வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

Jeyamohan in Thinnai

கள்ளமோ கரைந்தழும்

இரு கலைஞர்கள் : ஜெயமோகன்

இரண்டு நண்பர்கள். ஒருவரின் பெயர் ஜெ.கருணாகர். சுருக்கமாக ஜெ.கெ. முன்னாள் கம்யூனிஸ்ட். 'மன்றத்தில் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள்' இருக்கிறார்கள். முறுக்கு மீசை. பெரிய எழுத்தாளர்.

இன்னொருவர் யுவராஜ். ஞானி போல் தோற்றம். பாவனை. 'ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான்.' என்று கிண்டலுக்கு உள்ளாவார். திருவண்ணாமலை ரமண ஆசிரமம் செல்பவர். ''ஜனனீ ஜனனீ'' பாடுபவர். சுருக்கமாக ராஜா சார்.

Thinnai Jeyamogan Short Fiction on Two Artistes

'ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி' என்னும் பாடல் கேள்விப்பட்டதில்லை. 'ஸ்ரீசக்ரராஜ சிம்மாஸனேஸ்வரி' பாடல் மிகப்புகழ் பெற்றது.

ஜெயமோகன் எழுதினார்் என்பதால் படித்தேன். யாரை குறிப்பால் உணர்த்துகிறார் என்று அறிந்தவுடன் கொஞ்சம் கிளுகிளுப்பும் பரபரப்பும் சேர்ந்தது. அவருடைய நடையில் இல்லாமல், வேறு ஓட்டத்தில் ஓடிய கதை.

நெருங்கியவரின் மரணத்தில் கூட அழ முடியாத நிலை எனக்கு உண்டு. அழுகை வந்திருக்காது. அதற்காக 'பரிவிலோ நேசத்திலோ குறை வைத்தவர்... அதனால்தான் பீறிடவில்லை' என்று விட்டு விடவும் முடியாது. சுந்தர ராமசாமியின் மரணத்தில் ஜெயமோகன் அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சமீபத்தில் படித்த பிரேமலதாவின் (Kombai: Periyaachchi - IV) பதிவு மனதில் ஓடியது.

ஒவ்வொருவர் ஒரு மாதிரி என்று சொல்ல வருகிறாரா? அழாதவனைப் பார்த்து 'ஏன் அழவில்லை' என்று கேட்காதே. அரற்றுகிறவனைப் பார்த்து 'அதீத நடிப்பு எதற்கு? எல்லாருக்கும் அதே துக்கம்தானே!' என்று கட்டுப்படுத்தாதே என்கிறாரா? அல்லது ஜெயகாந்தனுடனும் இளையராஜாவுடனும் திருவண்ணாமலை சென்ற அனுபவத்தில் தன் புனைவைக் கலந்து கொடுக்கிறாரா?

வாசகனுக்கே வெளிச்சம்.


இந்த வாரத் திண்ணையில் தாஜ்:

'இருகலைஞர்கள்' மிகவும் தட்டையாக இருந்தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன்றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. 'கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்' எழுத்து என்பது இதுதானோ என்னமோ!

ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான்.


ஜெயமோகன் நிழற்படம் - நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் - எழுத்தாளர் ஜெயமோகனுடன்!


| |

4 கருத்துகள்:

கதையைப் படிக்க ஆரம்பித்தவுடன் ஜெ.க. யாராகவோ இருக்கலாமோ என்ற ஊகம் மனதில் ஓட ஆரம்பித்தது. ஆனால் கதையோட்டம் அதை நிறுத்திவிடவே கதையில் ஆழ்ந்துவிட்டேன். அருமையாக இருந்தது. ஆனால் ஊகம் தொடர்ந்திருந்தால் கதை தொலைந்துபோயிருக்குமோ என்ற ஐயம் இப்போது வருகிறது.

குமுதத்தில் இருந்து:

Jeyakaanthan - Maanpumigu Manithargal

Ilaiyaraja - Maanbiku Manidhargal

பாபா,

இந்தக் கதையைப் படித்ததும் ஜெ.மோ.வுக்கு ஒரு பெரிய கடிதம் எழுதினேன். அதைப் பகிர்ந்து கொள்வது பற்றிப் பிறிதொரு தடவை யோசிக்கலாம். :-)

நீங்கள் எடுத்துப் போட்டிருக்கிற பகுதிகளைவிடச் சிறந்த வர்ணனைகள் கதையில் உள்ளன. உதாரணமாக, கருவறையில் நிற்கும் மூலச்சிலையின் தனிமை போன்ற விவரிப்புகளைச் சொல்லலாம்.

நான் புரிந்து கொண்டவரையில், இந்திய ஆன்மீகத்தின் பல்வேறு முகங்களில் இருமுகங்களை இக்கதை சிறப்பாகக் காட்டுவதாகக் கூறலாம். குறிப்பிட்டுக் கூறவேண்டுமெனில், ஞான மார்க்கம் (இதைவிடச் சித்த மார்க்கம் என்பது ஜெ.கே.வுக்குப் பொருந்தும்) மற்றும் பக்தி மார்க்கம். ஜெ.கே. ஞான மார்க்கம். ராஜா பக்தி மார்க்கம். இரண்டையும் ஜெ.மோ இக்கதையில் ஊடாடவிட்டுப் பார்த்திருக்கிறார்.

இந்தக் கதை பற்றிய உங்கள் புரிதலும் நீங்கள் எழுதியுள்ளவையும் "தட்டை"யாக இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தோன்றுவதால் வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி இத்துடன் என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். :-)

- பி.கே. சிவகுமார்

-----அதைப் பகிர்ந்து கொள்வது பற்றிப்----

என்னை மாதிரி மக்களுக்காகவாவது அந்தக் கடிதத்தைப் பகிர வேண்டுகிறேன்.

படிக்கவேண்டிய தொடர்புள்ள ஜெயமோகனின் புத்தகத்தைக் குறித்த சுட்டிகள்:

Thinnai: இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை - சோதிப் பிரகாசம்

கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் - ஒரு குறிப்பு

சிவவாக்கியர் திருவாக்கியங்கள்

Thinnai:
அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் ) - பாவண்ணன்

மரத்தடி.காம்(maraththadi.com) - கேள்வி/பதில் -19: "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற தலைப்பை வைக்கும்போது, இடதுசாரிகள் "இந்திய ஞான மரபு" என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, அது தவறான புரிதலில் எழுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜவஹர்லால் நேரு, The Discovery of Indiaவில் "நமது பழைய இலக்கியங்களில் 'ஹிந்து' என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில் ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் 'ஹிந்து' என்னும் சொல் குறிக்கிறது" என்று எழுதியுள்ளதை திரு.சோதிப் பிரகாசம் தன் அணிந்துரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போதும் கூட, "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற தலைப்பே பொருத்தமானது என்று எண்ணுகிறீர்களா? ஆமெனில், ஏன் என்று விளக்க முடியுமா?"

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு