Subramania Saami
மதுரை மாவட்டம். சோழவந்தான் அருகே வைகையாற்றைக் கடந்தால் முள்ளிப்பள்ளம். சின்னக் கிராமம். நுழைந்ததும் இருபுறமும் விரிகிற அக்கிரஹாரத் தெரு. இதில் ஒரு தெருவில் பிறந்து பிரபலாமனவர் சில்லென்ற குரலோடு வளைய வந்த பாடகரான டி.ஆர். மகாலிங்கம். இன்னொரு தெருவில் சரிந்த ஓடும், திண்ணையுமாக சிதிலமாகிக் கிடக்கிறது சுப்பிரமணிய சுவாமியின் பூர்வீக வீடு.
"ஆச்சர்யமா இருக்கு... எங்க முன்னோர்கள் திருமலை நாயக்கர் அரசவையில் வேலை பார்த்திருக்கிறார்கள். அப்பொழுது எங்க குடும்ப முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்தான் சோழவந்தான் பக்கத்திலே உள்ள முள்ளிப் பள்ளத்தில் இருக்கு.
பூணூல் போட என்னை அழைத்தபோது 'எதுக்குப் பூணூல்' என்று கேட்டேன். அதற்குச் சரியான பத்ல் இல்லை. 'நியாயமான காரணம் தெரியாமல் பூணூலைப் போட்டுக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டேன். அதனால் ஏழு வயதிலிருந்து பத்து வயது வரைக்கும் அப்பாவோடு பேசவில்லை. பிறகுதான் அம்மா, எங்களைச் சமாதானப்படுத்தி வைத்தார்கள்" என்கிறார் சுவாமி.
ஒன்பதாவது வகுப்புப் படிக்கும்போது பள்ளித் தலைமை ஆசிரியர் கட்டிட நிதியில் குறிப்பிட்ட பணத்தைக் கையாடல் செய்துவிட்டார் என்று மாணவர்களை அழைத்துப் போராட்டம் நடத்தினதின் விளைவு? தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டார்.
கல்கத்தாவில் உள்ள 'இந்தியன் ஸ்டாஸ்டிகல் இன்ஸ்டிடியூட்'டில் எம்.ஏ. சேர்ந்ததும் அங்கும் சிக்கல். அதன் டைரக்டர் எழுதிய கட்டுரையில் இருந்த தவறுகளைக் குறிப்பிட்டு சுவாமி ஒரு கட்டுரை எழுத, இன்ஸ்டிடியூட்டில் பிரச்சினை ஏற்பட்டு சுவாமிக்குக் கிடைத்து வந்த ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டது.
"அன்றைக்கு ஐஐடி-யில் என்னை அவர்கள் வெளியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு பேராசிரியராகத்தான் இருந்திருப்பேன்" - சு. சுவாமி
நன்றி: நதிமூலம் - மணா (உயிர்மை) - புத்தகம் குறித்த மாலனின் அணிந்துரை
Manaa | Subramaniya Swamy | Tamil Book
//அன்றைக்கு ஐஐடி-யில் என்னை அவர்கள் வெளியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு பேராசிரியராகத்தான் இருந்திருப்பேன்" - சு. சுவாமி//
ஐஐடி மட்டும் அப்படிச் செய்திருந்தால், தமிழ்நாட்டுக்கு எத்தனை பெரிய சேவையாக இருந்திருக்கும்?
சொன்னது… 6/18/2006 10:27:00 PM
பாலா,
வாங்க வாங்க. நீங்கதான் இந்தவார நட்சத்திரமா?
வாழ்த்து(க்)கள்.
சொன்னது… 6/18/2006 10:46:00 PM
ஆனா அவர் செய்யும் காமெடிகளை விட்டுட்டீங்களே....
சொன்னது… 6/19/2006 12:33:00 AM
இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
புத்தர்தான் இயேசுன்னு சு.சாமி சொன்னதாக வந்த செய்தியின் தொடர்ச்சியா இது?
சொன்னது… 6/19/2006 03:09:00 AM
நட்சத்திரமே நான் இப்போதுதான் பார்த்தேன் வாழ்த்துக்கள் வழக்கம் போல நிறைய லிங்க் போட்டு வளமா எழுதுங்க
அன்புடன் கு.கோவிந்தன்:))
சொன்னது… 6/19/2006 03:19:00 AM
paaStan paalaa,
n-atsaththira pathivaaLaraanathaRku vaazththukkaL, ungkaL ezuththukkaLai palveeRu iNaiya thaLangkaLil patiththirukkiReen.
சொன்னது… 6/19/2006 03:22:00 AM
பாஸ்டன் பாலா,
நட்சத்திர பதிவாளரானதற்கு வாழ்த்துக்கள், உங்கள் எழுத்துக்களை பல்வேறு இணைய தளங்களில் படித்திருக்கிறேன்.
சொன்னது… 6/19/2006 03:23:00 AM
is that the native place of your
parents/grand parents ?
பெயரில்லா சொன்னது… 6/19/2006 03:26:00 AM
அன்றைக்கு ஐஐடி-யில் என்னை அவர்கள் வெளியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு பேராசிரியராகத்தான் இருந்திருப்பேன்
Swamy criticised the paper by Dr.Malhabonis, director of ISI.
Dr.Malhabonis was also associated]
with planning commission.Swamy was
opposed to soviet type of economic
planning which was close to the heart of Dr.Malhabonis.It was no
wonder that he fell foul of the
director.Later he did PhD at Harvard University and taught there.
In early 1970s (or was it late
1960s)he returned to India,
joined IIT Delhi.He was
active in politics and was with
Jan Sangh.He was highly critical
of Mrs.Gandhi and her economic
policies and was elected to Rajya
Sabha.Mrs.Gandhi thought that he was a nuisance in Rajya Sabha
as he asked questions and spoke
critical of her socialist policies.
He was critical of the left
too.JNU was a left bastion and left
intellectual were pampered by the
centre.Obviously Swamy was not their darling.He was dismissed from IIT.Although no reason was given it was obvious that the govt. put pressure on IIT-Delhi to dismiss him.
He fought against this and won
a huge amount as salary for
all those years (about 18/20 years) between dismissal
and verdict.
ஐஐடி மட்டும் அப்படிச் செய்திருந்தால், தமிழ்நாட்டுக்கு எத்தனை பெரிய சேவையாக இருந்திருக்கும்?
In any case he would have been
dismissed during emergency.
பெயரில்லா சொன்னது… 6/19/2006 03:40:00 AM
சு சுவாமிக்கு இப்படி ஒரு பக்கமா?
சொன்னது… 6/19/2006 05:28:00 AM
அயோக்கியத்தனங்களை மட்டுமே வாடிக்கையாகச் செய்பவர் நடுவில் காமெடி செய்பவர் எவ்வளவோ மேல்!
விண்மீனுக்கு வாழ்த்துகள், பாபா!
சொன்னது… 6/19/2006 06:44:00 AM
----அயோக்கியத்தனங்களை மட்டுமே வாடிக்கையாகச் செய்பவர் நடுவில் காமெடி செய்பவர் எவ்வளவோ மேல்---
அட... என்னைப் பற்றி சொல்ல வருகிறீர்களோ என்று நெனச்சேன் ;-)
இ.பி, து.கோ, __/\__
ரவி... மற்றவர்கள் சொல்லத் தயங்குவதை, கோமாளியாக்கப் படுவோம் என்று கவலை கொள்ளாமல் சொல்கிறாரே! எனவே, காமெடிக்களை சாய்ஸில் விட்டாச்சு. (இந்தப் பதிவில் மட்டும்தான் :-)
சொன்னது… 6/19/2006 07:13:00 AM
தாணு... புத்தரை பத்து அவதாரங்களுள் ஒன்று என்றார்கள். இது புதுக்கதையாக உள்ளதே...
---வழக்கம் போல நிறைய லிங்க் போட்டு ---
கோவிந்தனாருக்கு குவார்ட்டர் போல், எனக்கு சுட்டி; இல்லாவிட்டால் கீபோர்ட் ஓடாது :-)
---is that the native place of your
parents/grand parents ---
ஆஹா... பாலுத் தேவரைக் கரையேற்றிய பாரதிராஜா மாதிரி, பிரபஞ்ச உணமையையே ஒரே வாக்கியத்தில் முடிச்சுட்டீங்க; 'எங்கிருந்து வந்தோம்; எதைக் கொண்டு வந்தோம்'?
சிறில், கோவி கண்ணன்... மறுமொழிகளுக்கு நன்றிகள்.
சொன்னது… 6/19/2006 07:18:00 AM
வேலைப்பளு காரணமாக தமிழ்மணம் பக்கமே வர முடியவில்லை.
இப்போது தமிழ்மணம் திறந்தால் ஆச்சர்யம்.
இரண்டாம் முறை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.
சொன்னது… 6/19/2006 08:03:00 AM
வாழ்த்துக்கள் பாலா.முதல் நாளே 4 பதிவு போட்டு கலக்கிடீங்க.
சொன்னது… 6/19/2006 09:35:00 AM
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
சொன்னது… 6/19/2006 08:48:00 PM
இசை வித்தகர் ஸ்ருசல், மதுரை நாயகர் தருமி, & எடர்னல் ஸ்டார் செல்வன்... தன்யன் ஆனேன் :-)
சொன்னது… 6/19/2006 10:32:00 PM
நம்மளையெல்லாம் கவனிக்க மாட்டீங்க போல (-:
சொன்னது… 6/19/2006 11:20:00 PM
---இ.பி, து.கோ, __/\__ ---
என்று ஒரு வணக்கம் போட்டு எஸ்கேப் ஆயிட்டேன் :-D) [பனிரெண்டாவது மறுமொழி]
இப்போ பாருங்க...
தேஸிபண்டிட்டின் தமிழக மகளிர் அணித் தலைவர்
சூறாவளி சுற்றுப்பயணத்தில் சிதறிக் கிடைந்த தமிழ் நெஞ்சங்களை ஒருங்கிணைத்த சூப்பர் நியுஜிலாந்தர்...
(சோடா பார்சல் ப்ளீஸ் :-D)
சொன்னது… 6/20/2006 06:26:00 AM
சுனா(சா)மி என்கிற சுப்பிரமணியசாமி கொஞ்ச நாளா சத்தம் காட்டாம இருக்காரே அவர் எங்கே இருக்கார்னு ஒரு சுட்டி தந்து இருக்கலாம் ஒரு வேலை அரசியல் துறவரம் மேற்கொண்டுவிட்டாரா?
அவர "CIA" ஏஜென்ட் சொல்றாங்களே மெய்யாலுமே அவர் ஏஜென்ட் தானுங்களா.
(நான் கூட வவ்வால் மார்க் கொசுவர்த்திக்கு ஏஜென்ட் தானுங்க :-)))
சொன்னது… 6/20/2006 07:31:00 AM
---மெய்யாலுமே அவர் ஏஜென்ட் தானுங்களா---
ஜேம்ஸ் பாண்ட் மாதிரி சு.சுவாமி ;-) [இந்த சி.ஐ.ஏ. வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?!]
சொன்னது… 6/20/2006 08:39:00 AM
கருத்துரையிடுக