திங்கள், ஜூன் 26, 2006

Sambar Pipeline to be Launched

குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் சாம்பார், ரசத்தை அனுப்பும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ஏன் ஆரம்பிக்கவில்லை என்று ஜெயலலிதா இன்று கேள்வி எழுப்பினார்.

"நியாயவிலைக் கடை மூலம் ரேஷன் பொருட்களில் குறைந்த விலையில் அரிசி மட்டுமே தற்போது கிடைக்கிறது. சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற பிற மளிகை சாமான்களுக்கு மானியம் வழங்கினாலும் ஏழை மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு விற்கப்படுவதில்லை.

அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வென்றால், லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மொத்த சமையலையும் அனுப்ப வகை செய்யும்" என்றார் செல்வி ஜெயலலிதா.

சத்துணவுக்கு ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் டியூசிஎஸ் பொருட்கள் கணிசமாக ஊழலாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, 'குழாயைத் திருகினால் கோழி' என்னும் திட்டம் தன்வசம் இருப்பதாக உட்னடியாக அறிவித்தார்.

அவர் கூறுகையில், இருபது ரூபாய்க்கு கொள்முதலாகும் ப்ராய்லர் கோழிகள், வாடிக்கையாளரிடம் ஐம்பது/அறுபது ரூபாயாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தோல் நீக்கப்பட்ட கோழிகள், குழாய்கள் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட மனேகா காந்தி, கோழிகளுக்கு ஆதரவாக குழாயடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த மாண்புமிகு ஜனாதிபதி அப்துல் கலாம், ரோஹிணி விண்கலத்திலேயே கொஞ்சம் 'வத்தக்குழம்பு' ஈஷிக்கொண்டு உலகை வலம் வந்ததைப் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். 'தொலைநோக்குப் பார்வையுடன் நிலவுக்கும் சாம்பார் கால் வைக்க வேண்டும்' என்று பள்ளிச் சிறுவர்களிடம் இனிமேல் வலியுறுத்தப் போவதாக சொன்னார்.


நிஜ நிகழ்வுகள்: Webulagam : IOC's southern oil pipeline dedicated to Nation! | Chennai-Madurai Petrol pipeline dedicated to nation




| |

27 கருத்துகள்:

பைப் லைன் லே ஓட்டை போட்டுக் காய்களைத் திருடமாட்டாங்கன்றது என்ன உத்தரவாதம்?
அப்புறம் வெறும் சாம்பாரா இருக்குமே:-)

இவ்வளவு ஸ்பீடா யோசிக்கறீங்க!!! (மெய்யாலுமே நிறைய ஆச்சரியம்!!!)

நீங்க கட்சி ஆரம்பிச்சீங்கன்னா, இவணையும் ஒரு தொண்டனாக இணைத்துக் கொள்ள இப்பவே மனுப் போட்டுடறேன் :-D)

சாம்பாரை பைப் மூலம் அனுப்புவது ஒரு நல்லத்திட்டம். இதன் மூலம் தனியாக பைப் மூலம் gas அனுப்பவதைக் கூட நிறுத்தலாம் எனென்றால். அந்த சாம்பாரை சாப்பிட்டு பயனடைந்தவர்களின் ... வேண்டாம் இடக்கர் அடக்கலாமே விட்டுவோம்

----தனியாக பைப் மூலம் gas அனுப்பவதைக் கூட ---

இதைத்தான் இயற்கை (எரி)வாயு என்கிறார்களா :-))) அர்த்த ராத்திரி இப்படி சிரிக்க வைக்கறீங்களே :-)))

hahahahahahahaha

சாம்பாரில் காரம் அதிமாயிடுச்சுன்ன எரிவாயு இடைவெளி வந்து எரி ... ஐயோ நினைச்சா

ஒன்னுமில்ல சிரிப்பூட்டும் வாயு வாகிடப்போகிறது என்று சொல்ல வந்தேன்

குமரன் :-)

லொள்ளு எமகாதகர் அய்யா கோவி கண்ணனாரு

குழாய் மூலம் கோழி திட்டத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். அர்த்த ராத்திரி என்று சொல்லிவிட்டீர்கள்... வேண்டாமே உங்கள் தூக்கத்தை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம் :)

சொல்லுங்கப்பு... தனிப் பதிவாக திருமா, வைக்கோ, இராமதாஸ் ஆகியோரின் கருத்துக்களைப் பேட்டி கண்டு இட்டால் தமிழ் கூறும் நல்லுலகமே திரண்டு வாழ்த்துமே :D

//சொல்லுங்கப்பு... தனிப் பதிவாக திருமா, வைக்கோ, இராமதாஸ் ஆகியோரின் கருத்துக்களைப் பேட்டி கண்டு இட்டால் தமிழ் கூறும் நல்லுலகமே திரண்டு வாழ்த்துமே :D //

நம்ப ஊரில் கோழித் திருடனுங்க ஜாஸ்தி ... நான் அரசியல் வாதிகளைப் பற்றி சொல்லவில்லை ... அவுங்களெல்லாம் அக்மார்க் தங்கம்.

ராமதாஸ் : கலைஞரின் இத்திட்டம் சிறப்பானது. ஆனால் தமிழ் நாட்டுக் கோழிகளை மட்டும் தான் இத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டும்

திருமா : குடிதாங்கி சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. கோழிகள் நாட்டுக் கோழிகளாக இருக்கவேண்டும் என்று சிறுத்தைகள் வழியுருத்தி போராடும்

ஜெ : கோழிகள் அனுப்புவது இருக்கட்டும் ... மாட்டிரைச்சி தின்பவர்களுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்

வாசன் : அன்னை சோனியாவிடம் இத்திட்டத்தை இந்திய முழுவது செயல்படுத்த தமிழக காங்கிரஸ் (என் கோஸ்டி) வழியுருத்தும்

வி,காந்த் : கோழிகளை அனுப்பவது மட்டுமில்லாமல் வீட்டுக்கு வீடு சென்று அதை வெட்டிக் கொடுக்க ஆள் ஏற்பாடு செய்யவேண்டும் . முடியாது என்றால் சொல்லிவிடுங்கள் அதை தேமுதிக வினர் செய்து விடுவார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை. கல்யாண் மண்டபம் வழியாக பைப் செல்வதை மட்டும் தேமுகவினர் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று ம் கூறிக் கொள்கிறேன்.

//இதைத்தான் இயற்கை (எரி)வாயு என்கிறார்களா :-))) //

:-))))

சென்னையிலிருந்து மதுரைக்கு சாம்பார் என்பதைவிட மதுரையிலிருந்து சென்னைக்கு சாம்பார் வருகிறது என்றால் நம்பமுடியும் :))

ஏதோ அதிசயம ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்காங்க. அதையும் கிண்டல் அடிச்சிச்சா?

////பைப் லைன் லே ஓட்டை போட்டுக் காய்களைத் திருடமாட்டாங்கன்றது என்ன உத்தரவாதம்?//
துளசியக்கா, குழாய்ல ஒட்டை போட்ட சாம்பார் தான் வெளியே வரும் காய் வராது. ஹி.... ஹி......

அதுக்குள்ள தூங்கி எழுந்தாச்சா, 7 மணி நேரம் கூட இருக்காதே ?

கலைஞரின் இத்திட்டம் சிறப்பானது. ஆனால் தமிழ் நாட்டுக் கோழிகளை மட்டும் தான் இத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டும்
It should be OBC chicken :)

சரி...எனக்கு ஒரு சந்தேகம்.
இந்த விழாவிற்கும் தயாநிதிக்கும் என்ன சம்பந்தம் .அவர் அனைத்து விழாக்களிலும் இடம் பெறுகிறார்.
Does he like to be photographed always ?

----அதுக்குள்ள தூங்கி எழுந்தாச்சா---

சென்ற பதிவைப் பார்க்க வில்லையா? புது அலாரம் இம்புட்டு வாங்கியிருக்கேனே (அது சரீ... நீங்களும் அதுக்குள்ள எழுந்துட்டீரே :-P ;-)

நாகை சிவா,

---நல்ல காரியம் பண்ணி இருக்காங்க---

இப்படி நக்கல் அடிப்பதன் மூலம் நல்ல விஷயங்கள் மேலும் கவனிப்பைப் பெறுமே :-)

மணியன்,

----மதுரையிலிருந்து சென்னைக்கு சாம்பார் ---

பாயிண்ட்ட புடிச்சுட்டீங்க! கோட்டை (?!) விட்டுட்டாங்களே ஜெயலலிதா :D

நன்மனம் __/\__


பிரபு,

--இந்த விழாவிற்கும் தயாநிதிக்கும் என்ன சம்பந்தம் ---

பட்வாரி கவர்னராக இருந்தபோது எந்த விழா நடந்தாலும், எங்கு கூட்டம் போட்டாலும் வந்து ஆஜராகி விடுவார் என்று கிண்டலடிப்பார்கள். அவரைப் போல் தயாநிதியும் எளிமை + சுளுவாக நெருங்கக் கூடியவர். அவரைக் கூப்பிட்டால் சன் டிவி செய்திகளில் காட்டுவார்கள் என்பதற்காக தயாநிதியை அழைக்கிறார்களா என்பதை சிபிஐ தான் கண்டுபிடிக்க வேண்டும்.

(அதற்கொரு விசாரணை அமைக்கும் கூட்டத்திலும் தயாநிதி தலையை நீட்டி விடுவார் ;-))

அது சரி ... சாம்பார் பைப்லைன்னு செய்தி போட்டுட்டு ... வத்தல் குழம்புன்னு படம் போட்டிருக்கிறீர் ?

சாம்பார் பைப்லைனு என்பது பொதுப்பெயர் (ஜெயலலிதா ஆட்சியில் வைத்த பெயர்).

வத்தக்குழம்பு என்பது இந்தியன் ஆயில் இடத்தில் எளிதாக பொருத்த முடிகிறது + பிராண்ட் நேம் + கலைஞர் ஆட்சியில் பெயர் மாற்றம் ஆனது ;-)

அட என்ன கோவி நீங்க. சொல்லும் போது சாம்பாருன்னு சொல்லணும். எழுதும் போது வத்தக்குழம்புன்னு எழுதணும். அப்புறம் பைப்புல ரச கலரில் தண்ணி வந்தாலும் வரும். அப்போ நான் இதை சொல்லை, அதை எழுதலை இதெல்லாம் பத்திரிகைக்காரன் பண்ணற சதி அப்படின்னு சொல்ல வசதியா இருக்கும்.

அப்புறமா தயாநிதிக்கும் முதல்வருக்கும் எதாவது பிரச்சனையா? ஒரு ஆள்விட்டு தள்ளி நிக்கிறாரு.

வத்தல் குழம்புத்திட்டத்தில் பருப்புத்துவையலை எப்படி பைப்மூலம் அனுப்ப முடியும்... இதைத்தான் வைகோ கேட்க இருக்கிறார்.

//அட என்ன கோவி நீங்க. சொல்லும் போது சாம்பாருன்னு சொல்லணும். எழுதும் போது வத்தக்குழம்புன்னு எழுதணும்.//
அட இது ந(அக்)ல்லா இருக்கே :)

//அப்புறமா தயாநிதிக்கும் முதல்வருக்கும் எதாவது பிரச்சனையா? ஒரு ஆள்விட்டு தள்ளி நிக்கிறாரு.//
இது ஸ்டாலின் சதி

---இது ஸ்டாலின் சதி ---

எனக்கென்னவோ கோவி கண்ணனாரின் சதி போல் தெரிகிறது ;-) உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை??

ஹலோ, சன் நிறுவனத்தின் படத்தை எடுத்துப் போட்டுவிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏன் வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது?
படம் : மாறன் மீடியாவின் சதி :)

----சன் நிறுவனத்தின் படத்தை எடுத்துப் போட்டுவிட்டு ----

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ;-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு