Dinamani Stories of the Day
மும்பையில் சிவசேனைத் தொண்டர்கள் கலவரம்: பஸ்ஸுக்குத் தீவைப்பு; சாலைமறியல்: தாதர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் மனைவி மறைந்த மீனாதாயின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். தாதரில் உடல்பயிற்சி நிலையம் அருகே உள்ள கோயிலில் விநாயகர், ஹனுமன் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டதாக பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே கூறினார்.
'இந்தியாவுக்கு எதிராக புலிகள் எப்போதும் செயல்பட்டது இல்லை'- திருமாவளவன் பேச்சு: இந்திய அரசு நினைத்தால் 3 நாள்களில் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். சிங்கள ஆட்சியாளர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்தியாவின் கடல் எல்லையையும், இலங்கையில் திரிகோணமலை பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமித்துவிடாமலும் பாதுகாப்பது விடுதலைப் புலிகள் தான்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி தேரோட்டம் முடிந்தது: தேர் வடம் பிடிக்கச் சென்ற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை நாட்டார்கள் தேரை தொடவிடாமல் தடுத்தனர். அதேபோல, தேர்வடம் பிடிக்கச் சென்ற சிறுமருதூரைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் ராஜா (22) உள்பட 5 தலித்துகளை நாட்டார்கள் தேர்வடம் பிடிக்கவிடாமல் அடித்துவிரட்டினர். இதில் ராஜாவின் சட்டை கிழிந்தது.
பங்காரு லட்சுமணன் தனிச் செயலர் அப்ரூவராகிறார்: தெஹல்கா இணையதள லஞ்சவிவகார வழக்கில் சிக்கிய பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணனின் தனிச் செயலர் சத்தியமூர்த்தி அப்ரூவராக ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் பணத்தை தனக்காக வாங்கவில்லை என்றும் பாஜகவின் நிதிக்காகவே வாங்கமுற்பட்டதாகவும் விசாரணையில் பங்காரு லட்சுமணன் தெரிவித்தார்.
வேலூர் சிறையில் முருகன், நளினி 15-வது நாளாக உண்ணாவிரதம்: முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்திரா (எ) மேகராவுக்கு மத்திய அரசு உடனடியாக விசா வழங்கக்கோரி ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன் (ஜூன்-25) ஞாயிற்றுக்கிழமையிலிருந்தும், நளினி திங்கள்கிழமையிலிருந்தும் (ஜூன்-26) தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இருவரும் தண்ணீர் மட்டும் குடித்து வந்தனர். சோர்வடைந்ததால் முருகன், நளினி ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை குளூகோஸ் ஏற்ற சிறைத் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர்.
Dinamani | Tamil News | தமிழ்ப்பதிவுகள்
கருத்துரையிடுக