ஞாயிறு, ஜூலை 02, 2006

Meera Jasmine - Tirupathi - Non-Hindus

மீரா ஜாஸ்மினுக்கு ரூ. 10,000 அபராதம் :: thats tamil.com: "ரகசியமாக கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்ற 'குற்றத்தை' சரி செய்ய நடத்தப்படும் தோஷ கழிப்பு பூஜைக்காக ரூ. 10,000 தர வேண்டும் என்று நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ராஜராஜேஸ்வர் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு என்ற ஊரில் ராஜராஜேஸ்வர் என்ற பிரபமலான கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பெண்கள் இரவு 8 மணிக்கு மேல்தான் நுழைய முடியும். மேலும், இந்துக்கள் மட்டுமே கோவிலில் வழிபடலாம்.

கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் இந்தக் கோவிலுக்கு நடிகை மீரா ஜாஸ்மின் வந்தார். உடன் இருந்த தயாரிப்பாளர் மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டார். மீரா என்ற பெயரில்தான் அவர் அர்ச்சனையும் செய்தார் என்று கூறி விட்டு மீராவுடன் காரில் ஏறிப் பறந்து விட்டார்.

இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவப் பெண்ணான மீரா எப்படி ராஜராஜேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடலாம் என்று கோவில் நிர்வாகமும், இந்து மத அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த சர்ச்சை குறித்து மீரா ஜாஸ்மின் கூறுகையில்,

சாமி கும்பிட்டதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடவுள்களுக்கு முன்பு எந்த மதமும் இல்லை. அனைத்தும் ஒரு மதம்தான். என்னைப் பொருத்தவரை இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுள் ஒருவரே என்பது எனது நம்பிக்கை.

அந்தக் கோவிலுக்கு ரகசியமாக நான் செல்லவில்லை. இரவு 8 மணிக்கு மேல்தான் அங்கு போக முடியும். நானும் கோவில் தலைமை நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்று விட்டுத்தான் சென்றேன். தங்கக் குடம் காணிக்கையாகக் கொடுத்தேன். வழிபட்டு விட்டுத் திரும்பினேன்.

நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டது இந்து மத விசுவாசிகளுக்க தவறாகத் தோன்றியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மதம் மாறவில்லை. கிறிஸ்தவராகத்தான் இருக்கிறேன்
என்றார் மீரா ஜாஸ்மின்.

இந் நிலையில் மீரா ஜாஸ்மின் வந்து சென்றதால் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்ய சிறப்புப் பூஜை நடத்த வேண்டும். அதற்கான ரூ. 10,000 பணத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும், கோவிலுக்கு வந்து சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீரா ஜாஸ்மினை கோவில் நிர்வாகம் கோரியது.

இதை ஏற்றுக் கொண்ட மீரா ஜாஸ்மின் தனது பிரதிநிதி மூலம் கோவில் கோரிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.இன்று இரவு அல்லது நாளை தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படவுள்ளது. இதில் கேரளாவில் உள்ள பல்வேறு கோவில் தந்திரிகள கலந்து கொள்ளவுள்ளனர்.


Rediff On The NeT: VHP criticises Sonia's refusal to sign visitors' book at Tirupati: "All non-Hindus visiting the Tirupati temple have to sign the visitors' register. This condition was complied with by former Union minister C K Jaffer Sharief when he had darshan of Lord Balaji recently"


இந்து மதத்தை யார் முதிர்ச்சியுடன் பின்பற்றுகின்றனர்?

  • மீரா ஜாஸ்மினின் தெளிவான பதிலும் அபராதத்தைப் பெருந்தன்மையுடன் கட்டிய விதமும் மிகச் சிறப்பாக உணர்ந்து செயல்படுவதை உணர்த்துகிறது.

  • திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செய்கைகள் (வருகைப் பதிவேட்டில் நம்பிக்கை வாக்குமூலம் தரக் கோருவது) பிரபலமானவர்களுக்கு மட்டுமே சர்ச்சைக்குரியது என்றாலும், வரவேற்கத்தக்கது.

  • தளிப்பரம்பு கோவில், பக்கத்திலேயே இருக்கும் ஐயப்பனை பார்த்து, தங்களையும் மாற்ரிக் கொண்டு, சர்வ மத வழிபாட்டுக்கு வேண்டிய வகை செய்யவேண்டும்.

  • சபரிமலை நிர்வாகம், தளிப்பரம்பை பார்த்து தன் பழமையான வழிமுறைகளை காலத்துக்கேற்றவாறு தளர்த்தி, பெண்களும் தரிசிக்குமாறு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்.


    | |

  • 21 கருத்துகள்:

    மீரா (பக்தை)கோவிலுக்குள் போகலாம், ஜாஸ்மின் அதாவது மல்லிகை கோவிலுக்குள் போகலாம், இரண்டும் சேர்ந்து போகக் கூடாதா ? என்ட குருவாயூரப்பா ஈ சோதனை என்ட சோதனை ? :)

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் ;-)

    (சூப்பர் மேற்கோள் எடுத்துக் கொடுத்தற்கு நன்றி வாத்யாரே... அது எப்படி அய்யா ஒன்லைனர் பின்னூட்டங்களிலும் பின்னுகிறீர்; நெடு கவிதைகளிலும் கோட்டை விடாமல் கலக்கறீர் - ரகசியத்தை தனி மடல் பார்சல் இடவும்; நான் மட்டும் சக்ஸஸ் சக்ரவர்த்தி ஆயிடுவேன் :P)

    பாஸ்டன் பாலா அவர்களே,

    ஒவ்வொரு இந்து கோவில்களிலும் தனித் தனியான விதிமுறை இருகிறது. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள முக்கிய பிரகாரத்தில் இந்துக்களைத் தவிர மற்ற மதத்தவருக்கு அனுமதி இல்லை. ஆனால் பக்கதிலேயே அர்சனை டிக்கட் வாங்கும் இடத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு உள்ளே செல்லலாம். அங்கே நடராசர் சிலையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர் ஒரு இஸ்லாமியர்.

    இந்துக்கள் ஏற்றுக் கொண்டு முன்னேறுபவர்கள். சபரிமலை சர்ச்சையில் பின்னூட்ட செஞ்சுரி அடிக்க மல்லுக்கட்டிக் கொண்டு பதிவு போடும் ஆசாமிக்கள் (முக்கியமாக பெரியாரிஸ மத நம்பிக்கை கொண்டவர்கள்) மசூதிகள் பற்றியோ, விவிலியத்தில் பெண்கள் பற்றியோ ஏன் ஒரு பதிவு கூட போடுவதில்லை. (போட்டால் ஆட்டோ வரும் என்கிற பயமா?)

    வஜ்ரா, நன்றி.

    //ரகசியத்தை தனி மடல் பார்சல் இடவும்//
    என்னத்த சொல்ல... தனி நபர் தாக்குதலில் என்னைப் போட்டு ஒருத்தர் தாளிச்சி பொறிச்சி எடுத்துட்டார் :)
    http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_115165919538685250.html

    கடவுளின் பெயரால் மதப் பாகுபாடு பார்ப்பது கட்டாயம் தவிக்கப்படவேண்டிய ஒன்று. மீரா ஜாஸ்மினும் ஒரு மனுஷி தான்.

    //கடவுள்களுக்கு முன்பு எந்த மதமும் இல்லை. அனைத்தும் ஒரு மதம்தான். //
    இது சரி தான்!

    //இந் நிலையில் மீரா ஜாஸ்மின் வந்து சென்றதால் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்ய சிறப்புப் பூஜை நடத்த வேண்டும். அதற்கான ரூ. 10,000 பணத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும், கோவிலுக்கு வந்து சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீரா ஜாஸ்மினை கோவில் நிர்வாகம் கோரியது.//
    10,000-லேயே அவர்களுக்கு பணம் தான் குறி என்பது தெரிகிறது.

    //மசூதிகள் பற்றியோ, விவிலியத்தில் பெண்கள் பற்றியோ ஏன் ஒரு பதிவு கூட போடுவதில்லை. (போட்டால் ஆட்டோ வரும் என்கிற பயமா?)//
    அவர்களின் மத உணர்வுகள் (மட்டும்) புண்படுமாம்.

    Boston Bala, I thought you were the president of Meera Jasmine Fans Club Internaional.Are you not.
    Arrange for a protest march before Indian Consulate in NY and DC.
    Get hold of some senator and arrange for a Senate hearing on
    womens' religious freedom in India.
    Its OK to support MJ even if you have defected to Asin's camp.
    Put smileys please.

    சீனு, __/\__

    ----மசூதிகள் பற்றியோ, விவிலியத்தில் பெண்கள் பற்றியோ ஏன் ஒரு பதிவு கூட போடுவதில்லை---

    இந்தத் தலைப்பில், இண்டு இடுக்கு கூட விடாமல் அலசப்பட்டு விட்டது. எதையாவது எழுத நினைப்பவர்கள், நேரமும் ஆர்வமும் இருந்தால் அதைப் பற்றி பதிகிறார்கள். மற்ற தலைப்பில் வரும்போது பாதுகாப்பு உணர்ச்சியோ அல்லது அயர்ச்சியோ அல்லது பிரச்சினையின் சொந்தத் தாக்கம் இல்லாததாலோ தொடுவதில்லை.

    மீராவின் பெயரை களங்கப்படுத்தும் செய்கைகள் கண்டிக்கப்படுகிறது. Therthal 2006: Meera Jasmine Campaigns for ADMK? என்னும் பொய் பிரச்சாரத்தைப் பார்த்தவுடனேயே களத்தில் குதிக்க இளைஞர்கள் துடித்தனர்.

    மீரா... ஆணையிடு! காத்திருக்கிறோம்!! (செல் சிணுங்குகிறது.. நயந்தாராவிற்கு சிம்புவால் ஏதோ கிசுகிசுவாம்... புறப்படறேன்)
    -would-be வலைப்பதிவு ரிலேசன்ஸ் பதிவர்

    //
    10,000-லேயே அவர்களுக்கு பணம் தான் குறி என்பது தெரிகிறது.
    //

    இது என்ன அநியாயம் மீரா ஜாஸ்மின் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்வதென்றால் ரூ10,000 செலுத்தனுமா ? too expensive வழிபாடு

    I have so many things to say ... but hmmm.

    :)

    //நயந்தாராவிற்கு சிம்புவால் ஏதோ கிசுகிசுவாம்//
    அப்பா நிம்மதி ... கொஞ்சம் பிசகியிருந்தாலும்.. சூப்பர் ஸ்டார் பட்டத்தை காற்றில் பறக்கவிட்டிருப்பீர்கள் ... நல்ல வேலைத் தலைவா, தட்டச்சு பிழையாக - நயந்தாராவுக்கு சிம்புவால் ஏதோ 'சிசு' கிசுன்னு தப்பா அடிக்கலை ... :)

    ---too expensive வழிபாடு ---

    எல்விஸ் ப்ரெஸ்லி The Big Kahuna burger சாப்பிட வேண்டுமென்று விமானத்தைக் கிளப்பி, குறிப்பிட்ட உணவகத்துக்கு சென்று நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் விமானமேறி வீட்டுக்கு வந்துவிடுவாராம்.

    பெருந்தலைகளிடையே இது சகஜமப்பா ;-)

    ----ஏதோ 'சிசு' கிசுன்னு---

    நடத்துங்க :-))))

    ஒரு முன்னாள் பதிவு: E - T a m i l : 1105 அஸினின் வளைவுகள்

    //ஒரு முன்னாள் பதிவு: ஏ - T அ ம் இ ல் : 1105 அஸினின் வளைவுகள்//
    இப்ப வேண்டாம் தூக்கம் கெட்டுடும் .. வார இறுதியில் பார்க்கிறேன்

    //I have so many things to say ... but hmmm.

    :)//
    same here.

    நல்ல பதிவு பாலா

    மீரா ஜாஸ்மின் கோயில் அதிகாரிகளின் அனுமதியுடனே, அவர்களால் மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு செய்திருக்கிறார். பிறகு யாரோ அதைப் பிரச்சினையாக்கிய பிறகே கோயில் அதிகாரிகள் அனுமதி பெற(தர)வில்லை என்று கூறியுள்ளனர்.

    இது வஜ்ராவுக்கு

    ~~
    சபரிமலை சர்ச்சையில் பின்னூட்ட செஞ்சுரி அடிக்க மல்லுக்கட்டிக் கொண்டு பதிவு போடும் ஆசாமிக்கள் (முக்கியமாக பெரியாரிஸ மத நம்பிக்கை கொண்டவர்கள்) மசூதிகள் பற்றியோ, விவிலியத்தில் பெண்கள் பற்றியோ ஏன் ஒரு பதிவு கூட போடுவதில்லை. (போட்டால் ஆட்டோ வரும் என்கிற பயமா?)
    ~~

    வெட்டிப்பயல்: திராவிடன் என்பவன் யார்?
    http://vettipaiyal.blogspot.com/2006/06/blog-post_28.html

    இந்தபதிவில் நான்எழுதிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி

    "திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?

    ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்."

    எங்கள் மதத்தை நாங்கள் விமர்சிக்கிறோம். அடுத்தவன் மதத்தை விமர்சிப்பாயா என்று கேட்பதில் என்ன அர்த்தம் ஐயா

    இந்துக்களில் ஒரு பிரிவினரை ஜாதியின் பெயரால் கோயிலுக்குள் விடுவதில்லை. நம்பிக்கையோடு வழிபடவரும் பிற மதத்தினரையும் விடுவதில்லை. பெண்களையும் தடுக்கிறீர்கள். இவ்வளவும் செய்துவிட்டு மதம் மாறுகிறானே மாற்றுகிறானே என்று புலம்புகிறீர்கள். அவர்களோ எல்லோரையும் வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறார்கள். மரியாதை உள்ள இடத்துக்கு செல்வீர்களா? மதியாதார் தலைவாசலுக்கே போவீரா? கொஞ்சம் மூளையை உபயோகித்து சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது வஜ்ரா.

    Ganesh Prabu

    //
    எங்கள் மதத்தை நாங்கள் விமர்சிக்கிறோம். அடுத்தவன் மதத்தை விமர்சிப்பாயா என்று கேட்பதில் என்ன அர்த்தம் ஐயா
    //

    நீங்கள் எல்லாம் இந்துக்களா?

    ஆம் என்றால் சரி. விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.

    இந்து என்றால் திருடன் என்று சொல்பவர் பேச்சை கேட்டு கைதட்டும் நீங்கள்.

    எங்கே, உங்கள் இந்து தன்மையை "திராவிட தமிழர்கள்" இந்துக்கள் என்று ஒரு பதிவு போடுங்கள்.

    முதல் பாராட்டு என்னுடையது தான்.

    இல்லை என்றால், இந்துக்கள் அவர்கள் வீட்டை சுத்தம் செய்ய கடவுள் நம்பிக்கை இல்லாதவரை அழைப்பதில்லை. அழைக்கவில்லை. தேவையில்லாமல் மூக்கை நுழைக்கவேண்டாம்.

    (பாஸ்டன் பாலா, இந்த விவாதத்தை உங்கள் பதிவில் நீங்கள் விரும்பவில்லை என்றால் இந்த பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம், இது என்றுமே தொடரும் விவாதம்)

    ---இது என்றுமே தொடரும் விவாதம்----

    இந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன் :-)

    (இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை - ஆண் பாவம்)

    //அது எப்படி அய்யா ஒன்லைனர் பின்னூட்டங்களிலும் பின்னுகிறீர்; நெடு கவிதைகளிலும் கோட்டை விடாமல் கலக்கறீர் //

    சித்தனைகளை பதிந்து வைப்பதற்கு எழுத்து ஒரு கலையாக இருப்பதால் எழுதுவதையும் படிப்பதையும் நேசிக்கிறேன்.. கவிதைகள் எழுதுவதற்கு அதிகம் சிரமப்படுவதில்லை .. ரிவர்ஸ் இன் ஜினியரிங் தான். எல்லோரையும் நான் கின்டல் செய்தாலும் - உங்களை மாதிரி தேடிப் பிடித்து அரிய விசயங்களை பதிப்பவர்களைப் பார்க்கும் போது இவர்களால் எப்படி இவ்வளவு விசயங்களை வைத்து எழுத முடிகிறது என்று ஆச்சிரியமாக இருக்கும். ரிவர்ஸ் இன் ஜினியரிங் தெரிவதால் எதாவது ஒன்றை படிக்கும் போது மாற்றிப் போட்டால் அது சுவை ஆகிவிடுகிறது. இது தான் ரகசியம் ... யார்கிட்டையும் மூச்சி விட்டுடாதீர்கள் :)

    பாலா வஜராவின் கேள்விக்கு பதிலாக பின்னூட்டமிட்டேன். அது வெளியிடப்படவில்லை. அது பதிவாகவில்லையோ அல்லது ஒருவேளை இந்த விவாதம் உங்கள் பதிவில் தொடர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் தெரிவிக்கலாம். முதலில் இட்ட பின்னூட்டத்தில் சில மாற்றங்களுடன் இங்கே இட்டிருக்கிறேன்.

    வஜ்ரா சங்கர் அவர்களே

    இந்து என்று அழைக்கப்படும் இன்றைய இந்துத்வாவை அல்லாமல் முருகனை, கிருஷ்ணனை, சிவனை, ஆஞ்சநேயனை வணங்கும் தமிழர்கள்தான் திராவிடதமிழர்களும். இந்து என்ற கருத்தாக்கத்தையல்ல இந்தியக்கடவுள்களை இந்தியமரபின்படி வணங்கும் எளியமரபினை ஏற்பவர் நாங்கள். பேதங்களோ வர்ணவேறுபாடுகளோ இல்லாமல் அனைவரும் கடவுளை வழிபடும் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கிறோமே அல்லாமல் பழிப்பதற்காக அல்ல.

    நீங்கள் கூறும் மஞ்சள் துண்டுக்காரருக்கும் அதற்கான உரிமை உண்டு. வெறும் பெயர்தான் மதத்தின் அடையாளம் என்றால் அவர் இந்துவை திருடன் என்றால் அவரும் திருடன் தான். ஆனால் அதற்கும் மேலான சில விஷயங்களை சிந்திக்க வேண்டும். நம்பிக்கை இல்லாதவன் என்றால்... என்று புறக்கணிப்பதற்கு முன்னால் நம்பிக்கை எதனால் போயிற்று என்றும் சற்று சிந்தியுங்கள்.

    திராவிட தமிழர்கள் இந்துக்கள் என்று பதிவு அவசியமில்லை. திராவிட தமிழர்களின் மதம் தமிழர்மதம். வலைப்பதிவில் உள்ள திராவிட தமிழர்களை அல்ல ஒட்டு மொத்த திராவிடதமிழர்களைக் குறித்தே நான் கூறுகிறேன். எங்கள் தெய்வங்களின் கோயில்களை எல்லா மக்களுக்குமாக மீட்டுத்தர வேண்டியிருக்கிறது. அதற்கு வழியில்லாத போது பெரியார் செய்தததைப்போல கடவுளே இல்லை என்று தான் கூறியாக வேண்டும். அதன் காரணம் குறித்து வெட்டிப்பயல்: திராவிடன் என்பவன் யார்?
    http://vettipaiyal.blogspot.com/2006/06/blog-post_28.html என்ற பதிவின் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறேன்.

    மற்றபடி இந்த மதமும் கடவுள்களும் எங்களுடையவர்கள் தான். சிவனையும், திருமாலையும் வணங்க உங்களுக்குள்ள அதே உரிமை எல்லோருக்கும் உண்டு. எங்கள் வீட்டை நாங்கள் சுத்தம் செய்ய அழைக்கமாட்டோம் என்று கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் அழைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் கடமை அது. உரிமை அது.

    நான் கேட்ட கேள்வி அடுத்தவன் வீட்டில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்பது? அதற்கு பதிலளிக்காமல் என்வீட்டில் என் உரிமையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறீர்கள். இந்த மதவெறி குறித்தே திராவிட ஆரிய என்றெல்லாம் பேச நேருகிறது.

    Ganesh Prabu

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு