Rhetorics, Cliches & Dejavu
Water
தண்ணீர் என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
சமீபத்தில் தீபா மேத்தாவின் 'வாட்டர்' பார்க்க கிடைத்தது. மனதை வெகுவாக பாதித்த படம். சில விமர்சனங்களுக்கு...
ஜான் ஆபிரஹாம் மாதிரி விதவைப் பெண் வாழ்வு கொடுப்போம் என்று யோசித்தது ஒரு காலம். லிஸா ரே போன்று அழகிகள் யாரும் கண்ணில்படவில்லை.
தாமரையிலைத் தண்ணீர் போல் 'ஒட்டி ஒட்டாமல் இரு' என்று ரஜினி பாடியது நினைவுக்கு வருகிறது.
'தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்' என்று சிந்து பைரவியின் சிறந்த பாடல் முணுமுணுக்கலாம்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு இன்று அப்பாக்களுக்கு நுழைவுக் கட்டணம் வாங்க மாட்டோம் என்று பல தீம் பார்க்-கள் அறிவித்திருந்தது. 92 டிகிரி ஃபாரென்ஹீட்டை சமாளிக்க 'தண்ணீர் தொட்டி'யில் ஜலக்கிரீடையின் நடுவே நள்ளிரவில் நட்சத்திரம் ஆகப் போவது நிழலாடியது.
இந்த வாரம் அமைதியான வாரம்.
'அப்பாக்கள் சில பேரு செய்கின்றத் தப்பைத்தான்என்று பாடியதற்கேற்ப 'பாரிஜாதம்' படத்தில் பாக்யராஜ் சொதப்பியிருப்பார் என்று எண்ணினேன். Sun TV திரை விமர்சனத்தில் பல காட்சிகள் 'என்னடா இழுவை... மேட்டருக்கு வாடா' என்று போரடித்தது. இல்லை என்கிறார் இகாரசு.
அடியேனும் அந்நாளில் செய்தேனம்மா!'
'பாலத்திற்கு அடியில் நிறைய தண்ணீர் போயிடுச்சுங்க' என்று Cliche சொல்வது போல் மீண்டும் மீண்டும் சிரிப்பாக மீண்டும் பாலாஜி... பாஸ்டனில் இருந்து.
தமிழ்மணத்திற்கு இது போதாத காலம்.
www.thamizmanam.com is for sale. The package includes the domain and the software. Those interested may write to எகாசி@gmail.com with their proposal.
பஸ்மாசுரசன் வரம் பெற்றவுடன், சோதிக்க சிவனைத் துரத்தின கதையாய், தமிழ்மணத்தை ஒரு கை பார்க்கலாம்; படுத்தலாம் என்று ஓடோடி வந்தால் செண்ட்டி போட்டு பிஸினஸ் டீல் கேட்கிறார்கள். பஸ்மாசுரனால் மோகினி வந்தாள்; என்னாலும் யாராவது வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
அம்மா செண்டிமெண்ட், புரட்சி வீரன் சண்டைக் காட்சி, குத்துப் பாட்டு, திரைக்கதை லாஜிக் என்று செல்லும் தமிழ்மண * வாரங்களில், இப்பொழுது மசாலா நேரம்.
ஆதரவும் அன்பும் ஆலோசனைகளும் கோரும்,
- பாலாஜி
பாஸ்டன்
Water | thamizmanam | தமிழ்ப்பதிவுகள்
ஆதரவு தானே காசா பணமா இந்தாங்க பிடிங்க
என்று கேட்டதால் இவ்வளவும் ஞாபகம் வந்தது தண்ணி என்று கேட்டிருந்தால் என்ன ஞாபகம் வந்திருக்கும்
ஈழநாதன்(Eelanathan) சொன்னது… 6/18/2006 09:32:00 PM
பாஸ்டன் பாலாஜிக்கு எதுக்கு ஆலோசனைகள். புகுந்து ஆடுவீங்களே.
நட்சத்திரவாரத்தில் இன்னும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.
சிறில் அலெக்ஸ் சொன்னது… 6/18/2006 09:35:00 PM
நட்சத்திர பாலாவுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் வாரம் இனிதாகவே அமையும்!
வெளிகண்ட நாதர் சொன்னது… 6/18/2006 09:41:00 PM
சின்ன சந்தேகம் ...எத்தனையாவதுமுறை நட்சத்திரமாகறீங்க?
சிறில் அலெக்ஸ் சொன்னது… 6/18/2006 09:54:00 PM
ஈ.நா., சி.அ., வெ.க.நா., __/\__
------
----எத்தனையாவதுமுறை நட்சத்திரமாகறீங்க---
சாதா விடை: மூன்றுன்னு நெனக்கிறேன் சிறில்
ஸ்பெஷல் விடை: நான் என்று நட்சத்திரமாக இருக்கவில்லை :P
ஸ்பெசல் சாதா: எத்தனையாவதுமுறை நட்சத்திரமாக்கறாங்க என்று கேக்கறீங்களா ;-))
ஊத்தப்பம்: நாள், நட்சத்திரம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையே \:D/
Boston Bala சொன்னது… 6/18/2006 10:19:00 PM
Boston Bala,
இவ்வார தமிழ்மண நட்சத்திரமாக பிரகாசிக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இதுவரை உங்களின் படைப்புக்களைப் படிக்கக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை[கடந்த வாரம் நீங்கள் போட்ட கவிஞர் சுரதா பற்றிய பதிவைத் தவிர].
உங்களின் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
வெற்றி சொன்னது… 6/18/2006 10:28:00 PM
நீங்கள் மசாலா வாரம் என்றாலும் இந்த வாரம் intelligentsia வாரமாக அமையும் எனத் தோன்றுகிறது.புரிகிறதோ இல்லையோ ஜோராக கைதட்டுவோம் :)
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!
மணியன் சொன்னது… 6/18/2006 11:19:00 PM
கலக்குங்க!
உங்க வலைப்பதிவின் பக்கம் இறங்க நிமிடக்கணக்கில் ஆகிறது என்று ஏற்கனவே முறையிட்டிருக்கிறேன். நட்சத்திர வாரத்தில் வாசிப்பதற்கு இலகுவாக இதை கொஞ்சம் கவனிக்க கூடாதா?
ROSAVASANTH சொன்னது… 6/18/2006 11:45:00 PM
வாழ்த்துகள் பாலா சார்.
நட்சத்திர வாரத்தில் ஒரு கலக்கு கலக்குங்க.
பரஞ்சோதி சொன்னது… 6/19/2006 01:53:00 AM
பாலா அண்ணே!
உங்களதில் நான் படிச்சதுலயே பெரீரீரீய்ய பதிவு இதுதான்! :)))
நட்சத்திர வாழ்த்துக்கள்! இதுக்காவது கொஞ்சம் கொசுரு சேர்த்து எழுதுங்க! :)
ilavanji சொன்னது… 6/19/2006 05:45:00 AM
All the best BB.
- Suresh Kannan
பிச்சைப்பாத்திரம் சொன்னது… 6/19/2006 06:09:00 AM
வெற்றி, மணியன், பரஞ்சோதி... மறுமொழிக்கு :-)
ரோசா... சோம்பேறித்தனம்தான் காரணம்; நட்சத்திர வாரத்தில் ஏதாவது கை வைத்து ஏடாகூடமாக ஆகிப் போகிறது. அடுத்த வாரம் +++வ்-ஆக மாற்றி, எளிமையாக்கி விடுகிறேன்.
----உங்களதில் நான் படிச்சதுலயே பெரீரீரீய்ய பதிவு இதுதான்----
இதுதானுங்களே எதிர்பார்த்தது :-) இனிமேல் கவனமாகக் குறைவாக எழுதுவேன் ;-)
---All the best ---
அடப்பாவிகளா :P பரீட்சைக்கு நேரமாச்சு மாதிரி ஆக்கிட்டாங்களே
Boston Bala சொன்னது… 6/19/2006 07:09:00 AM
வாழ்த்துக்கள் பாலா !
வழக்கம்போல் பட்டைய கிளப்புங்க.
-ரவிச்சந்திரன்
Ravichandran Somu சொன்னது… 6/19/2006 08:11:00 PM
ravi... :-)
Boston Bala சொன்னது… 6/19/2006 10:35:00 PM
பதிவைக் காட்டிலும் கீழ்க்கண்ட பின்னூட்டம் சூப்பரப்பூ...
//சாதா விடை: மூன்றுன்னு நெனக்கிறேன் சிறில்
ஸ்பெஷல் விடை: நான் என்று நட்சத்திரமாக இருக்கவில்லை :P
ஸ்பெசல் சாதா: எத்தனையாவதுமுறை நட்சத்திரமாக்கறாங்க என்று கேக்கறீங்களா ;-))
ஊத்தப்பம்: நாள், நட்சத்திரம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையே \:D/ //
தொடர்ந்து கலக்கவும்.
Sud Gopal சொன்னது… 6/20/2006 07:08:00 AM
அன்னியன்: நட்சத்திரத்தில் ஸ்பெசல் சாதா, செட் தோசை என்று வித்தியாசம் பார்க்க அது என்ன அரைத்த மாவா?
சின்னாதாசன்: (அத்திக்காய் ஆலங்காயை ரீ-மிக்ஸில் பாடவும்)
'வாம்மா மா மா...
ரேஷ்மா மா மா... தோசை மா
புளித்த மா... நீயம்மா!'
சிவாஜி தி பாஸ்: 'ஸ்டாரு ஸ்டாருதான்!
தமிழ்மண ஸ்டாருதான்...
இந்த ஸ்டாருக்கேத்த ஸ்டிக்கர் எல்லி தான்?
கட்டு கட்டு காப்பிலட்சுமி
எட்டு பதிவுக்கு மேல நானும் ஒட்டுலட்சுமி!'
ரீப்பிட்டு என்று கேட்டால் தொல்லை தொடரும் :-)
Boston Bala சொன்னது… 6/20/2006 08:57:00 AM
கருத்துரையிடுக