வெள்ளி, ஜூன் 23, 2006

Absolut Navya Torture

82 குப்பிகளை ஒளிச்சு வச்சிருக்காங்க (ஆட்டத்தை ஏமாற்ற மாதிரிப் படம் கீழே உள்ளது). கொடுக்கப்பட்ட நேரத்தில் என்னால் 20-ஐ மட்டுமே சுட முடிந்தது. உங்களால் அத்தனையும் கண்டுபிடிக்க முடியுமா?

அருமையான போதை ஏற்றும் ஆட்டம். (துப்பு காட்டியவர்)





பாரதிராஜாவை 'கல்லுக்குள் ஈர'த்துடன் மூட்டை கட்டியது போல் 'செண்ட்டி சோகர்' சேரனையும் எப்பொழுதோ இயக்கத்தோடு நிறுத்தி வைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டது :-)





படத்தைப் பாருங்கள்...
கவிதை தாருங்கள்...

என்னோட சின்னஞ்சிறு கதை:

சென்னைக்கு தொலைபேசி.

'என்னம்மா எப்படி இருக்கே?'

'சொல்லுடா... இங்கேயிருந்து என்ன வேணும்?'

'கோபுரம் சீயக்காய் தூள் வேணுமே... போஸ்ட்டில் அனுப்புகிறாயா?'

வாசல் கதவு தடதடத்து அதிர்ந்தது.

'அம்மா... அப்புறம் பேசறேன்.'

ஓடிப் போய் திறந்தேன். கைதானேன்.
தொடர்புள்ள செய்தி: அமெரிக்க நகரில் வானுயர் கட்டிடங்களை தாக்க முயற்சி






| |

3 கருத்துகள்:

இருக்கறதிலேயே பெரிய குப்பி, மூன்று ஏணி சாற்றி வைக்கப்பட்ட முகப்பு சுவரும் அதன் தலைக் கோபுரமும் தான். 82 குப்பி இருக்கும் போல் இருக்கிறது. 52 வரைப்பார்த்தேன் கண் பூத்துவிட்டது

//படத்தைப் பாருங்கள்... //

non-ஆட்டோ 'கிராப்' ?

மாப்பு இதான் புது கெட்டப்பாம் :)

கோவி சார், அப்சொல்யூட் உபயோகித்தால்தான் (ஏற்றிக்கொண்டால்தான் :P) எல்லாமும் தெரியும் :-P

---மாப்பு இதான் புது கெட்டப்பாம் ---

இளசுங்க டேஸ்ட்டு எனக்கு எங்கே நாடி பிடிக்க முடியுது... வயசாயிடுச்சு போல ;-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு