வியாழன், ஆகஸ்ட் 03, 2006

Contest : Aug 3 - Quick Takes

#6 சந்திப்பு: உறவுகளின் வேர்! - செல்வபெருமாள்

(கட்டுரை) மதிப்பெண் - 2 / 4

எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது.
...........
இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது.

'குடும்ப உறவுகள் எதை அடிப்படையாக வைத்து அமைகிறது' என்பது அடிநாதம் என்கிறார். முன்வைக்கும் அடிக்கோளுக்கேற்ப, இந்தப் பதிவு போதுமான அளவு உதாரணங்களையும் வாதங்களையும் முன் வைக்கவில்லை. நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்காமல் axiom-கள் மட்டுமே சொல்லிப் போகிறார்.


#7 எண்ணம்: உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - போட்டிக்காக - அபுல் கலாம் ஆசாத்

(மரபுக்கவிதை) மதிப்பெண் - 2.5 / 4

பத்து தடவை கண் இமைப்பதற்குள் என்னால் நூறு மீட்டர் ஓட முடியாது; நீச்சல் தெரியாது; 72 மணி நேரத்தில் தொடர்ந்து 33 திரைப்படங்கள் பார்க்க இயலாது; முயன்றால் ஒருக்கால் நடக்கலாம். தளை தட்டுதா என்று பார்ப்பதற்குக் கூட தெரியாத கட்டளைக் கலித்துறையும் இந்தப் பட்டியலில் சேரும். ஆசாத்திடம் இருந்து மற்றொரு வித்தியாசமான முயற்சி. புதுமையான கருத்துக்கள் இல்லாதது முதல் வருத்தம். மரபுக்கே உரித்தான ரசமான உவமைகள் பேணாதது மற்றொரு வருத்தம்.

இரண்டு கையையும் சேர்த்து வைத்து ஆடினாலும், போட்டுக் கொடுத்த பந்தைக் கூட வலையில் படாமல் எதிராளியின் பக்கம் அடிக்கும் டென்னிஸ் ஆட்டத்தை, ஆடிப் பார்த்து, அதன் கஷ்டத்தை உணர்ந்தவுடன், பின்னன்ங்கையால் அநாயசமாக வீசுபவரைப் பார்த்து பொறாமைப்படுவதைப் போல் இந்தப் பதிவுக்கு வாக்களிக்க விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

2 கருத்துகள்:

நன்றிகள் பாலா.

நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு குறைகளும் முற்றிலும் உண்மை.

இனி கட்டளைக் கலித்துறை எழுதும்போது அவற்றைக் களைய முயற்சி செய்வேன்.

அன்புடன்
ஆசாத்

தலீவா... ரசிகனின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்துவதற்கு நன்றிகள் :-D)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு