Abu Musab al–Zarqawi
அல் ஜர்காவி இறந்ததை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் 'ஆஹா... ஓஹோ... பலே... பேஷ்... அமர்க்களம்.. என்ன சாதனை... வாவ்... சூப்பர்... நீட்... அது! அப்படி போடு... போட்டுத் தாக்கு... தல!! கலக்கல்... அடுத்து ஒஸாமாதான்... வெற்றி... நொறுக்கிட்டீங்க... பிச்சுட்டீங்க!!!' என்று மிதமாகப் பாராட்டும் சமயத்தில் பா. ராகவனின் 'குமுதம் ரிப்போர்ட்டர்' மாயவலை கட்டுரையில் இருந்து:
அல் காயிதாவின் ஈராக் பிரிவு தளபதி அபூ மூசாக் அல் ஜர்காவி (Abu Musab al – zarqawi) அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்கிற செய்தியால் கடந்த வியாழக்கிழமை செய்திப் பத்திரிகைகள் சாபல்யமடைந்தன. (பலபேர் ஜர்காவியை ஜவாஹிரியுடன் போட்டுக் குழப்பிக்கொண்டு, அல் காயிதாவின் முதன்மைத் தளபதியைச் சுட்டுவிட்டார்கள் என்று அலறினார்கள்!)
மீடியா இத்தனை உரக்கப் பேசுமளவுக்கு ஜர்காவி ஒன்றும் ரொம்பப் பெரிய ஆள் இல்லை. மிகவும் சாதாரணமான லோக்கல் ரவுடிதான். 2004ம் ஆண்டு வரை அவன் பெயர் யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள் ஒசாமா பின்லேடனுக்கே தெரியாது! Tawhid என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி ஈராக்கில் குண்டுபோட்டுக்கொண்டிருந்தவன். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபிறகு ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கலவரங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தபடியால் உள்ளூரில் கொஞ்சம் பிரபலமானான்.
ஈராக்கில் அமெரிக்கப் படையின் ஆட்சிதான் உண்மையில் நடக்கிறது என்கிறபடியால் அல் காயிதாவால் நேரடியாக அங்கே எந்தத் திருவிளையாடலையும் நிகழ்த்தமுடியாத சூழ்நிலை. ஆகவே ஜர்காவியை வாடகைக்கு எடுத்தார்கள். சொல்லிக்கொள்ளும்படி அல் காயிதாவுக்கு இப்போது ஈராக்கில் ஒரு நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் ஜர்காவியையும் அவனது அடியாள்களையுமே on behalf of al qaeda வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். இதனடிப்படையில்தான் ஜர்காவியை அல் காயிதாவின் ஈராக் தளபதி என்று மீடியா சொல்கிறது.
ஆனால் ஜர்காவிக்கு அல் காயிதாவின் தொடர்பும் தரவும் கிடைத்தபிறகு நிறைய நாசவேலைகளைக் குறுகிய காலத்தில் செய்தான் என்பதை மறுக்கமுடியாது. ஜோர்டனிலும் ஈராக்கிலும் பணியாற்றிக்கொண்ட பல பெரிய அமெரிக்க அதிகாரிகளைத் தீர்த்துக்கட்டியது இவனது திருப்பணிகளில் முதன்மையானது. ஈராக்கில் மட்டும் எழுநூறு பேரைப் படுகொலை செய்ததில் ஜர்காவியின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நவம்பர் 2005ல் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் குண்டு வெடித்துப் பலபேர் இறந்த சம்பவம் நினைவிருக்கிறதா? அது ஜர்காவியின் காரியம்தான். ஜோர்டன் நீதிமன்றம் ஜர்காவிக்கு பதினைந்து வருட சிறைத்தண்டனை எல்லாம் விதித்து உள்ளே தள்ளியது. தப்பித்து எப்படி வெளியே வந்தான் என்பதை அவனே ஒரு வாழ்க்கை வரலாறு எழுதியிருந்தால்தான் தெரிந்துகொண்டிருக்க முடியும்!
ஆகவே.....?!
Al Quaeda | al–Zarqawi | தமிழ்ப்பதிவுகள்
நீங்க சொல்ல வரது புரியவே இல்லை ,700 பேரை கொலை செய்த வழக்குகளில் சம்பந்த பட்டவன் என்றும் சொல்றிங்க அப்பரம் அவனெல்லம் சின்ன ரவ்டி என்று சொல்ல வரிங்களா அப்போ பெரிய ரவுடி என்றால் 1000 பேருக்கு குறையாம கொன்று இருக்கனுமா,இங்கேயெல்லம் 2 கொலை வழக்குல மாட்டினாலே பிரபல தாதா என்கிறார்கள் :-))
சொன்னது… 6/21/2006 01:55:00 PM
நியாயமான கேள்வி. என்னிடம் பதில் இல்லை
---இங்கேயெல்லம் ---
எங்கே ;-)
சொன்னது… 6/21/2006 02:02:00 PM
சர்காவியின் அல்-கைதா உறவு பலமானது இல்லை என்பது உண்மைதான். இருப்பினும், ஈராக்கில் அமெரிக்க படைகளை எதிர்த்ததை விட ஷியா-சுன்னி உள்நாட்டுக் கலவரங்களை ் தூண்டி விடும் பணிகளை அதிகம் செய்தவன். ஆகையால், இவனது இறப்பில் ஈராக்கிற்கும் சந்தோஷம், அமெரிக்காவிற்கும் சந்தோஷம், அல்கைதாவிற்கும் அதிக வருத்தமில்லை.
இப்போது புதிதாக 'பதவியேற்றிருக்கும்' அல்-முஹாஜிர் அல்கைதாவிற்கு ரொம்ப வேண்டப்பட்டவன் என்கிறார்கள்...
சொன்னது… 6/21/2006 02:23:00 PM
ஸ்ரீகாந்த்
Aljazeera.Net (Zarqawi successor vows vengeance) தேடல் இன்னும் மேம்பட வேண்டும். நிறையத் தகவல் கொட்டிக் கிடந்தாலும், உருப்படியாக தேட முடிவதில்லை
---vacation-ல தானே இருக்கீங்க---
வழக்கமான வேலையை வழுவாமல் செஞ்சிட்டிருந்தா, வாழ்க்கையே வெக்கேஷன் தானுங்களே ;-)
சொன்னது… 6/21/2006 03:42:00 PM
வாசிக்க அப்படியே பிபிசியிலேயே கேட்டதுமாதிரியே இருக்கிறது ;-) பிபிசியிலே இன்னும் விபரமாகச் சொன்னார்கள்.
இனி நமது மிக்ஸர்
ஜோர்டானிலே அவருடைய இனக்குழு அதிலே எப்படியாக அவர் வளர்ந்தார், சிறைக்குப் போய் அங்கிருந்தே ஆட்சிசெய்தது, அவருக்கும் ஒசாமாவுக்கும் நிகழ்ந்த சந்திப்பிலே ஒசாமாவை இவர் விமர்சித்ததும் பதிலுக்கு அவர் விமர்சித்ததும் உட்பட.
இப்போதைய பூதம் என்னவென்றால், புதிய ஆள் அல்-முஹாஜிர் என்று ஒருவர் இல்லையென்றும் அவர் உளவுஸ்தாபனத்தின் உருவாக்கமென்றும் ஒரு வாதாட்டம் நிகழ்வது. நேற்று PBS News Hour இலே இருவர் வாதாடினார்கள் பாருங்கள். ஒருவர் உளவுஸ்தாபனத்தின் உருவாக்கமென்றார். மற்றவர் "இல்லையே. பழைய ஆப்கானிஸ்தான் முஜாகிதீன்களுக்கான உதவி பற்றிய அமெரிக்கக்குறிப்புகளிலே அப்படியாக ஒருவர் ஒன்றரை தடவை சுட்டப்பட்டிருக்கின்றார்" என்று வாதாடினார்.
எல்லாவற்றுக்கும்மேலாக "The one percent doctrine" எழுதிய ரொன் சச்கைண்ட் நேற்று NPR இலே அவரது புத்தகம் பற்றிப் பேசவந்தவர் ஈராக் யுத்தம் பற்றிக் கொடுத்த விளக்கமும் நேற்று PBS இலே ஈராக் யுத்தத்துக்கு செய்னியும் ரம்ப்ஸ்பெல்ட்டும் சிஐஏயை அழுத்தி பெண்டகனைக் கொண்டுவரப்படுத்தியதை frontline இலே ஒன்றரை மணிநேரம் தந்ததும் கிடைத்தால் கேளுங்கள். பாருங்கள்.
அப்படியே Amy Goodman இன் Democracy Now இனையும் கிடைப்பின் பாருங்கள்.
இத்தனையும் சொல்வது எதற்காகவெனில், அமெரிக்காவிலே இருந்துகொண்டு, அங்கே ஆஹா ஊஹூ என்று ஈராக் செய்திகளுக்கு NBC, CNN, ABC, MSNBC, CBS இனை நம்பினால் அவ்வளவுதான். NY Times, Washington Post இனைக் கொஞ்சம் விட்டுவிடலாம். ;-)
பெயரில்லா சொன்னது… 6/21/2006 04:21:00 PM
----ஈராக் செய்திகளுக்கு NBC, CNN, ABC, MSNBC, CBS இனை நம்பினால் ---
நன்றி அனானி. உங்களை மாதிரி நாலு விஷயம் தெரிஞ்சவங்க எல்லாம் வலைப்பதியாம இருப்பதால்தான், என்னை மாதிரி ஆளுங்களை *மாக்கி விட்டுட்டாங்க போல ;-)
---NPR இலே அவரது புத்தகம் ---
முன்பெல்லம் காரோட்டிக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். நிறைய என்.பி.ஆர். கேட்க முடிந்தது. இப்பொழுது அலுவலில் ம்யூசிகிந்தியாஆன்லைன்.காம் நடுநடுவே கொஞ்சம்தான் எட்டிக் கேட்கிறேன்.
நன்றி!
சொன்னது… 6/21/2006 07:50:00 PM
கருத்துரையிடுக