புதன், ஜூன் 21, 2006

China is democratic: Arundhati Roy

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அருந்ததி ராயை சந்தித்த நிருபர்களிடம் பரபரப்பான துணுக்கை அருந்ததி ராய் பகிர்ந்து கொண்டார்.

'சீனா சுதந்திர நாடு. அங்கு உள்ளே இருப்பவர்கள் தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்பதை அறிந்தே இருக்கிறார்கள். கூகிள் கூட வித்தியாசமாக அரசுக்கு விருப்பமான முடிவுகளை மட்டுமே தருகிறது என்பதை அரசல் புரசலாக அறிவார்கள். அமெரிக்காவிலும் தொலைக்காட்சி இருக்கிறது; சீனாவிலும் ரூபர்ட் முர்டாக் கால் பதித்துள்ளார். இதுவே சீனா முழுக்க முழுக்க மக்களை தளைகளில் இருந்து விடுவித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.'

அங்கிருந்த தமிழ் வலைப்பதிவர், 'அருந்ததி... நீங்கள் 1984-இல்

"I would hate to be thought of as an intellectual"
என்று இந்தியா டுடே நேர்காணலில் சொல்லியிருந்தீர்களே? இப்போது இந்த மாதிரி புத்துணர்ச்சி சிந்தனையை வித்திடுவதன் மூலம் தங்களை அறிவுஜீவியாக்கி விடுவார்களே!?' என்று வினவினார்.

'அது நான் விரும்பாமல் கிடைக்கிற பட்டம். நாம் விரும்பும் விலையை நேரடியாக கார் விற்பவனிடம் சொன்னால், பேரம் படியாது. அதே போல்தான் இந்த 'முற்போக்குவாதி' பட்டமும். நான் உங்களிடம் சென்று 'என்னை இப்படி அழை' என்று சொன்னால், நாமகரணம் இடமாட்டீர்கள். ஆனால், 'எனக்கு இப்படி சொல்வது பிடிக்கவில்லை' என்று சொல்லிப் பாருங்கள்... உளறினாலும் கூட நிச்சயம் பீடத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.' என்றார்.

தொடர்ந்து, 'பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடைபெறப் போகிறது. அவர்கள் என்ன பொருள்முதல்வாதத்தையா பின்பற்றினார்கள்? ஜனநாயகம் தழைக்கிறது என்று சொன்னாலும் டொரொண்டோவிற்கோ, பாரிசுக்கோ, ஜப்பானுக்கோ இது கிடைக்கவில்லை. சைனாவிற்குத்தான் கொடுத்தார்கள்! இது போதுமே?' என்று முடித்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடி பொருத்திய லிமூஸினில் ஏறி இரவு விருந்துக்கு விரைந்து விட்டார்.


தொடர்புள்ள சுட்டிகள் & உதவிய பேட்டி: AlterNet: Arundhati Roy: Back In the U.S.A. | Guardian Unlimited | Guardian daily comment | The western view of the rise of India and China is a self-affirming fiction | வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: அருந்ததி ராய் | India not democratic: Arundhati Roy




| |

22 கருத்துகள்:

What a joke! Arundhathi Roy is fast becoming a parody of herself. Wonder what she thinks about the Three rivers dam in China...

//அங்கிருந்த தமிழ் வலைப்பதிவர், 'அருந்ததி... நீங்கள் 1984-இல்
"I would hate to be thought of as an intellectual"
என்று இந்தியா டுடே நேர்காணலில் சொல்லியிருந்தீர்களே? இப்போது இந்த மாதிரி புத்துணர்ச்சி சிந்தனையை வித்திடுவதன் மூலம் தங்களை அறிவுஜீவியாக்கி விடுவார்களே!?' என்று வினவினார்.//

யாருங்க அந்த தமிழ் வலைப் பதிவர். நீங்களா?

அங்கிருந்த வலைப்பதிவர் நீங்களா என்று நானும் கேட்க நினைத்தேன் அதற்குள் கால்கரி சிவா முந்திடார்!

அப்படியே "எப்படி ஒரே புத்தகம் போட்டு" ஜல்லி அடித்தே பெரிய ஆள் ஆவது எப்படினு கேட்டு சொல்லி இருக்கலாம்.

எனக்கும் ஒரு காலம் வரமலா போகப் போகுது ஏமாந்த பப்ளிஷர் எவனாது மாட்டினா நானும் "God of big things" அப்படினு ஒரு புத்தகம் போட்டு அறிவு ஜீவி ஆகிட மாட்டேன்.

---யாருங்க அந்த தமிழ் வலைப் பதிவர். நீங்களா---

எப்படீங்க கண்டுபிடிக்கறீங்க... க்ளூ கூட எதுவுமே கொடுக்கலியே!

Srikanth, Probably if her thoughts are presented in 'fiction' format, she would be able to better represent her opinions and portray the thought process in a fluent/argumentative way. Then, we will be able to pick her brain in a 'consistent' manner. By sweeping statements and arrogant judgement, it feels like she is a simple attention seeker.

Bala I guess you made up this entire episode,dint you?:-)

But she uttered nonsense when she opposed India's atom bomb testing.At times she can become very funny.She used to say "you know.." umpteen times in interviews and people get so irritated when she does that.

---புத்தகம் போட்டு அறிவு ஜீவி ---

அனுபவத்தில் சொல்கிறேன் வவ்வாலு: '(முக்கியமான/கோர்வையான) புத்தகம் எழுதி முடிப்பது சாதாரணமான வேலை அல்ல; பெண்டு நிமிர்ந்து விடும்; சொல்லப் போனால் நான் பெர்ஃபெக்ஷனிஸ்ட் கூட கிடையாது. இருப்பினும்....'

---guess you made up this entire episode---

என்றாவது உண்மையாகும் என்னும் அதீத நம்பிக்கை இருக்கிறது :P

நன்றி செல்வன் :-)

அருந்ததி ராய் இந்தியா ஒரு ஜனநாயக நாடு அல்ல என்று "கண்டுபிடித்துள்ளார்" என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//
What a joke! Arundhathi Roy is fast becoming a parody of herself. Wonder what she thinks about the Three rivers dam in China...
//

ஸ்ரீகாந்த்,

அவர் அதை எல்லாம் எதிர்க்க மாட்டார். அங்கே உள்ள கிராமத்து மக்கள் தாமாக விரும்பிப் புலம் பெயர்ந்தனர் என்று சொல்வார். நர்மதா அணை கட்டினால் தான் தவறு என்று அழிச்சாட்டியம் செய்வார்.

மொத்தத்தில் இந்தியா முன்னேறினால் இவர்களுக்குப் பிடிக்காது...இவர்கள் தான் இந்திய "intelectuals".

//'சீனா சுதந்திர நாடு. அங்கு உள்ளே இருப்பவர்கள் தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்பதை அறிந்தே இருக்கிறார்கள். கூகிள் கூட வித்தியாசமாக அரசுக்கு விருப்பமான முடிவுகளை மட்டுமே தருகிறது என்பதை அரசல் புரசலாக அறிவார்கள். அமெரிக்காவிலும் தொலைக்காட்சி இருக்கிறது; சீனாவிலும் ரூபர்ட் முர்டாக் கால் பதித்துள்ளார். இதுவே சீனா முழுக்க முழுக்க மக்களை தளைகளில் இருந்து விடுவித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.'//

அன்புள்ள பாபா, இந்த மேற்கோளுக்கான சுட்டி எது என்று சொல்ல முடியுமா?

பாலா: அருந்ததி ராயின் அந்த வாக்கியம் ஒரு intentional hyperbole என்று தெளிவாகத் தெரிவதுபோல்தான் இருக்கிறது - ஜனநாயக நாட்டில் 'ஜனநாயகம் இல்லை' என்று சொல்லக்கூட உரிமை இல்லையா என்ன? ;-) சட்டமற்ற மாநிலங்களையும், இராக்கில் 150000 அமெரிக்கத் துருப்புக்கள் இருக்கையில் காஷ்மீரில் ஏழு லட்சம் படையினரையும் வைத்திருப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறாரே? 'ஜனநாயகம் ஜனநாயகம்' என்று தாமஸ் ஃப்ரீட்மேன் போன்றவர்கள் உருவாக்கும் சித்திரத்திற்குப் பழக்கப்படத் தொடங்கி, 'arrival of the Indian Elephant'ஐச் சிலாகிக்கும் டைம் போன்ற பத்திரிகைகளின் tag-maniaவில் மாற்றுக்கருத்தேயின்றிச் சிக்கிக்கொள்பவர்களுக்குச் சில விஷயங்களை நினைவுபடுத்தவாவது ஆட்கள் தேவை இல்லையா? Talk இருக்குமளவு walkம் இருக்கவேண்டும் என்பது மாதிரியான ஒரு பொதுவான கருத்து அது என்று நினைக்கிறேன். God of Small thingsல் இதேபோன்று ஒரு கேரளத்துக் காமெடியன் குறித்து - he's only deserving the attention he has already created என்று எழுதியிருப்பார் - வேறெங்கோ கூட இதைக் குறிப்பிட்ட நினைவு. இதை எழுதுமளவு சுயபிரக்ஞை ஒரு ஆளால் //'எனக்கு இப்படி சொல்வது பிடிக்கவில்லை' என்று சொல்லிப் பாருங்கள்... உளறினாலும் கூட நிச்சயம் பீடத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.'// என்று இருக்கமுடியுமென்று தோன்றவில்லை - இருந்தாலும், நமக்கென்ன தெரிகிறது!!

Dude, Just for the record, let me confess that my comment above was based on my complete cluelessness about the parodic nature of your post. :-) . While I have my own reservations about AR in general, what I have said here was based on the assumption that the first part of your post was indeed true...

"Comedy is simply a funny way of being serious."
- Peter Ustinov
British actor & writer (1921-2004)

"ஹ்யூமரிஸ்ட் என்பவன் பெரிய கோழை... இதை நான் சொல்லவில்லை. வேற ஒரு பெரிய ஹ்யூமரிஸ்ட் சொல்லியிருக்கிறார். அவர்தான் பி ஜி வோட்ஹவுஸ்.

வாழ்க்கையின் உண்மைகளைக் கண்டு பயந்து எதிர்கொள்ள இயலாமல் கேலி செய்பவனே நகைச்சுவைக்காரன் என்பதே தாத்பர்யம்."
- 'மண்ணாங்கட்டி' பின்னுரையில் சிட்டி

---இது முழுக்க முழுக்க கற்பனை என்று பாஸ்டன்பாலாஜி பதிவிலேயே குறிப்பிட்டிருக்கவேண்டும்---

ஏமாறச் சொன்னது நானா

சன்னாசி ... நன்றி.

ஸ்ரீகாந்த்... குழப்பத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். (நகைச்சுவை/நையாண்டி என்று ஓரத்தில் வகை செய்திருப்பதை பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்; தெளிவாக குறிப்பிடாதது என் தவறுதான்.)

My 2 cents are here
http://notesnowhere.blogspot.com/

Ravi: Notes From Nowhere: Interview with Arundhati Roy- My 2cents

//
வஜ்ரா.. உங்கள் பதிவைப் படித்த பின்புதான், முன்பு பார்த்த சில பேட்டிகளையும் ஒருங்கிணைத்துப் பகிடி செய்யலாம் என்னும் எண்ணம் வந்தது.
//

ஒரு க்ளூ கூட இல்லை...(தமிழ் வலைப்பதிவளர் நேரில் கெட்ட கேள்வி என்று சொல்லும் போதே இடிச்சது...சரி, ஒரு வேளை நேர்லெ கேட்டிருந்தால் சீக்கிரமே செய்தில வரும்ன்னு நெனச்சிட்டேன்..)

நெசமாலுமே...இந்த அம்மா சொன்னாலும் சொல்லியிருக்கும் ன்னு தோணிருச்சுங்க...

any way, nice one...

ரோசாவசந்த்தின்: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! - அருந்ததிக்காக

சன்னாசி,

அது என்னங்க அருந்ததி ராய் என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ரொம்ப கண்மூடித்தனமா நம்பறீங்க?

கஷ்மீரில் ஏழு லட்சம் வீரர்களை நிறுத்திவிட்டு மிச்சம் இருக்கும் வீரர்களை கொண்டு அருனாச்சல பிரதேசம், சிக்கிம், திரிபுரா, ஹிமாச்சலம், குஜ்ராத்,ராஜ்ஸ்தான் அப்புறம் பஞ்சாப் பகுதிகளில் எனத்த கொண்டு போர் செய்வதாம்?

கஷ்மீர் பகுதிகள் காலாட்படையை தான் நிறுத்தமுடியும்.இந்தியாவின் மொத்தம் infanty unitகளை சேர்த்தாலும் எழு லட்சம் வீரர்கள் தேறமாட்டார்கள்.

அருந்ததி ராய் தான் அறிவாளிபட்டம் வாங்க எதையோ சொல்லிகிட்டு இருந்தா அதையை படிக்கிறவங்க இப்பிடியா கொஞ்சம் கூட சொந்த மூலையை பயன்படுத்தாம அதையே வேத வாக்கா நம்புறது?

1984 & Roy??

சமுத்ரா __/\__

அனானி, 1984-ஐ எது கூடப் பொருத்தினாலும் வொர்க்-அவுட் ஆகும் ;-)

BB, did you miss one of my previous comments? If you're publishing that, please delete this. It's not very important, but comments in your other posts are being updated, but not this one; so.....

sannaasi, the only comment I recvd was: Blogger: Post a Comment (which is the earlier one & is visible... did you try it today? Might be blogger issues??) :-(

/அது என்னங்க அருந்ததி ராய் என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ரொம்ப கண்மூடித்தனமா நம்பறீங்க?//

பாலா - பெரிதாய் ஒன்றுமில்லை, மேற்கண்ட கேள்வியைக் கேட்ட சமுத்ராவிற்கு சொன்ன பதில் அது.

முந்தைய பின்னூட்டத்தில் நான் சொன்னது: பாலா: அருந்ததி ராயின் அந்த வாக்கியம் ஒரு intentional hyperbole என்று தெளிவாகத் தெரிவதுபோல்தான் இருக்கிறது.

என்ற ரீதியில் ஏதோ... take home message: COOL DOWN ;-)

இதே ரீதியில் ரோசாவசந்த் தன் பதிவில் தெளிவாகச் சொல்லியிருப்பது போல //ஜனநாயகம் என்ற வார்தைக்கு இன்று நிலவும் இந்திய யதார்தம்தான் பொருளா என்பதை முன்வைத்து தான் பேசியுள்ளார் என்பது குறைந்த பட்ச புத்தியுள்ள எவருக்கும் புரியும்.// என்ற விஷயத்தை பூடமாகச் சொன்னாலாவது மேதாவிகளுக்கு விளங்குமா என்று பார்க்க முயன்றபோதே, இதிலே நீங்கள் சொல்லியிருப்பது காமெடியா சீரியஸா என்று புரியாமல் சகட்டுமேனிக்கு டிஃபால்ட் தாக்கு தாக்கியிருக்கும் பின்னூட்டங்களின் இன்ஸ்டண்ட் காப்பி குழப்படிகளைப் பார்த்து இங்கே சுளுக்கிக்கொண்ட தவடையே இன்னும் சரியாகவில்லை - இதிலே அந்தப் பின்னூட்டம் வராததால் பெரிதாக ஒன்றும் நஷ்டமில்லை, விடுங்கள்!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு