: வீட்டில் உட்கார்ந்துகொண்டே கச்சிதமாக படத்தொகுப்புடன் முக்கியமான கருத்துக்களை மட்டும் 'தங்க வேட்டை' நடுவே தடங்கலுக்கு வருந்தாமல், தடாலடியாக பிரச்சார ஒளிபரப்பும்போது, எதற்கு வேகாத வெயிலில் தேர்தல் கூட்டத்துக்குப் போக வேண்டும்?





| |

1 கருத்துகள்:

// குயுக்தி: நல்லவேளை! 'நட்புக்காக' திரையிடவில்லை. விஜயகுமார், சரத்குமார், சிம்ரன் எல்லோர் நடித்த காட்சிகளும் நீக்கியிருப்பார்களே...

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

பாலாஜி அருமையா சொன்னீங்க. இதே திரைப்படம் ரெண்டு மாசம் முன்னாடி சன்ல வந்துச்சு.. :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு