புதன், ஆகஸ்ட் 02, 2006

Thenkoodu & Tamiloviam : Contest Entry - Quick Takes

தேன்கூடு-தமிழோவியம் நடத்தும் 'உறவுகள்' போட்டியில் பங்குபெற எண்ணம். என்னுடைய இடுகையை போதிய அளவு படிக்கவைக்க வேண்டும். மற்ற பங்காளிகளை விமர்சிப்பதன் மூலம் 'நீ என்ன கிழிச்சுட்டே' என்று படிக்க வைக்கலாம். எதிரிகள் குறைவதாகவும் வருத்தம். அதற்காக சிறு விமர்சனங்களும், மதிப்பெண்களும்

*நவீன விக்ரமாதித்தனும் வைரஸ் வேதாளமும்! (அல்லது) மானங்கெட்ட உறவுகள்!!!! - luckylook

(சிறுகதை) மதிப்பெண் - 1 / 4

சுவாரசியமான ஆரம்பம். குறிப்பால் எவரையாவது சொல்கிறாரா என்று யோசனை வருகிறது. நேற்று சொன்ன 'அழகாய் இ.ப.இ.' திரைப்படம் போல் இரண்டாவது பாதி படு சோகை. புத்திசாலித்தனமான முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் dejavu.


*பொன்னியின் செல்லம்மா ...! - கோவி.கண்ணன்

(சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4

என்னுடைய வாக்கு நிச்சயம் உண்டு. சீரான, பாதை விலகாத நடை. ஒன்றக்கூடிய சம்பவங்கள். மிதமான உரையாடல். முடிவில் பளிச். அதீத உணர்ச்சி சித்தரிப்புகளைத் தவிர்த்தல். நன்றாக வந்திருக்கிறது.


*உறவுகள் - நிர்மல்

(சிறுகதை) மதிப்பெண் - 0.5 / 4

பள்ளியில் முயற்சி செய்திருப்பதற்காக grace mark போடுவார்கள். மோசமான தமிழ்ப்படம் பார்த்த நிறைவு.


*சுகம் - nirmal

(புதுக்கவிதை) மதிப்பெண் - 1.5 / 4

கவிதை படிக்க எளிது. சிறுகதையைப் போல் விபரீத உறவை சுட்டுகிறதா என்பது வாசகரின் எட்டுதலுக்கு உட்பட்டது.


*உறவுகள் - SK

(வசன கவிதை) மதிப்பெண் - 1 / 4

பொங்கல் வாழ்த்துப்பா மாதிரி வந்திருக்கிறது. சொற்பொழிவுத் தாக்கம். சூடான தேநீர் இல்லாவிட்டால், வார்த்தை சிலம்பத்தை பாதியிலேயே கடந்து செல்லும் அபாயம் உண்டு. எழுத்துப்பிழைகள் உண்டு. (நேரேயே?)

வன்மம் வைத்து எனக்கு கத்தியை தீட்டுங்கள் தோழர்களே :-D)

மறுப்புக்கூறு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து இடுகைகளையும் விமர்சிக்க இயலாமல் போகலாம். காரணம் #1: நேரமின்மை; #2: அயர்ச்சி; #3: எதிர் விமர்சனங்களை சந்திக்க திராணியின்மை; #4: சமர்த்துப் போதாமை




| |

14 கருத்துகள்:

//விமர்சிப்பதன் மூலம் 'நீ என்ன கிழிச்சுட்டே' என்று படிக்க வைக்கலாம். எதிரிகள் குறைவதாகவும் வருத்தம். //

More than all these things.. I guess suddenly you have lot of time.. (I see four of my own fingers are pointing me :-D)

Why not finish that research ;)

நான் உங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து 'சர்ச்சை எழலாம்' எனும்படியாக வந்திருக்கும் முதல் பதிவு.

நாலுபேரும் சாந்தமானவர்கலாய் தேர்ந்தெடுத்துள்ளீர்களோ?

---I guess suddenly you have lot of time.---

ஹ்ம்ம்ம்... ஏ.எஸ்.பி.னெட், அட்லாஸ், பி.பி.ஈ.எல் எல்லாம் வா வாங்குது
சி++, விண்டோஸ், யூ.எம்.எல். எல்லாம் போ போங்குது
-------------------------------------------

-----நான் உங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து 'சர்ச்சை எழலாம்' எனும்படியாக வந்திருக்கும்-----

ஏன் எப்பொழுதும் விஜய் மில்டனுக்கு இயக்கத் தெரியவில்லை; ஸ்டான்லி க்யூப்ரிக் புரிகிற மாதிரி எடுக்க மாட்டேங்கிறான்; த்ரிஷாவுக்கு இளிப்பதைத் தவிர வேற என்ன தெரியும்; மணி ரத்னம் காப்பி அடிக்கிறான்; சானியாவுக்கு திறமை போதாது என்று மட்டும் விமர்சித்து சென்று விடுகிறேன் என்னும் எண்ணமாகவும் இருக்கலாம்.

----நாலுபேரும் சாந்தமானவர்----

சாந்தா-வாக இருந்தால் என்ன... அசாதரணமாக இருந்தால் என்ன ;-) பாஸ்டனில் முகவரி கண்டுபிடித்து பூகம்பம் கிளப்பாதவரைக்கும் சௌகரியம்தான் :-)

நல்ல முயற்சி பாலா.This will spice up things a bit ...:-)

//பொன்னியின் செல்லம்மா ...! - கோவி.கண்ணன்

(சிறுகதை) மதிப்பெண் - 2.5 / 4//

ஆனந்த விகடன் குழுமம் மாதிரி 49/100 மார்க்குகளுக்கு மேல் தண்டா மாட்டீர்கள் என்று தெரிகிறது. விமர்சன முடிவில் ஒரே ஒரு பஞ்ச் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

----விமர்சன முடிவில் ஒரே ஒரு பஞ்ச் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.---

சன் தொலைக்காட்சி தலை பத்து பட்டியல் மாதிரி சேரியமாய் செய்தால் அது எல்லாம் தேவை. உள்ளத்தில் பட்டதை உடனடியாக குறிப்பேட்டில் கிறுக்கி வைக்கிறேன்.


----ஆனந்த விகடன் குழுமம் மாதிரி 49/100 மார்க்குகளுக்கு மேல் தண்டா மாட்டீர்கள் ----

விகடன் வி.கு. தங்கள் அபிமான இயக்குநர்/நடிகர் என்றால் வாரி வழங்குவது போல், எனக்கு விருப்பமானவர்கள் பதிவுக்கு 3, 3.5 கொடுக்கு எண்ணம் இருக்கிறது ;-))

கார்த்திக்வேலு நன்றி & __/\__

I'm seriously considering boycotting this blog until the number of Javascripts are greatly reduced.

இன்று இரவு வரைக்கும் பொறுங்க... மொத்தமா மாற்றி விடுகிறேன் :-D

அன்பு பா.பா.
மதிப்பீட்டிற்கு நன்றி.
கூடுமான வரை சரி பார்த்தும், எழுத்துப்பிழைகள் சில கவனிக்காமல் விழுந்துவிட்டன.
இப்போது சரி செய்து விட்டேன்.
நன்றி.

'நேரேயே' என்பது எழுத்துப்பிழையா, இலக்கணப்பிழையா?!! :)

பரிசுக்காக எழுதியதில்லை இது.
என் மனதில் இருந்த சில கருத்துகளையே சொல்ல வந்தேன்.
....தலைப்பு கிடைத்ததும்!

மீண்டும் நன்றி.

----'நேரேயே' என்பது எழுத்துப்பிழையா, இலக்கணப்பிழையா----

ஆஹா... கனிவான திருத்துதலுக்கு நன்றி.

----என் மனதில் இருந்த சில கருத்துகளையே சொல்ல வந்தேன்----

போட்டியின் குறிக்கோள் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். பரிசுக்காக இல்லாமல், எண்ணங்களை எழுத்தாக்கி கலந்துகொள்வதே, பங்குபெறுவோரின் அவா. உங்களின் ஆக்கம் சிந்தையில் கிளைவிட்டு பல பதில்களையும் படைப்புகளையும் உருவாக்குமாறு அமைந்திருப்பதற்கு நன்றி. அதுவே தங்களின் வெற்றி.

Pari...
As promised the scripts remaining are:
1. thamizmanam.com toolbar code
2. mybloglog.com
3. thenkoodu.com comments ping code
4. anniyalogam - Featured post of the day
5. Technorati Search box
6. anniyalogam - Archive Browser
7. Statcounter.com

Removed
1. Google API in-place search box
2. Thenkoodu Badge
3. Open links in separate window option
4. Technorati Favorites Badge
5. ....

The load time problem still exists dues to:
1. Images in the home page
2. Number of posts in the main blog home

(எங்க மேலாளருக்குக் கூட இவ்வளவு அக்கறையாக அன்றாட அறிக்கை சமர்ப்பிப்பதில்லை :-P)

வருகைக்கு நன்றி வர்ஜீனியாக்காரரே :-)

----ஆகா மாத்தி மாத்தி நன்றி சொல்லி
ஓரேடியா அன்பு மழைதான் போங்க.----

என்னுடைய நன்றிகள் :P

(எங்க குலதெய்வம் இ.கொ.வை வேண்டுக் கொண்டு) நீங்க மறுமொழியோடு வரவேண்டுமே ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு