செவ்வாய், ஜூன் 06, 2006

Browse 2.0

Plum: சொந்த சிக்கல்களுக்காக 'தைராய்ட்' எப்படி வரும்? என்ன தீர்வு? இயற்கை மருந்துகள் என்ன? நச்சென்று விளக்கும் வலையகங்கள் எது? தொடர்ந்து அவதிப்படுபவரின் வலைப்பதிவுகள் எவை என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வைத்திருந்தேன்.

பிறிதொருவருக்கும் இந்தத் தேடல் முடிவுகள் இலகுவாக உதவலாம். வலையகத்தில் போட்டு வைத்தால் கூகிளாண்டவரின் முடிவில் நூல் பிடித்தால்தான் உண்டு. தற்காலத்திற்கு ஏற்றவாறு கூட்டுப்புழுவாக உலகோடு பகிர்வது எப்படி...

Plum பயன்படும்.



Sharpcast: என்னுடைய புகைப்படங்களில் சில கேமிராவிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலது வெகு பாதுகாப்பாக backup ஆகி புற கடிவறையில் தூங்கும். மற்றவை காம்பாக்ட்-ஃப்ளாஷ், எஸ்-டி நினைவகம், குறு எஸ்டி, மெமரி ஸ்டிக், என்று ஏதாவதொன்றில் கண்ணாமூச்சி விளையாடும். முக்கியமானவை கணினிக்குள் பதுங்கும்.

இவ்வளவையும் நொடி நேரத்தில் கண்ணாரப் பார்த்து அலுங்காமல் ஒருங்கிணைக்க வேண்டுமா?

Sharpcast பயன்படும்.


JAJAH - web-activated telephony: ஸ்கைய்ப்புடன் கடமுடா வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வில்லன் போல் பாவிக்காமல், ஹீரோ போன்ற சேவையைத் தேர்ந்தெடுக்க விருப்பமா? இந்தியாவிற்கு 0.1361 டாலர் ஆகிறதால், ரிலையன்ஸை விட கம்மியாகக் கொடுப்பதில்லை.

என்றாலும், இஸ்ரேல், இத்தாலி போன்ற நாடுகளுக்கு லோக்கல் கால் போல் பேசவேண்டுமா?

ஜ.. ஜா... பயன்படும்.


Prosper: The online marketplace for people-to-people lending: கடன் கொடுக்க யாருமே இல்லையா? உங்கள் நம்பிக்கைக்கு சான்றுப் பத்திரம் தர மக்கள் க்யூவில் நிற்கிறார்களா? $25,000 வரை கைமாற்றுக் கொடுத்து இடுக்கண் களைகிறார்கள். உங்களிடம் பணம் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய திருப்தியும் கிடைக்கும்; கொஞ்சம் டப்பும் பார்க்கலாம்


Lala - Discover, Listen, Enjoy: கேட்கவேண்டிய அருமையான ஆங்கிலப் பாடல்களின் ப்ட்டியல் பர்ஸை கரைக்கும் என்று பயமாய் இருக்கிறதா? அந்த மாதிரி மாபெரும் இசைத்தட்டு எல்லாமும் இலவசமாக வீடு தேடி வர வேண்டுமா? ஒரே ஒரு டாலர் செலவழித்தால் போதுமானது.

நீங்கள் கேட்டு கேட்டு போரடித்துப் போன ஒலிக்கோப்பைகளை வேண்டுபவர்களுக்குக் க்டாசி விடுங்கள். உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள்... கொடுக்கப்படும்... ஊ... ல... லா...


FilmLoop: என்னிடம் நயாகரா புகைப்படங்கள் ஐம்பது இருக்கும். அழகாக வீடியோவே செய்து விடலாம். காலையில் எப்படி இருக்கும்; ஹெலிகாப்டரில் இருந்து... படகில் இருந்து... வெகு அருகில் இருந்து... இரவில்... எல்லாவற்றையும் கோர்த்து படச்சுருள் ஆக்குவதற்கு வகை செய்கிறார்கள்.

நண்பர்களிடம் கனடாவில் இருந்து எடுத்த மேலும் சில புகைப்படங்கள் உள்ளது. நயாகரா அருகிலேயே இருக்கும் பஃபோலோ ஊர்க்காரரிடம் பனிக்காலப் படங்கள் கிடைக்கும். இவற்றை சொருக வேண்டிய இடத்தில் இட்டு, மற்றவர்களால் செப்பனிடவும் வழி செய்து தருகிறார்கள்.

படம் எல்லாம் எடுப்பது டைம் வேஸ்ட் என்று நினைப்பவரா நீங்க? வாங்க... கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களைப் பார்ப்பதற்கு நீங்கதானே தேவை :-)


Mercora - Music Search and Internet Radio Network: நீங்கள் ஜெத்ரோ டல் பிரியரா? அதே போன்ற கலக்கலான ஆனால் 'டல்' போன்று அதிகம் பிரபலாமாகாத இசைக்குழுக்களையும் பாடல்களையும் மற்றவர்களுடன் பகிர விரும்புகிறீர்களா? நாப்ஸ்டர், வக்கீல், சம்மன் என்று எல்லாம் பயப்படாமல் உங்களுக்கே உங்களுக்கான ரேடியோவைத் தொடங்க விருப்பமா?

Mercora பயன்படும்.

உதவி: Who's Building the Next Web? - Next Frontiers - MSNBC.com



| | |

4 கருத்துகள்:

உபயோகமான பட்டியல். மேதகு வலை மேயருக்கு நன்றிகள்.

//சொந்த சிக்கல்களுக்காக...//

Hope everything's alright...best wishes.

நன்றிகள்.

சில தேவையான தொடர்புகள்.

இணையத்திலேயே கந்துவட்டியா? இணையத்தில் யார்வேணா மார்வாடி ஆகலாம் போல.

/சொந்த சிக்கல்களுக்காக 'தைராய்ட்' எப்படி வரும்?/

??

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு