திங்கள், ஆகஸ்ட் 07, 2006

TK-TO Contest: #7 - #18 : Snap Reviews

  • 06/08/06 # 18 உயிர் (இயக்குனர் - சுவாமிநாதன்) ராசுக்குட்டி

    (திரைப்பட விமர்சனம்) மதிப்பெண் - 1.5 / 4

    ஸ்ரீகாந்த்தை சதாய்த்ததற்காக 0.5; சங்கீதா வெறும் கண்களாலும், எல்லை தாண்டாத கவர்ச்சியிலுமே கலக்கியதை கவனித்தத்ற்கு 0.5; காதலர் அறிமுக கற்பனை வறட்சி அவதானிப்புக்கு 0.5; மற்ற நச் விமர்சனங்களுக்கு +1; திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிது என்பதால் -1.


  • 06/08/06 # 17 உறவும் பிரிவும் ராசுக்குட்டி

    (சிறுகதை) மதிப்பெண் - 3 / 4

    அப்பாவின் TVS-50 சத்தத்தை எப்படித்தான் அம்மா கண்டுபிடிக்கிறார்களோ, அம்மா வாசலுக்கு ஓடுவதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

    கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் ஆலோசனை கூறினார். "இதுக்கு மட்டும் வந்துருங்கய்யா" என மனதில் நினைத்துக்கொண்டேன்.

    இனிமையான மெல்லிய விவரிப்புடன் ஒன்றவைக்கிறார். வலைப்பதிவிலே மட்டும் சாத்தியப்படக் கூடிய முடிவுரை கொடுப்பதின் மூலம் சிறுகதை பெருங்கதை ஆகிறது. எழுத்துப்பிழைகள் உண்டு (எல்லோரிடனும்).

  • 04/08/06 # 16 எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை

    (கட்டுரை) மதிப்பெண் - 0 / 4

    அவர்களும் மனிதர்கள் தானே, எல்லோரும் செய்யும் தவறுகளைத்தானே அவர்களும் செய்தார்கள், செய்கிறார்கள் என்றால், நாம் அதை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோரையும் விட எழுத்தாளர்களிடம் அதிகமாய் நல்ல குண நலங்களை எதிர்பார்க்கிறது இந்த உலகம்!

    எழுத்துப்பிழைகள் உண்டு. படிக்கும் வேகத்தில் உறுத்திய ஒவ்வொன்றுக்கும் 0.5 கழிவு போட்டுக் கொண்டேன். (பரிமாரிக்கொள்வதோ, மோசமான், க்விஞர்கள், கூட்டம, குடடையிலிருந்து, த்ங்களின், திருந்துபவரகளாக, எழுதவாள், பகமையுமில்லை, பைய்யன்)


  • 04/08/06 # 15 ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 14 நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 13 இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 12 தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 11 உறவுகள் என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 10 அவரகளும் நம் உறவினர்களே... என்.சுரேஷ், சென்னை

  • 04/08/06 # 7 உறவுகள் என்.சுரேஷ், சென்னை

    (புதுக்கவிதை) மதிப்பெண் - ? / 4

    16 + 6 ==> 22 பதிவுகள். கவிதையின் அழகு தலைப்பில். உறவு என்னும் வார்த்தை #13-இன் தலைப்பில் மட்டும் இல்லை என்று என்னால் விமர்சிக்க முடியுமளவு மழை பொழிந்திருக்கிறார்.

    லெபனானியர் பெருமளவில் இறந்திருக்கிறார்கள். ஹிஸ்பொல்லா பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்று செய்தியை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. அதே போல், சுரேஷ் நிறைய கவிதை எழுதியிருக்கிறார். சிறப்பாக அமைந்திருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாது. பொறுமையாகப் படித்துவிட்டு வருகிறேன்.



  • 04/08/06 # 9 உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 2 / 4

    வைரமுத்துவின் எளிமை வாசம் வீசுகிறது (ஆங்கிலப் பயன்பாட்டிலும்) கவர்ச்சியான கட்டமைப்புக்கு ஒரு மதிப்பெண். பதிவாளரின் தட்டச்சை முடக்கும் அளவு ஒற்றுமைகளை அள்ளி வீசாமல், முடுக்கும் அளவோடு நிறுத்திவிட்டதற்காக மற்றொன்று.

  • 04/08/06 # 8 நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் வள்ளி (yezhisai)

    (சொந்தக்கதை) மதிப்பெண் - 1.5 / 4

    அவசரமாக ஓடுகிறது. உறவுகள் என்னும் போட்டி எழுவாய்க்கு ஏற்ப நிறைய பெயர்களை அறிமுகம் வைக்கிறார். சிலரை மட்டும் வைத்து, முக்கிய மாந்தர்களின் குணாதிசயங்களை விவரித்திருந்தால், சுவாரசியமான உறவினர்களை அறிந்திருக்க முடியும். எழுத்துப்பிழைகள் உண்டு.


    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

  • 4 கருத்துகள்:

    // 04/08/06 # 9 உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் - 2 / 4

    வைரமுத்துவின் எளிமை வாசம் வீசுகிறது (ஆங்கிலப் பயன்பாட்டிலும்) கவர்ச்சியான கட்டமைப்புக்கு ஒரு மதிப்பெண். பதிவாளரின் தட்டச்சை முடக்கும் அளவு ஒற்றுமைகளை அள்ளி வீசாமல், முடுக்கும் அளவோடு நிறுத்திவிட்டதற்காக மற்றொன்று.//

    ஆத்தா நான் பாஸாயிட்டேன்...

    பாலா,
    நன்றி. கதையைப் படிததற்கு. எனக்கே நான் ,
    இந்தக் கதையைப் படிக்கும் போது இப்படி ஓட வேண்டாமே
    என்று தோன்றியது.
    நடை எளிமையாகவும், சுவையாகவும் எழுதி இருக்கலாம்.
    என் பெண் படித்துவிட்டு ஒரே கன்ப்ஃயுஷன் என்று விட்டாள்.

    வள்ளி & சிவமுருகன், வருகைக்கும் மறுமொழிக்கும் __/\__

    விமர்சனங்களுக்கு நன்றி பாலா, ஆமா அங்கங்க தேன்கூடு போட்டிக்கு படைப்பவர் பெயரே போடக்கூடாதுன்னு பேச்சுருக்கே... இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பரவாயில்லயா

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு