செவ்வாய், ஜூன் 13, 2006

Karunanidhi Condemns Asin in Anandha Vikadan

அசின் இப்போது இங்கிலாந்துக் கட்சி!

"பிரேசில் பிறவியிலேயே ஃபுட் பால் விளையாடும் திறமையோட பிறந்தவங்கன்னா, இங்கிலாந்துக்காரங்க பிறந்ததுக்கு அப்புறம் அந்தத் திறமையை வளர்த்துக் கிட்டவங்க. ஒரு இங்கிலாந்து ரசிகையா, நான் அந்த நாட்டுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, தனியான பிளேயரா எனக்குப் பிடிச்சது பிரேசிலின் ரொனால்டோ."

விசைப்பொறி பிடித்த முதல்வரின் எழுத்தில் கால்களின் சோர்வும் நெஞ்சில் அலைமோதிய கோபமும் ஒருசேர தட்டிப்பார்க்க... அது நக்கலான பதிவானது. முதன்முதலில் விளையாடிய கால்பந்தை நினைவுகூர்ந்தவர், கடந்த இதழ் ஆனந்த விகடனில் அசின் சொல்லிய விருப்பத்தைக் குறிப்பிட்டு, கடகடவெனத் தன் உணர்வுகளைக் உல்டாவாக்கி விட்டார்.

"'பிரேசில்-பிறவி, ட்ரினிடாட்-திறமை, இங்கிலாந்து-இந்திரன்' என கவிதைத் தமிழில் பேசுகிறார்கள்.

தாய்லாந்துக்குத் தாய்ப்பாலிலேயே திறமை; கோஸ்டா-ரிக்காவினர் கால்களை உதைத்துதான் பிறந்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் காலோடுதான் நடக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் காலணியின் ரப்பர் சோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. பார்வையாளனின் புத்தியைத் உசுப்பிவிடும் வேலை இனியும் வேண்டாம்.

இது ஏதோ டிவியைக் கொடுத்து... மன்னிக்க... பார்த்துவிட்ட காரணத்தால், கடந்த 'பெண்ட் இட் லைக் பெக்கம்' போல சினிமாக் குரல் அல்ல. புத்தம் புதிய 'டாவின்சி கோட்' குரல்தான். படைப்பாளியின் கற்பனைதான்" என்றார் கருணாநிதி.

உலகக் கோப்பையைப் பார்க்கத் துவங்கியதுமே, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் கண் நீர்கட்டிப்போனது. மறுநாள் 4-ம் தேதி காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டைனாவுக்கு எதிராகவும் வசனமெழுப்பி, விகடன் இதழ்களையும் ரொனால்டோ உருவ பொம்மையையும், பெக்கம் போஸ்டருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் அன்று நடந்தாலும், இத்தாலிக்கு எதிராக நடந்த கொடும்பாவி கொளுத்தலை, கலைஞர் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.
'Azzurri-கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு வேதனையில் வாடுகிறார்கள். அவர்கள், அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை (தயாநிதி மாறன் குறுக்கிடவே) ஈராக் போர் ஆதரவாளர்களை எதிர்க்கப் போகிறவர்கள். அவர்களை இந்தப் பிரச்சினையில் உள்ளே நுழைப்பது அன்னை சோனியாவுக்கு மன வருத்தத்தைத் தரும்'
என்று கடிதம் தீட்டியுள்ளார்.| | | |

10 கருத்துகள்:

உலகக் கோப்பையைப் பார்க்கத் துவங்கியதுமே, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் கண் நீர்கட்டிப்போனது. மறுநாள் 4-ம் தேதி காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டைனாவுக்கு எதிராகவும் வசனமெழுப்பி, விகடன் இதழ்களையும் ரொனால்டோ உருவ பொம்மையையும், பெக்கம் போஸ்டருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். ///

என்னங்க இப்படி பண்ணிட்டாங்க.விவரம் தெரியலை போல.ராகுல் காந்தியோட ஆளு அர்ஜென்டினா பொண்ணுங்கறாங்க.இப்படி அவசரப்பட்டு அர்ஜென்டினா கொடும்பாவி எரிச்சா கூட்டணி என்னாறது?

thala..yenna full formla irukeengalaa ?

Boston Sir,

சம்ம கலக்கல், போங்க :)

யாருக்கும் லேசுல புரியக்கூடாதுனு ஒரு பதிவு போடுறதுக்குனே பொறந்துவராங்க சிலர் :-))

இதுல வேற கட்டண சேவையா இருக்க ஒரு தளத்திற்கு தொடுப்பு தரவேண்டியது ,அவங்க என்ன எதுனா சைட்ல கவனிப்பாங்களா உங்கள ? இந்த வலைப்பதிவெல்லாம் உண்மையில் கொஞ்சமாவது பொது அறிவு இருக்க மனிதர்கள் தான் போடுறாங்களானே சந்தேகமா இருக்கு இது போல திரும்ப திரும்ப கட்டண சேவை உள்ள ஒரு தளத்திற்கு தொடுப்பு தராங்க.என்று தான் திருந்துவாங்களோ?

வவ்வால்.... டாலர் செல்வனிடம் கேட்டால் கொடுத்து விடப் போகிறார் ;-)

---இது போல திரும்ப திரும்ப கட்டண சேவை உள்ள ஒரு தளத்திற்கு தொடுப்பு தராங்க.என்று தான் திருந்துவாங்களோ---

உலகம் முழுக்க சமதளச் சமுதாயமாக, சோசலிசம், கம்யூனிஸம், ஸ்டாலினிசம், சகோதரயிஸம், சகாயிஸம், எல்லாம் மலர்ந்து, சொவ்வறை வல்லுநர்கள் எல்லாம் என்று எல்லா நிரலியும் இலவசமாக எழுதுகிறார்களோ...

திரைப்படத்திற்கு வசனம் எழுதும் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகையில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையில் சன்மானம் எதிர்பார்க்கும் படைப்பாளிகள், ஆட்சென்ஸ் காசு பார்க்கும் வலைப்பதிவாளர்கள் எல்லாம் என்று திருந்துகிறார்களோ...

.காம் பதிவு செய்ய $70 கேட்பவர்கள் என்று நிறுத்துகிறார்களோ...

ஆடை, அணிகலன், உறைவிடம், உணவு எல்லாம் என்று இலவசமாகிறதோ...

அன்று...

//உலகம் முழுக்க சமதளச் சமுதாயமாக, சோசலிசம், கம்யூனிஸம், ஸ்டாலினிசம், சகோதரயிஸம், சகாயிஸம், எல்லாம் மலர்ந்து, சொவ்வறை வல்லுநர்கள் எல்லாம் என்று எல்லா நிரலியும் இலவசமாக எழுதுகிறார்களோ...

திரைப்படத்திற்கு வசனம் எழுதும் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகையில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையில் சன்மானம் எதிர்பார்க்கும் படைப்பாளிகள், ஆட்சென்ஸ் காசு பார்க்கும் வலைப்பதிவாளர்கள் எல்லாம் என்று திருந்துகிறார்களோ...//

இதெல்லாம் சரி தான் எப்போ சரினா ஒரு பிளாக்கர் கணக்கு துவங்க உங்க கிட்டே காசு வாங்கும் போதும், ஒரு வலைப்பதிவ படிக்க காசு தரணும்னு நிலை வரும் போதும் ,இது போன்ற காசுப்பறிக்கும் சமாச்சாரம்லாம் வேண்டாம்னு வந்த வலைப்பதிவுல ,எல்லாம் இலவசமா தான் எழுதுறாங்க படிக்கிறாங்க ,அப்படி இருக்கப்போ நேரடியா வலைப்பதிவுல படிக்க வகை செய்யனும் ,இல்லைனா அந்த தகவலை எடுத்து படிக்க தந்திடனும் இரண்டும் இல்லாம ,மொட்டையா ஒரு கட்டண சேவைக்கு தொடுப்பு தந்துட்டு , வரட்டு வாதம் பண்றதால எதுவும் பயன் இல்லை!

---வலைப்பதிவுல ,எல்லாம் இலவசமா தான் எழுதுறாங்க படிக்கிறாங்க---

இந்தக் கட்டுரை 'விகடன்'-இல் வந்த 'பத்தி' அல்லவா?

//திரைப்படத்திற்கு வசனம் எழுதும் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகையில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையில் சன்மானம் எதிர்பார்க்கும் படைப்பாளிகள், ஆட்சென்ஸ் காசு பார்க்கும் வலைப்பதிவாளர்கள் எல்லாம் என்று திருந்துகிறார்களோ...

.காம் பதிவு செய்ய $70 கேட்பவர்கள் என்று நிறுத்துகிறார்களோ...

ஆடை, அணிகலன், உறைவிடம், உணவு எல்லாம் என்று இலவசமாகிறதோ...

அன்று...//

என்னங்க பாலா, திடிரென்று நாயகன் கமல் ரேஞ்சுக்கு போயிட்டிங்க....
அப்ப நீங்க நல்லவரா..... கெட்டவரா.........

வவ்வால்...அந்த மேட்டரை தனியாக காட்டுவது காப்பிரைட் சட்டப்படி தப்போ என்னம்மோ...தனிமடல் கொடுங்க அனுப்பி வைக்கிறேன்..

இட்லி-வடை நிறைய கவரேஜ் கொடுத்திருக்கார்: Idly Vadai - கண்ணகியும் கரடி பொம்மையும

சிவா & ரவி __/\__

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு